பண்டிதர் க. அயோத்திதாசரின் நூல்கள்


Vernia WebTech

பண்டிதர் க. அயோத்திதாசரின் நூல்கள்Vernia WebTech

நாள்: 25-8-2018

அன்பான நண்பர்களே!

வணக்கம்!

அயோத்திதாசர் எழுதிய நான்கு நூல்களை மின்னூலாக வெளியிட்டுள்ளோம்.

  1. யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
  2. வேஷ பிராமண வேதாந்த விவரம்
  3. கபாலீசன் ஆராய்சி
  4. விபூதி ஆராய்சி


முதலிரண்டிலும் பிராமணர் என்பதன் உண்மைப் பொருள் என்ன என்றும், யார் உண்மையான பிராமணர்கள் என்றும் தனது ஆய்வை இலக்கியல்களின் சான்றுகளுடன் கூறுகிறார்.

அடுத்தில் சிவன் என்பதும் கபாலீசன் என்பும் புத்தபிரானையே குறிக்கும் என்றும், அதற்கடுத்ததில் விபூதி வந்த கதையையும் இலக்கியல்களின் சான்றுகளுடன் தனது ஆய்வை கூறுகிறார்.

விலை ரூ 30.00 மட்டுமே.

தொடர்ந்து தங்களின் ஆதரவினை வேண்டுகிறோம்.

நன்றி!

இவன்,

வெர்னியா டிஜிடல் சிஸ்டம்.

எமது புத்தகம் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிந்துகொள்ளுங்கள்.

சமூக வலைதளங்களில் எங்களைத் தொடருங்கள்.

  

  

கோழிச்சண்டை


கோழிச் சண்டை

எங்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது. சண்டை வலுவாகா இருக்க வேண்டும். இறக்கும் வரை நடைபெற வேண்டும்.

அப்படியானால் கூடுதல் கட்டணம் ஆகும். பரவாயில்லையா?

எவ்வளவு?

500 லிரா.

1000_மாகத் தருகிறோம். நாளை மாலை நடைபெற வேண்டும்.

சுற்றி பாதுகாவலர்களுடன் வேலியிடப்பட்ட அரங்கத்தின் நடுவிவில், திரண்ட தோள்களும் அகன்ற மார்புகளும் உடைய திரேசியனும் கோரு இனத்தினனும் இடைகச்சை மட்டும் கட்டிக் கொண்டு உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்து பளபள என்று நின்றிருந்தனர்.

ஆண்டையின் மனதில் எவரொருவரை இழந்தாலும் அடுத்தடுத்த நல்ல சண்டைகளுக்கு தன்னிடமுள்ள இருவரில் ஒருவரை இழக்கப் போகிறோம் என்ற கவலை .

காட்சியினை காண வந்த ரோமானிய கோமான்களின் இளங்காதலர்களுக்கு “சபாஷ் சரியான ஜோடிகள்” என்ற அளவிலா மகிழ்ச்சி.

“நண்பனே, உன்னை நான் கொல்லாவிட்டால் நான் உயிருடன் இருக்க முடியாது, மன்னித்துவிடு தோழா” திரேசியனும் கோரு இனத்தினனும் தங்கள் மனதிற்குள்ளே பேசிக்கொண்டார்கள். இருவர் கைகளிலும் கூர்தீட்டப்பட்ட குத்துவாள்கள்.

அடிமைகளின் அற்புதமான சண்டை அரங்கம் ஆர்பரித்தது.

ஒருகனம்… ஒரே ஒரு வினாடி அந்த இருவரும் பேசிக்கொண்டார்கள். “கோமான்களின் கேளிக்கைக்காக நாம் இருவரும் சாகவேண்டுமா” திசை திரும்பியது விதி.

அந்த முகம் தெரியாத திரேசியனின் எழுச்சியால் அரண்டோடியது அரங்கம். ஐரோப்பியா முழுவதும் எழுச்சி கொண்டது. ஆராயிரம் அடிமைகள் சிலுவையில் அறையப்பட்டார்கள்.

அடுத்த சில நூற்றாண்டுகளில் தாங்கள் விரும்பியோ விரும்பாலோ அவர்களின் மூளை அடிமை என்ற சொல்லையே மறந்தது.

ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் சாதி அடிமைகளாக தொடரும் நம் சமூகம்…

நம்ம சனநாயக அறிவு ஜீவிகளின் போதாமை…

என்ன செய்வது தோழரே! மதம் மக்களிடம் இருக்கிறதே!

ஆம்! இருபத்தொன்றாம் நூற்றாண்டின் கற்கால மனிதர்கள் நாம்.

#மநு_தர்மம் #சாதி


#மநு_தர்மம் #சாதி

1.21. அந்தப் பிரம்மாவானவர் முன் சிருஷ்டிக்கப் பட்ட மானுடர் முதலிய சகலசாதிகளுக்கும் வேதத்தில் நின்றும் இந்த அடையாள முள்ளவன் மனிதனென்றும் இந்த அடையாள முள்ளது பசுவென்றும் இந்த அடையாள முள்ளது அசுவமென்றும் இவ்விதமாகப் பெயர்களையும் அந்தந்தச் சாதிகளின் தொழில்களையும் சிருஷ்டித்தார்.

1.88 பிராமணனுக்கு ஓதுவித்தல் ஓதல் எக்கியஞ் செய்தல் எக்கியஞ் செய்வித்தல் தானங் கொடுத்தல் தானம் வாங்குதல் ஆகி இவ்வாறு தொழிலையும் ஏற்படுத்தினார்.

1.89. க்ஷத்திரியனுக்கு பிரசைகளைத் தருமமாகக் காத்தல் தனங் கொடுத்தல் வேதமோதுதல் பாட்டு கூத்து ஸத்திரி முதலிய விஷயங்களில் மநஞ் செல்லாமை இவை நான்கையும் ஏற்படுத்தினார். எச்கியஞ் செய்தல் முதலான தருமகாரியங்களும் அவனுக்குண்டு.
1.90. வைசியனுக்கு பசுவைக் காப்பாற்றுதல் தானங் கொடுத்தல் ‘வேதமோதுதல் சலத்திலும் பூமியிலு முண்டான இரத்தினம் நெல்லு முதலியவைகளின் வியாபாரஞ் செய்தல் வட்டி வாங்குதல் பயிரிடுதல் இவ்வாறையும் ஏற்படுத்தினார்.

1.91 சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தருமமா ஏற்படுத்தினார். இதனால் அவனுக்கு தான முதலியவையும் உண்டென்று தோன்றுகிறது.

தொழிலின் அடிப்படையில் சாதிப்பிரிவு உண்டாகியது என்பது வரலாற்று மோசடி.

எந்த ஒரு மனிதனும் இழி தொழிலையும் அருவருப்பானத் தொழிலையும் மனம் விரும்பி ஏற்றுக்கொள்ள மாட்டான். ஏற்றுக் கொண்டிருக்கவும் முடியாது.

அதுபோல் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரக் காரணங்கொண்டும் ஏற்றிருக்கொள்ள வேண்டிய நெருக்கடியிம் இருந்திருக்க முடியாது.

சாதிப்பிரிவும் சாதிக்கானத் தொழிலும் ஆயுதபலத்தால் மட்டுமே உருவாக்கப் பட்டிருக்கும்.

புரட்சிகர கம்யூனிஸ்களும் தொழிலின் அடிப்படையில் சாதி உருவானது என்று சொல்வது ஹைலட்.