மே நாள்!

தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சிநாள். சிகாகோ தொழிளார்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றியின் 125ஆம் ஆண்டு நினைவு நாள். அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி அவர்களின் பாதையில் போராட சூளுரை ஏற்கும் நாள்.

இன்று இந்த நாளை ஒருதீபாவளி கொட்டாட்டம்போல் புரிந்துகொண்டு சடங்குத்தனமாக கொண்டாடாத கட்சிகளே இல்லை. மேதினத்தை கொண்டாடிய சிலகட்சிகளின் கிளை பொறுப்பாளர்களிடம் “மே தின வரலாறு” என்ன? என்று கேட்டால்“எட்டு மணிநேர மட்டுமே வேலை செய்யும் உரிமை வேண்டி ரஷ்யாவில் (?!!) தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய தினம்” என்கின்றனர். நீங்களும் உங்கள் பகுதியில் மே தினம் என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள. வித்தியாசமான பதில்கள் கிடைக்கலாம்

இன்னும் சில மதவாத கட்சிகளும்கூட மே நாளை கொண்டாடுவதை கண்டேன் அதில் எனது நீண்டகால நண்பர் சார்ந்திருக்கும் கட்சியும் ஒன்று. அவர் முன்பொருமுறை கம்யூனிசம் பற்றி என்னிடம் விவாதித்த பொழுது “எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கனும் என்பது எவ்வளவு பெரிய அபத்தம்; அப்போ என் வீட்டு கக்கூசை யார் கிளீன் செய்வார்” என்று கேட்டவர்தான் இவர். தன் வீட்டுக் கழிவைக்கூட அடுத்தவன்தான் சுத்தம் செய்யனும் என்ற இந்த கழிசடைக் கருத்து இவரிடம் எப்படி ஆழமாகக் குடிகொண்டது என்று நான் யோசித்து முடிப்பதற்குமுன் அவரே அதற்கும் விடையும் சொன்னார் “இதுதான்  இறைவனின் படைப்பென்று”. இதைஅவரிடம் ஆழமாக பதியவைத்துள்ளது அவர் சார்ந்திருக்கும் அமைப்பு. அந்த கட்சிதான் இப்பொழுது மே நாளையும் கொண்டாடுகிறது. இவர்கள் இந்நாளில் தொழிலாளர்களை கூட்டி அவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்கப்போகிறார்கள்?? எல்லாம் பெரும்பான்மை வர்கமாகிய பாட்டாளி வர்கத்தை தக்கவைத்துக்கொள்ளும் தந்திரமே.

மே நாளை கொண்டாடும் இன்னொரு கட்சி நமது தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் கட்சி. இவர்களின் யோக்கியதை என்ன? சென்னையில் நோக்கியா அலை பேசிகளை தயாரிக்கும் பாக்ஸ்கான் எனும் தொழிற்சாலையிலே விசவாயு கசிந்து சில தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது கண்டுகொள்ளாத இவர்கள்சாயிபாபாவிற்கு அஞ்சலி செலுத்த புட்டபர்த்தி விரைகின்றனர்.நடிகனுக்கு ஆயிபோனதிற்கும் அணிதிரள்கின்றனர். இந்நிலையில் இவர்களும் தொழிற்சங்கம் நடத்துகின்றனர். கோவை தேசிய பஞ்சாலையில் தொழிளார்களுக்கு மாநில அரசு ஊதிய விகிதத்திலும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு ஊதியவிதத்திலும் டியர்நெஸ் (Dearness) அலவன்ஸிலும் இப்படி மாநில- மத்திய அரசு விகிதப்படியும் வழங்கப்படுவதை எதிர்த்து புதிய ஜனநாயகத் தொழிலாளர்கள் முன்னணித் தலைமையில் தொழிலாளர்களின் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்க “அப்படி வழங்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை” என்று பின்னுக்கு இழுத்துப்போடும் வேலையை செய்யும் இவர்களும் இன்று மே தினத்தைக் கொண்டாடுகின்றனர். கோவை பஞ்சாலையின் தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் மாநில அரசு அலுவலகமாக இருந்தது. அதனை மத்தியரசு அலுவலகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதே இத் தொழிலாளர்களின் முதற்கட்ட வெற்றியாக உள்ளது.

போராடிப்பெற்ற இந்த நாளை பொறம்போக்கும் கொண்டாடுது. இலங்கையில் மே நாளுக்கு ஒருவாரம்முன்னதாகவே இலங்கை அதிபர் கொலைகாரன்ராஜபக்ஷே அறிவிக்கிறான் “இந்த மே நாளை நாங்கள் நன்றாக கொண்டாடுவோம். ஐநாவின் அறிக்கைக்கு எதிராக அந்நாளில் சூளுரைப்போம்” என்று கொக்கரிக்கிறான்.டெஸ்மா எக்ஸ்மா சட்டமெல்லாம் கொண்டாந்த ஜெயாவின் கட்சியும் கொண்டாடுது மே நாளை.

உழைப்பின் மகத்துவத்தை பறைசாற்றும்மேநாளில்விஜய்  டிவியில் சிறுத்தைஎன்ற திரைப்படம். உழைப்பை மறுத்து திருட்டில் உடலை வளர்க்கும் போக்கிரியை நாயகனாக பொதுபுத்தியில் சித்தரிக்கும் படம். இந்திய தொலைக் காட்சிகளில் முதல் முறையாகஎன்றஅறிவிப்புவேறு. தொழிலாளிகளிடமிருந்து அனைத்தையும் பறித்துக் கொண்டதற்கு ஆதாரமே இப்படம். தொழிலாளர்கள் எழுச்சிநாளாகிய  மே நாளை முதலாளிகள்கூட கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். எல்லா தொலைக்காட்சிகளிலும் முதலாளிகளின் விளம்பர இடைவேளையில், சிறுத்தை, போக்கிரி போன்ற படங்களை மே தின சிறப்பு ஒலிபரப்பு என்று ஒலிபரப்பப்படுகின்றன.

மே நாளில்எல்லோரும் அணிதிரள்வோம். மனிதக் கழிவை மனிதன்தான் அகற்ற வேண்டும் என்ற சிந்தனைக் கழிவை சுத்தம் செய்பவர்களாக, தொழிலாளர்களின் வலியையும், வலிமையையும் உணர்ந்தவர்களாக, தொழிலாளி வர்க்கத்திற்கு அனைத்தையும் உரிமையாக்க பாடுபடுபவர்களாக அணிதிரள்வோம்.

—சண்டாளன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s