தவ்ஹீத் ஜமாத் என்ற இசுலாமிய அமைப்பினர் தங்களைத் தவிர பிற இசுலாமியர்களெல்லாம் உண்மையான முஸ்லீம்கள் இல்லை என்று சாதிக்கின்றனர். தாங்கள் மட்டுமே இசுலாமிய சட்டத்திட்டங்களை கடைபிடிக்கும் ஒழுக்கசீலர்கள் என்கின்றனர். இவ்வரைப்பில் உள்வர்களிடமுள்ள ஒழுக்கக் கேடுகளை அம்பலம்படுத்தினால் ‘மனிதன் தவறு செய்வது இயல்புதான்’ என்று நரம்பில்லா நாக்கை சுழற்றுகின்றனர். அவர்களின் தலைவர்களின் யோக்கியங்களைப் பார்ப்போம். அவைகள் சாதாரண தவறுகளா என்று நீங்களே முடிவு சொய்துகொள்ளலாம்.

 1. தங்களிடமுள்ள குற்றங்களை ஜென்டில்மேன் அக்ரிமென்ட மூலம் மறைத்துக்கொண்டு அமைப்பிலுள்ளவர்களை ஏமாற்றுதல்.
 2. அமைப்பிலுள்ளவர்களின் (பொதுக்குழுவில் உள்ளவர்களின்) பண்பு பற்றிய முன்னணியிலுள்ளவர்களின் யோக்கியமான கருத்துக்கள்.
 3. பொதுக்குழு, நிர்வாகக் குழு, செயற்குழு எதுவானாலும் சுயமான கருத்துக்களை பிரதிபலிக்கக் கூடாது. பிஜே அண்ணன் கூறுவதைதான் கக்கவேண்டும்.
 4. போட்டி வேட்பாளர்கள் என்றெல்லாம் கூறக்கூடாது. இதுதான் உண்மையான ஜனநாயகம்.
 5. சாமானியன் ஜல்சா பண்ணினால் கட்டிவைத்து அடிப்போம். முன்னணியில் உள்ளவர்கள் செய்தால் ஜென்டில்மேன் அக்ரிமெனட் போட்டுக்கொண்டு அமைப்பிலுள்ளவர்களுக்கு பொய் சொல்லி ஏமாற்றுவோம்.

இன்னும் நிறைய நிறைய சொல்லலாம். வீடியோவை பாருங்கள். இந்த வீடியோ 5 மணிநேரம் நீளம் உடையது என்பதால் முடிந்தவரை கருத்துச்சிதையாமல் குறைக்கப்பட்டு பல பிரிவுகளாக ஏற்றப்பட்டுள்ளது.

இந்த வீடியோக்களில் நான் சிலவற்றை மறைத்துவிட்தாக கருதுபவர்கள் இந்த இணைப்பிற்குச் சென்று முழுதாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

https://www.cx.com/mycx/member/zXskZRjxEeGGlBIBOAowtQ

     ‘வின்’ டிவியில் இவர்களின் முதலாளிகள் ஒன்றுக்கு மூன்று என்று திட்டமாக வரையறுக்கப்பட்ட தொகை வாங்க ஒப்பந்தம் போட்டதும் வட்டிதான் .  வட்டியில்லை என்று விசுவாசிகள் வாதிட்டால் வங்கி வாங்கும் அல்லது கொடுக்கும் நூற்றுக்கு 12, 5 என்பது வட்டி என்று கூறுவது ஏன்?

இணைப்புத் தரப்பட்டுள் வீடியோவையும் பாருங்கள்

வட்டி தொர்பாக பிஜேவின் உரை ;

http://www.youtube.com/watch?v=yQowQ6FkN3o

http://www.youtube.com/watch?v=Eh3tQplx0KU

இந்த வீடியோவில் ரியல் எஸ்டேட் தொழில் சூதாட்டம் என்கிறார். ஆனால் பெரும்பாலான இவ்வரைப்பின் முன்னணியாளர்கள் இந்த தொழிலையே செய்கின்றனர். நான் இணைத்துள்ள வீடியோவில் ஒரு ஆதாரமும் உள்ளது.

வீடியோக்களைப் பார்த்துவிட்டீர்களா? மதம் ஒழுக்கத்தையும் நமக்கான வாழ்க்கையையும் தருமா என்று இப்பொழுது சொல்லுங்கள்.

Advertisements

9 thoughts on “TNTJ ஒழுக்க மாண்பும் அக்மார்க் இசுலாமும்.

 1. திருந்தாத ஜென்மங்கள் இந்த ஜமாத்வாதிகள் !!
  தான் செய்தால் தவறில்லை, அடுத்தவன் செய்தால் மட்டும் அல்லாஹ்வை சொல்லி ஏமாற்றுவது.
  தேவையில்லாத விசயங்களை மட்டும் தெருவில் மேடை போட்டு பேசும் ஜமாத்வாதிகள், இதனை மட்டும் ஏன் மண்ணடியில் ரூம் போட்டு பேச வேண்டும்?
  இதுக்கு பேர் தான் ரூம் போட்டு யோசிக்கிறதா ?

 2. இது குறித்து நல்லூர் முழக்கத்தில் விரிவாக ஒரு கட்டுரை எழுதலாம் என எண்ணியுள்ளேன். அப்போது இந்த காணொளி பதிவுகளை பயன்படுத்திக் கொள்ளலாமா?

  1. எக்ஸ் சாகித் நீங்கள் எண்ணிட்டவைகளில் நான்கு வரை உள்ளவை அர்த்தமில்லாதவைகளாக உள்ளன 5///சமானியன் ஜல்சா பண்ணினால் கட்டிவைத்து அடிப்போம். முன்னணியில் உள்ளவர்கள் செய்தால் ஜென்டில்மேன் அக்ரிமெனட் போட்டுக்கொண்டு அமைப்பிலுள்ளவர்களுக்கு பொய் சொல்லி ஏமாற்றுவோம்.///
   கையும் களவுமாக பிடிபட்டால் எல்லோரின் கதையுமொன்றுதான் .நீங்கள் கூற வரும் பாக்கர் மட்டும் நண்பர் நெல்லைசெய்யதுஅலியின் கையில் கிடைத்தால் நிலைமை வேறுமாதிரியாக இருந்திருக்கும் .

   நீங்கள் சில யு டிப்களை வெளியிட்டுள்ளீர்கள் .ஏதோ தங்களுக்கு ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ கிடைத்திருப்பது போல் வெளியிட்டுள்ளீர்கள்.பொது செயலாளர் பாக்கர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க கூடிய தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாநில நிர்வாக கமிட்டியின் கூட்டம் தான் அது. அதில் விசாரிக்கப்படும் நிகழ்வு அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என்று அனைவர்க்கும் தெரிவிக்கப்பட்டு நடந்த விசாரணை.கடந்த 2009 ஜனவரியில் சேலத்தில் நடந்த செயற்குழுவில் வெளியிடப்பட்டு அனைத்து கிளைகளுக்கும் காப்பிகள் கொடுக்கப்பட்ட சிடிக்களைத்தான் இப்போது X.S கொண்டு வந்து டவுன்லோடிங் செய்யும் சமுதாயப்பணி செய்துள்ளார்.நன்றிகள் .இதுபோன்று உலகில் எந்த இயக்கமாவது தனது உயர்மட்ட நிர்வாகியின் குற்றத்தை விசாரித்து ,அங்கு ஆத்திரத்தில் பீஜே மீது எந்த குற்றங்கள் வேண்டுமானாலும் சொல்லமுடியும் என்ற நிலையில் அதை பதிவு செய்து மக்கள் மத்தியில் விநியோகித்ததை நீங்கள் காட்ட முடியுமா?
   ////வின்’ டிவியில் இவர்களின் முதலாளிகள் ஒன்றுக்கு மூன்று என்று திட்டமாக வரையறுக்கப்பட்ட தொகை வாங்க ஒப்பந்தம் போட்டதும் வட்டிதான் . வட்டியில்லை என்று விசுவாசிகள் வாதிட்டால் வங்கி வாங்கும் அல்லது கொடுக்கும் நூற்றுக்கு 12, 5 என்பது வட்டி என்று கூறுவது ஏன்?
   இணைப்புத் தரப்பட்டுள் வீடியோவையும் பாருங்கள்////
   வின் டிவி யில் முதலீடு செய்யப் படும் பொழுது ஒப்பந்தம் செய்யப்படவில்லை .வின் டிவியை விற்கும்பொழுது அதை அதிமுக கூடுதலான தொகைக்கு கேட்டபொழுது அந்த தொகைக்கு விற்றால் முதலீடு செய்தவர்களுக்கு என்ன முறையில் பணத்தை திருப்பிக் கொடுப்பது என்ற விவகாரத்தில் தலியிட்ட பீஜே அவர்கள் விற்பனை தொகையை கணக்கிட்டால் முதலீட்டாளர்களுக்கு ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் திருப்பி கொடுக்கலாம் என்று ஒப்பந்தம் செய்ததாக பீஜே கூறுகிறார்.முதலீடு செய்யும் பொழுதே ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.பீஜே அங்கு கூறுவது முதலீடு செய்யும் பொழுது போடப்பட்ட ஒப்பந்தம் பற்றி பேசவில்லை .குறிப்பிட்ட விலைக்கு விற்றால் எப்படி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பது பற்றித்தான் ஒப்பந்தம் போடப்பட்டது

 3. ##நெல்லைசெய்யதுஅலியின் கையில் கிடைத்தால் நிலைமை வேறுமாதிரியாக இருந்திருக்கும் .##

  பாக்கர் என்ன வெளிநாட்டுக்கு தப்பிஒடி ஒளித்துகொண்டா திரிகிறார்?

  பாக்கரை தலைவர் பிஜே அல்லவா அடிக்கவேண்டும். மாற்றாக ஜென்டில்மேன் அக்கரிமெட் போட்டது பிஜே அய்யா. அதுசரி {ந ந்தினியோடு}விபச்சாரத்தை மறைக்க ஜெனடில்மேன் ஒப்பந்தம் போட்டால் விபச்சாரத்திற்கு துணைபோனதாகதா?

  ##பொது செயலாளர் பாக்கர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க கூடிய தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாநில நிர்வாக கமிட்டியின் கூட்டம் தான் அது.##

  மாநில நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டுவதா அல்லது செய்றகுயுவை கூட்டுவதா அல்லது பொதுக்குழுவை கூட்டுவதா என்று விவாதிப்பதை கவனியுங்கள, அவர்கே தாங்கள் முன்னால் நிர்வாகிகளாக இருந்ததையும் கூறுவதையும் கவனியுங்கள்.

  ##.பீஜே அங்கு கூறுவது முதலீடு செய்யும் பொழுது போடப்பட்ட ஒப்பந்தம் பற்றி பேசவில்லை .குறிப்பிட்ட விலைக்கு விற்றால் எப்படி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பது பற்றித்தான் ஒப்பந்தம் போடப்பட்டது##

  அடுத்த்தாக எவனாவது இலாபம் வராது என்றால் முதலீடு போடவானா என்று ஒருவர்கூறுவதையும், அவரைநோக்கி பாக்கர் உங்களுக்கு எந்த விபரமு தெரியாது என்றும் காசோலையை மட்டும்தான் அனுப்பினீர்கள் என்று கூறுவதையும், முதலீடு போடும்போது போடப்பட்ட ஒப்ந்தம் என்பதை பிஜே போடும்போது கூப்பிட்டீங்கள்ல பிரிக்கும் போது என் கூப்பிடவில்லை என்று கூறுவதையும், கவனியுக்கள.

  இபுராகிம் முழு பூசனிக்காயையும் சோற்றில் அமுக்கி பொய் மூடைடைகளை அவிழ்த்துவிடுவதை என்றைக்கும் நிறுத்தப் போவதில்லை. (வினவில் பாசித்தை விளக்கிவட்டதாக புழுகியுள்தையும் கவனியுங்கள்)

  பிரிக்கும்போதுகூட இலாப நட்ட அடிப்படையில் தானே பங்குதாரர்கள் பிரித்துக்கொள்ளவேண்டும். இலாபமோ நட்டமோ எங்களுக்கு கவலையில்லை. போட்ட பணத்திற்கு 1 க்கு 3 தா என்று கேட்டால் வட்டிதான்.

 4. சாகித் //பாக்கர் என்ன வெளிநாட்டுக்கு தப்பிஒடி ஒளித்துகொண்டா திரிகிறார்?///
  நான் குறிப்பிட்டது பஸ்ஸில் நந்தினியுடன் செல்லுகையில் கையும் களவுமாக செய்யது அலியிடம் மாட்டிக் கொண்டால்,அவர நிலைமை வேறு மாதிரியாக இருக்கும்.ஆனால் அவர் மாட்டியது நாகர்கோவில் சகோதரரிடம்..
  ////பாக்கரை தலைவர் பிஜே அல்லவா அடிக்கவேண்டும். மாற்றாக ஜென்டில்மேன் அக்கரிமெட் போட்டது பிஜே அய்யா. அதுசரி {ந ந்தினியோடு}விபச்சாரத்தை மறைக்க ஜெனடில்மேன் ஒப்பந்தம் போட்டால் விபச்சாரத்திற்கு துணைபோனதாகதா?///
  அந்த அக்ரிமேண்டுக்கு நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டது போல் பேசாதீர்கள்.ஜனநாயக நாட்டில் உள்ள ஒரு அமைப்பின் தலைவர் சட்டத்தை கையில் எடுக்க சொல்லுவது சரியா?
  ///மாநில நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டுவதா அல்லது செய்றகுயுவை கூட்டுவதா அல்லது பொதுக்குழுவை கூட்டுவதா என்று விவாதிப்பதை கவனியுங்கள, அவர்கே தாங்கள் முன்னால் நிர்வாகிகளாக இருந்ததையும் கூறுவதையும் கவனியுங்கள்.///
  அதையும் மாநில நிர்வாகிகள் தான் முடிவு எடுக்க வேண்டும் .முன்னாள் நிர்வாகிகள் குறிப்பிட்ட பிரச்னைகளில் அவர்களின் இன்வால்வ் இருந்தால் சிறப்பு அழைப்பு மூலம் கலந்து கொண்டிருப்பார்.இதன் மூலம் நீங்கள் கூற வருவது என்ன?
  ////அடுத்த்தாக எவனாவது இலாபம் வராது என்றால் முதலீடு போடவானா என்று ஒருவர்கூறுவதையும், அவரைநோக்கி பாக்கர் உங்களுக்கு எந்த விபரமு தெரியாது என்றும் காசோலையை மட்டும்தான் அனுப்பினீர்கள் என்று கூறுவதையும்,
  புதிய பொது செயல்லாலரான சாகுல் என்பவர் தான் பொதுவாகவே கூறுகிறார்.அவர் எதற்காக கூறுகிறார் என்பதை மறைத்து விட்டீர்கள் .அதற்கு முன்பு பாக்கர் கூறுவதை ஏன் இங்கே மறைக்கிறீர்கள் ? இதில் லாபம் தான் வரும் என்று நான் சொல்ல மாட்டேன் .நஷ்டம் தான் வரும் என்பதை யும் ,இரண்டு வருடத்திற்கு எந்த ரிடர்னும் இருக்காது அதன் பின்னர் இப்படியெல்லாம் லாபம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லுகிறார். அதற்குத்தான் .சாகுல் நஷ்டம் வரும் என்றால் எவனாவது முதலீடு செய்வானா? லாபம்தான் வரும் என்றே முதலீடு செய்வான் ?என்று பதில் அளிக்கிறார்.இதில் என தவற்றை கண்டீர்கள்?அவரது கருத்தை கூறுகிறார்.ஒப்பந்தம் போட்டிருந்தால் ,நீங்கள் ஒன்னுக்கு மூணு வருவதாக ஒப்பந்தம் போட்டுவிட்டு இப்போது நஷ்டம்தான் வரும் என்று சொல்லுகிறீர்களே என்றல்லவா கேட்பார்.
  //முதலீடு போடும்போது போடப்பட்ட ஒப்ந்தம் என்பதை பிஜே போடும்போது கூப்பிட்டீங்கள்ல பிரிக்கும் போது என் கூப்பிடவில்லை என்று கூறுவதையும், கவனியுக்கள…////
  மிகத்தெளிவாக அங்கே கூறப்படுகிறது .தேவனாதனிடம் வின் டிவியை திருப்பிகொடுக்கும் பொழுது ஹாமீம் இப்ராஹீம் பிஜேவிடம் கேட்கிறார்,அதற்கு பதில் சொல்லுகையில் பெரிய கை வாங்கி இருக்கிறது ,அதனால் திரும்ப கொடுக்கப் போவதாக கூறினார்கள் .அப்படி என்றால் பணம் போட்டவர்களுக்கு என்ன செய்வீர்கள் ?என்று ஹாமீம் கேட்கிறார் .அதற்குத்தான் முதலீடு செய்தவர்களுக்கு ஒன்னுக்கு மூணு திருப்பி கொடுக்கப் போவதாக என்னை வைத்து ஒப்பந்தம் போட்டதாக சொல்லுகிறார். ஆனால் ஒன்னுக்கு மூணு கொடுக்காமல் இரண்டுதானே கொடுத்துள்ளீர்கள் என்று பீஜே பாக்கரிடம் கேட்கிறார். அதற்கு பாக்கர் தேவநாதன் அவ்வளவுதான் கொடுத்தார்,என்று பதிலுரைக்கிறார்.அப்படியெனில் ஒப்பந்தம் போடும்பொழுது என்னை கூப்பிட்டீர்கள் அல்லவா?பணம் பெறும் பொழுதும் என்னை கூப்பிடவேண்டியதுதானே ,நான் தேவனாதனை கேட்பேனே என்கிறார்.முதலீடு பண்ணும்பொழுது ஒப்பந்தம் என்றால் தேவனாதனுக்கு இங்கு என்ன வேலை?
  எக்ஸ் சாகித் ,டிஎன்டிஜே வை குற்றப்படுத்தி காட்ட வேண்டும் என்ற ஆவல் உங்கள் மதியை மயக்குகிறது.
  ////இபுராகிம் முழு பூசனிக்காயையும் சோற்றில் அமுக்கி பொய் மூடைடைகளை அவிழ்த்துவிடுவதை என்றைக்கும் நிறுத்தப் போவதில்லை. (வினவில் பாசித்தை விளக்கிவட்டதாக புழுகியுள்தையும் கவனியுங்கள்)///
  நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் ,நான் இல்லை என்று சொல்ல வில்லை .ஏனெனில் அந்த முயலுக்கு ஏற்கனவே ஒரு கால் ஒடிந்து காயம் ஆறிவிட்டது.அதனால் தான் ஓட முடியாத மாற்று திறனாளி முயலை பிடித்து விட்டு வாதம் பண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள்.பாவம் நீங்கள் இந்தியாவிலிருந்தால் அந்த சிடியை நேரடியாக விவாதத்திருக்கு எடுத்துக் கொள்வோம் .
  வினவில் பாசிதை விலக்கிவிட்டதாக சொன்னது உண்மையே .புதுகோட்டை மாவட்ட செயலாளரிடம் விசாரித்தே சொன்னேன்.என்னுடைய புரிதலில் தவறு.அவரை துணை செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளோம் என்றுதான் கூறியுள்ளார்.அடுத்து அவரை அடிப்படை உறுப்பினர் ஆகவும் நீக்குவது மாநில தலமையே செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.மேலும் அவர் இரண்டாவது திருமணம் செய்ததற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிவிட்டார்.அவர் பெண்களிடம் தவறு செய்தால் ஆதாரங்களுடன் வினவு வில் எழுதுவதை விட போலீஸிலோ அல்லது அவர்கள் நேரடி நடவடிக்கையோ எடுத்திருக்க வேண்டியதுதான்.டிஎன்டிஜே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதற்குரிய ஆதாரங்களும் சாட்சிகளும் தேவை.
  பிரிக்கும்போதுகூட இலாப நட்ட அடிப்படையில் தானே பங்குதாரர்கள் பிரித்துக்கொள்ளவேண்டும். இலாபமோ நட்டமோ எங்களுக்கு கவலையில்லை. போட்ட பணத்திற்கு 1 க்கு 3 தா என்று கேட்டால் வட்டிதான்.
  மீண்டும் உளறல்

 5. இபுராகிம்,
  திரும்ப திரும்ப பொய் சொல்வதன் மூலம் உண்மையாக்கிவிடலாம் என்று நினைக்கிறீர்கள், உள்களின்வாதத்தை வீடியோவை பார்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.
  உள்கள் வாதப்படி ஒரு நிருவனத்தை விற்று விட்டால் அதன் பங்கு தாரர்களுக்கு 1க்கு 3 என்று கொடுப்பது வட்டியா இலாபமா என்று எழுத்து பூர்வமாக இங்கு பதிவு செய்யுங்கள். வாசகர்களுக்கு வழிகாட்டாக அமையும். அதன் மூலம் நான் பிடித்த முயலுக்கு மூன்றாவது காலை நன்றாக ஒடித்து தூர வீசிடுங்கள்.

 6. ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கிய நிறுவனத்தை மூன்று லட்ச ரூபாய்க்கு விற்றால் முதலீடு செய்தவர்களுக்கு ஒன்றுக்கு மூன்று கொடுப்பது நூறு சதவீத சுத்தமான லாபம்.
  ///திரும்ப திரும்ப பொய் சொல்வதன் மூலம் உண்மையாக்கிவிடலாம் என்று நினைக்கிறீர்கள்,////
  இதுவும் நூறு சதவீதம் உங்களுக்கே பொருந்தும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s