டேப் காதர் – கம்யூனிச கலைஞர்களின் காட் பாதர்!


          அருள் எழிலனின் ஆனந்த விகடன் (30.10.2013) கட்டுரையில் “உப்பு வெச்ச இடம் தான் மிச்சம்” என்ற டேப் காதரின் பாடலின் தலைப்பில் சில விவரங்களை கூறியிருந்தார். அதற்கு முன்னால் பறையோசை வலைதளத்தில் “பொதுவுடைமைக் கலைஞரின் வாழ்க்கைத் தடம்” விரிவாக கூறியிருந்தது.

கலை என்பது சமூக இயக்கத்தில் முன்னேற்றகரமான பாத்திரம் வகிக்கும் தருணங்கள் யாவும் புரட்சிகர கலைஞர்களுக்கே உரித்தானவை….

முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்
முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்
Advertisements

சாதி, மதம் வேரறுப்போம்


இளவரசனின் மரணம்…

சமரசமின்றி சாதி, மதம் வேரறுப்போம்இளவரசன்

அணுவுலை எதிர்ப்பு, முல்லைப்பெரியாரின் தமிழக உரிமைக்கான ஆர்பாட்டம்


      09.01.2012 மாலை கோவை மண்டல பஞ்சாலைதொழிலாளர்சங்கம் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிளை சார்பாக காளையார்கோவில் தேரடித் திடலில் அணுவுலை எதிர்ப்பு மற்றும் முல்லைப்பெரியாரின் தமிழக உரிமையை நிலைநாட்டக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆலையின் கிளைச்செயலர் தோழர் இராதாகிருஷ்ணன்  தலைமையில் தோழர்கள் ஆனந்த், சரவணன், அயூப்கான் மற்றும் நாகராசன் ஆகியோர் உரையாற்றினர் இப்பகுதியில் நமது அமைப்பின் நிகழ்சி புதிது குறிப்பாக சிபிஎம்மின் ரெட்டை வேடத்தை அம்பலப்படுத்தி பேசியது 200க்கும்மேல் கூடியிருந்த மக்களின் ஆதரவை பெற்றது, நிகழ்ச்சி முடிவில் பலர் இவ்விசயத்தைப்பற்றி சரியாக பேசியது நீங்கள் தான் எனக்கூரி பாராட்டினர்.

                               தோழமையுடன்
நாகராசன்.

முல்லைப் பெரியாறு அணை : தேவை போராட்டத்தின் திசை மாற்றம்.


கேரளாவிலிருந்து 500க்கும் மேற்பட்ட உழைப்பாளிகளை அடித்து துரத்திய சம்பவம் இவர்களின் ஓநாய் வெறிக்கு ஒரு அத்தாட்சி.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

சட்டம், புனிதம், நேர்மை, மனசாட்சி என்று அடுக்கிக்கொண்டே போகப்படும் ஒழுக்கங்கள் எல்லாம் எல்லோருக்கும் பொதுவானதாக இல்லை. நாமும் சட்டவாதம் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை.

முழுமையாகப் படிக்க

கூடங்குளம் – ஒரு கொலைகலன்


நாமும் காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் என்று மாற்றுகள் குறித்து ஆலோசனை கூறிக்கொண்டிருப்பது இளிச்சவாய்த்தனம். அதனால்…

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கும்  கூடங்குளம், இடிந்தகரை மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!

 கூடங்குளம் மட்டுமல்ல. கல்பாக்கம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளையும் மூட போராடுவோம்!

முழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்

கல்விக்கான மக்களின் உரிமை:-விருத்தாசலத்தில் நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கை


திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடலூர் மாவட்டத்தில்  உள்ள ஊர் சிறுநெசலூர். இவ்வூரில் உள்ள அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்கள்.1926-ல் வெள்ளையன் ஆட்சியிலேயே போராடி தொடக்கப்பள்ளியை கொண்டு வந்தார்கள் இவ்வூர்மக்கள்.இதனால் இவ்வூரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசுஊழியர்கள்,ஆசிரியர்கள்,நூற்றுக்கும் மேற்பட்டபட்டதாரிகள் உள்ளனர்.2006 தேசியநெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்தபோது,சாலையின் கீழ்ப்புறம் ஊரும்,மேற்புறம்பள்ளியும் இரண்டாக துண்டாடப்பட்டது. இவ்வூர் மக்களின் மேம்பால கோரிக்கையை நிராகரித்த தேசியநெடுச்சாலை துறையினரை தமது அலட்சியத்தின் மூலம் மாநில அரசு அதிகாரிகளும் ஆதரித்ததால்,தொடக்கப்பள்ளி பாழடைந்து போனது….

தொடர்ந்து படிக்க

சமூகத்திற்குத் தேவை தாமோதரனா? சாய்பாபாவா?


கடந்த ஏப்ரல் 26. அன்று புதுச்சேரி மாநிலத்தில் திருக்கோவிலூருக்கு அருகே உள்ள மண்டபம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்ற கட்டிடத் தொழிலாளி புதுச்சேரி மேட்டுபாளையம் காவலர்களால் அடித்து கொல்லப்பட்டார். இதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக மர்மமான முறையில் இறந்துபோனவரும் தங்களுடன் பணிபுரிந்த சகத் தொழிலாளியுமான ஜெய்சங்கர் என்பவரை முன்விரோதம் காரணமாக தாங்கள்தான் கொன்றோம் என ஒப்புக்கொள்ளுவதற்காக செய்யப்பட்ட சித்ரவதையினால்தான் இந்தக் கொலை…

—கலை

தொடர்ந்து படிக்க