கள்ளும் பழசு, மொந்தையும் பழசு


இப்படத்தில் ஐந்து வகையான வாழ்வியல் தளத்திலிருந்து கதையை புனையும் இயக்குனர் க்ரீஷ்  ஒரு புள்ளியில் இணைத்து கதையை முடிக்கிறார். ‘தெய்வம் வாழ்வது தவறுகளை உணர்ந்த மனிதனின் நெஞ்சங்களில்‘ மற்றும் ‘பணம் என்பதே வாழ்க்கையின் அடிப்படைத்தேவை‘ என்ற தமது கருத்துக்களுக்கான கதைத் தளமாக இத்திரைப்டத்தை எடுத்துள்ளார். இடையிடையே அமைத்துள் சினிமாத்தனமான காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் ஒரு திரைப்படத்தின் உயிராதாரமான இறுதிக்காட்சியை இயல்பு மீறி காட்சிப்படுத்துவதன் மூலம் இதுவும் வணிக நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் என்பதற்கு சான்றாக உள்ளது….

–சாகித்

தொடர்ந்து படிக்க

இயக்கங்களும் தமிழ் சினிமாவும் (தொடர்ச்சி)


அடுத்ததாக திராவிடக் கட்சிகள்:

      போலி என்கிற முன் சொல்லைத் தவிர்த்திருக்கிறேன் என்பதை படிப்பவர்களுக்கு நினைவூட்டிக் கொள்கிறேன்.

      திராவிடக் கட்சிகள் – தோற்றம், வளாச்சி, அதில் தமிழ் சினிமாவின் பங்கு தமிழ் சிமாவை அவர்கள் பயன்படுத்திய விதம், அதில் அவர்களுக்கு கிடைத்த வெற்றி, தோல்விகள், இவைகளெல்லாம் இன்றளவும் நாம் படித்துச் சலிகின்ற  விசயங்கள்தான். சுருக்கமாக சில விசயங்களைப் பார்ப்போம். ”கவாச்சியூட்டி கவனத்தைத் திருப்புதல்” என்பது தி.மு.க.-வின் கலை இலக்கியக் கொள்கை. கருத்துக்களின் மூலமாகவும், கவர்ச்சியூட்டி தனது பிரச்சாரத்தை தி.மு.க. செய்து வந்தது. கருணாநிதியின் எழுத்து வன்மையும், எம்.ஜி.ஆர்- ன் திரை  அறிவும் இதற்குப் பெரிதும் துணை நின்றன. அதே நேரம் இவர்கள் இருவரும் முரண்பட்டதும் அதில் கருணாநிதி தோற்றதும், எம்.ஜி.ஆர் வென்றதும் நாம் அறிந்ததே. இவற்றையெல்லாம் நாம் மறந்துவிடாமல் இருப்பதற்கு எடுக்கப்பட்ட படம்தான் இருவர். குறைந்த பட்ச யோக்கிதை கூட இல்லாமல் எடுக்கப்பட்ட அப்படத்தின்  மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் நமக்குண்டு.

—குருசாமி மயில்வாகனன்.

இயக்கங்களும் தமிழ் சினிமாவும்


தமிழ் சினிமா என்பது நாமறிந்ததே. அது போல இயக்கங்கள் என்பதும் நாமறிந்த ஒன்றாகவே இருந்திருந்தால் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். அவ்வாறு இல்லாமல் போனதால் இயக்கங்கள் குறித்து சிறிது சொல்ல வேண்டியிருக்கிறது.

      இயக்கங்கள் என்பது இங்கே கட்சிகள், குறிப்பாக ஓட்டுக் கட்சிகள் என்று பொருள் கொள்ளக்கூடிய வகையில் தேசிய கட்சிகள், திராவிடக் கட்சிகள், பொதுவுடமைக் கட்சிகள் என்று மூன்று பெரும் பிரிவுகளாக கட்சிகளை பிரிப்பது வழக்கம்.

       –குருசாமி மயில்வாகனன்

தொடர்ந்து படிக்க