இசுலாம் ஒரு மதம் அல்ல; அது ஒரு மார்க்கம் என்றும், இசுலாம் ஒரு எளிய மார்க்கம் என்றும், இசுலாமியக் கொள்கைகள் மட்டுமே காலங்காலத்திற்கும் பொறுத்தமான வாழ்க்கைக்கு வழிமுறைகளைக் கொண்டுள்ளது; கடைபிடிக்க சிறந்தது என்றும் இசுலாமியர்கள் கூறுகின்றனர். இந்து, கிறித்துவ மதங்கள் போன்று இசுலாமும் ஒரு பிற்போக்கானதே என்பதை ஒரு நீண்ட தொடர்மூலம் விரிவாக விளக்குவதே இத் தொடர்.

இத் தொடர், இசுலாம் பற்றி அறியாதவர்களுக்கும் எளிமையாக, அதன் கொள்கைகள் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் என்று நம்புகிறோம்.

வாசகர்கள் தங்கள் கருத்தை தவறாமல் பதிவு செய்யும்படியும் கேட்டுக் கொள்ளகிறோம். தங்களின் கருத்துப் பதிவுகள் எமக்கு இதனை மேலும் செழுமைப்படுத்திட பேருதவியாக இருக்கும் என்பதையும் சுட்டிட விழைகிறோம்.

தொடர் 1:

 எல்லா நல்ல மனிதர்களும் உலகத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். சில முரண்பட்ட மனிதர்கள் மட்டுமே தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றியமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் எல்லா வித முன்னேற்றங்களும் இப்படிப்பட்ட நபர்களையும் அவர்களின் புதுமைக் கண்ணோட்டத்தையும் தான் நம்பி இருக்கின்றன.”

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா

துவங்கும் முன்

 ஹதீஸ்கள் பற்றி ஓர் சிறிய அறிமுகம்,

 என் சம்பந்தமாக எதையும் எழுதி வைக்காதீர்கள் என முகம்மதுநபி  உத்தரவிட்டிருந்தார்கள் .

 குர்ஆன்  எழுதிப் பதிவு செய்யப்படும் சூழ்நிலையில் ஹதீஸும் எழுதப்பட்டால் எது குர்ஆன் வசனம்? எது  முகம்மதுநபியின் பொன்மொழி? என்பதில்  குழப்பம் நேர்ந்துவிட வாய்ப்புள்ளதால் இப்படி ஒரு உத்தரவை முகம்மதுநபி சொன்னார்கள். ஆகவே  நபிகள் நாயகம் அவர்களது பொன்மொழிகளை அவரது தோழர்கள் எழுதிப் பதிவு செய்யவில்லை

 ஆயினும்  அபூஹூரைரா போன்ற ஓரிரு முகம்மதுநபியின் தோழர்கள் தங்களுக்கு அத்தகைய குழப்பம் ஏற்படாது என்று தெளிவு பெற்றிருந்தமையால் சில பொன்மொழிகளை ஏடுகளில் எழுதி வைத்திருந்தார்கள். எனினும்  அவை பெரிய அளவிலோ தெகுப்பு வடிவிலோ இருக்கவில்லை.

 முகம்மதுநபியின்  தோழர்கள்  அபரிமிதமான தங்களது நினைவாற்றலில் இருந்தே முகம்மதுநபியின் பொன்மொழிகளை வாய்வழியாக உலகுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அதனால்  அக்காலங்களில் முகம்மதுநபியின் பொன்மொழிகளை மனனம் செய்வது சிறந்தமார்க்க சேவையாக கருதப்பட்டது. இன்றை  காலத்தில் திருக்குர்ஆனை மனனம் செய்பவர் ஹாபிழ் என்று அழைக்கப்படுகிறார். அன்றோ  ஒரு இலட்சம் பொன்மெழிகளை மனனம் செய்தவர் ஹாபிழ் என அழைக்கப்பட்டார். அதுமட்டுமல்ல  மனனம் செய்யப்படும் பொன்மொழிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஹாகிம், ஹூஜ்ஜத்துல் இஸ்லாம் ஆகிய சிறப்புபெயர்கள் வழங்கப்பட்டன.

 ஹதீஸ் என்றால் என்ன?

ஹதஸ் என்ற வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை, உரையாடல், புதிய செய்தி எனப்பொருள்படும். இஸ்லாமிய உலகில் ஹதீஸ் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சொல் செயல் ஆகியவற்றுக்கும் அவர் மௌனமாக இருந்து அங்கீகரித்த விசயங்களுக்கும் சொல்லப்படும்.

        அதே போல முகம்மதுநபியின் தோழர்களது சொல் செயல் அங்கீகாரத்திற்கும் ஹதீஸ் என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு சாரார் இதற்கு அஸர் என்று வேறுபெயரிட்டு அழைப்பர்.

 ஹதீஸ் குத்ஸி

ஹதீஸ் குதுஸி என்றால் அல்லாஹ் சொல்கிறான் என்று முன்னுரையிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லும் பொன்மொழியாகும். இந்த தகவல் குர்ஆனில் இருக்காது.

 உதாரணமாக, பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் “அல்லாஹ் சொல்கிறான்; மனிதன் என்னை திட்டுகிறான். மனிதன் காலத்தை திட்டுகிறான் . காலத்தை நானல்லவா படைத்தேன்” என்று முகம்மதுநபி சொல்வதாக வரும் ஹதீதுகள். ஹதீதுகள் தொகுத்து திரட்டப்படும்போது அதில் குறிப்பிடப்படும் அறிவிப்பாளர்கள் எவரும் பெரும்பாலும் நேரிடையாக தொகுப்பாசிரியர்களிடம் கூறவில்லை. வழி வழி வந்தவர்கள் கூறியவைகளே. காரணம்  நூற்றாண்டுகளூக்குப் பிறகே அவை தொகுக்கப்படுகிறது.

 ஹதீஸ் வகைகள்

ஹீஹ்:

அறிவிப்பாளர் தொடர் முழுமையாக சொல்லப்பட்டு அவர்கள் அனைவரும் பரிபூர்ண நம்புக்ககைக்குரிய நேர்மையாளராகவும் மிக்க மனனம் செய்யும் சக்தியுள்ளவர்களாகவும், மனிதத்தன்மை மிக்கவராகவும் இருந்து அவர்களால் சொல்லப்படும் ஹதீஸ் அவர்களைவிடச் சிறந்தவர்களின் அறிவிப்புக்கு முரன்படாமலும் இருந்தால் அது ஸஹீஹ் என்ற முதல் தரமான ஹதீஸ் ஆகும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஹஸன்

அறிவிப்பாளரின் தகுதிகள் முழுமை பெற்றிராத நிலையில் ஒரு ஹதீஸின் கருத்துக்கள் வேறு பல வழிகளில் அறிவிக்கப்பட்டிருக்குமானால் அது ஹஸன் என்றழைக்கப்படுகிறது.

 லயீப்

அறிவிப்பாளர்களின் தகுதியில் குறைப்பாடுகள் இருந்து மற்ற விதிமுறைகளில் தேறாத ஹதீஸ்கள் லயீப் எனப்படும்.

 மவ்லூஉ

உண்மை அல்லாத பொய்யாக இட்டுக்கட்டி சொல்லப்பட்ட ஹதீஸ்கள் மவ்லூஉ எனப்படும்.

அவர்கள் யாரை நம்பிக்கைகுறியவர்கள் கூறுகிறார்களோ அவர்களேதான் தரக்குறைவானது, ஆதாரமற்றது, நம்பிக்கைக்குறியது அல்ல என்று இசுலாமியர்கள் கூறும் ஹதீதுகளையும் திரட்டி எழுதியுளைளாரகள். இவைகளையும் ஏன் இவர்கள் பதிவு செய்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்காலத்தில் உள்ள அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களாலேயே விளக்கம் கூற முடியாத ஹதீதுகளை இவர்கள் ஒருவேளை இவ்வாறு கூறுகிறார்களோ?

 முதல்  தொகுப்பு

ஹிஜ்ரீ  முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த உமைய்யா வம்ச ஆட்சியாளர் ஹஜ்ரத் உமர் பின் அப்துல் அஸீஸ் (கி.பி 681-717.) ஆட்சிக் காலத்தில்  நடைபெற்ற ஒரு யுத்தத்தில் பெருமளவில் நபித்தோழர்கள் மரணமடைந்த போது ஹதீஸ்கள் நூல் வடிவத்தில் தொகுக்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.

 உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களது உத்தரவிற்கேற்ப இமாம் முஹம்மது பின் முஸ்லிம் பின் `ஹாப் அஸ்ஸூஹரீ ( ஹி 124 ) முகம்மதுநபியின் பொன் மொழிகளின் முதல் தொகுப்பை திரட்டினார். அதற்குப்பின் பக்தி சிரத்தையோடும் அக்கறையோடும் பலரும் முகம்மதுநபியின் பொன்மொழிகளை திரட்டத் தொடங்கினார்கள்.

 அந்த ஆர்வத்தின் முடிவில் சில பிரச்சினைகளும் எழுந்தன. முகம்மதுநபியின் பொன்மொழிகள் அல்லாத பலவும் திரட்டுக்களில் இடம் பெற்றன. தவறான எண்ணத்தோடு மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல் மற்றும் குழுஉணர்வின் தாக்கத்தாலும் பலர் பொய்யான செய்திகளை இட்டுக்கட்டடியி முகம்மதுநபியின் பொன்மொழிகள் என்ற பெயரில் உலாவ விட்டிருந்தனர் என்றும், அவையும் திரட்டுக்களில் இடம் பெறத் தொடங்கி இசுலாத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் ஆபத்தாக அமைந்தன என்றும் இவர்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தனர்.

 இந்நிலையில் தான் இமாம் முஹம்மது பின் இஸ்மாயீல் புகாரி ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டில் ஆதாரப்பூர்வமான பொன்மொழிகளை திரட்டித்தர முதன்மையான உறுதி பூண்டார். இசுலாத்திற்கும் சமுதயத்திற்கும் மிகப்பொரிய சேவையாற்றுவதற்காக பிறப்பபெடுத்தது போல் 16 ஆண்டுகால பெரும் முயற்சிக்குப்பின் தனக்கு கிடைத்த 6 இலட்சம் பொன்மொழிகளிலிருந்து 7586 பொன்மொழிகளை தேர்வு செய்து ஆதரப்பூர்வமான பொன்மொழிகளின் தொகுப்பு என்று வழங்கினார். அதற்குப் பிறகு அவருடைய வழியை அடியொட்டி பலரும் ஆதராப்பூர்வ தொகுப்புகளை திரட்டித்தந்தனர். அவற்றுள் மக்களால் பெருமளவில் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்புகள் ஆறு.

 1. ஸஹீஹூல் புகாரீ

நூலின் பெயர்  :        அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் (புகாரீ)

முழுப் பெயர்   :        அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் அல்முஸனத் அல்முக்தஸர்

                                           மின உமூரி ரசூலில்லாஹி வ சுனனிஹி வ அய்யாமிஹி)

ஆசிரியர் பெயர் :     அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயீல்

                                          அல்புகாரீ

பிறப்பு          :        ஹிஜ்ரீ 194 (கி.பி. 810) ஷவ்வால் மாதம் 13ஆம் நாள்

                                   வெள்ளிக் கிழமை இரவு

இறப்பு          :        ஹிஜ்ரீ 256 (கி.பி. 870) ஷவ்வால் மாதம் முதல் நாள்

                                சனிக்கிழமை இரவு

 இமாம் புகாரீ அவர்கள் தமது பதினெட்டாம் வயதில் ஸஹீஹூல் புகாரீ ஹதீஸ் தொகுப்பு நூலை எழுதத் துவங்கினார்கள். தமது முப்பத்து நான்காம் வயதில் ஏறத்தாழ பதினாறு ஆண்டு காலத்திற்குப் பிறகு அதனை எழுதி முடித்தார்கள். அவர் அஹ்மத் பின் ஹன்பல்  அவர்களின் மாணவர் ஆவார். இந்நூலில் 7563 (ஃபத்ஹூல் பாரீயின் இலக்கம்) ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

2. சுனன் அபூதாவூத்

நூலின் பெயர்  :  சுனன் அபூதாவூத்

ஆசிரியர் பெயர் : அபூதாவூத் சுலைமான் பின் அல்அ`அஸ்

                                        அஸ்ஸிஜிஸ்தானீ (ரஹ்)

பிறப்பு          :              ஹிஜ்ரீ 202

இறப்பு          :             ஹிஜ்ரீ 275 (கி.பி. 889) ஹவ்வால் 16ஆம் நாள்

                                        வெள்ளிக்கிழமை

                 ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் தொகுப்பு நூற்களில் (ஸிஹாஹ் சித்தா) ஸஹீஹூல் புகாரிக்கு அடுத்ததாக அபூதாவூத் எனும் நூல்தான் இயற்றப்பட்டது.

ஈரானிலுள்ள ஸிஜிஸ்தான் நகரில் பிறந்த அபூதாவூத் சுலைமான் பின் அல்அ`அஸ்  (சஜிஸ்தானீ) அவர்களும் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களின் மாணவர் ஆவார். ஹதீஸ்களுக்காகவே இவ்வுலகில் பிறந்து வாழ்ந்தவர் என்று இவரைக் குறித்துப் கூறுவர். இவர் தம்முடைய பிரசித்தி பெற்ற சுனன் அபூதாவூத் எனும் ஹதீஸ் தொகுப்பு நூலை இயற்றி தம்முடைய ஆசிரியர் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களிடம் சமர்பித்தபோது அவர்கள் தமது மாணவரை மிகவும் பாராட்டினார்கள். இந்நூலில் 5274 (முஹ்யித்தீன் இலக்கம்) ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்துதான் ஸஹீஹ் முஸ்லிம் இயற்றப்பட்டது.

 3. ஸஹீஹ் முஸ்லிம்

நூலின் பெயர்  :        அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்

ஆசிரியர் பெயர் :    அபுல் ஹஸைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ்

                                          அந்நைசாபரீ அல்கு ரீ

பிறப்பு          :        ஹிஜ்ரீ 204 (கி.பி. 819)

இறப்பு          :        ஹிஜ்ரீ 261 (கி.பி. 875) ரஜப் மாதம் 25ஆம் நாள்

                                   ஞாயிறு மாலை

                 இன்றைய மேற்கு ஈரான் நாட்டிலுள்ள நைசாபூர் நகரில் பிறந்த அபுல் ஹஸன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் அல்குரீ அன்நைசாபூரீ அவர்களும் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களின் மாணவர்களில் ஒருவர் ஆவார். பிற்காலத்தில் புகாரீ (ரஹ்) அவர்களின் மாணவராகவும் இருந்துள்ளார்கள். ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் தொகுப்பு நூற்களில் (ஸிஹாஹ் சித்தா) ஸஹீஹுல் புகாரிக்கு அடுத்ததாக ஸஹீஹ் முஸ்லிம் கருதப்படுகிறது. ஆனால் இந்நூல் அமைக்கப்பட்டுள்ள முறையையும் அதில் ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒழுங்கையும் கவனித்து இது ஸஹீஹுல் புகாரீயைவிட மேம்பட்டதாகும் என மொராக்கோ போன்ற மேற்கத்திய நாட்டினர் சிலர் கூறியுள்ளனர். இந்நூலில் 7345 (நவவீ இமாம் இலக்கம்) ஹதீஸ்கள் உள்ளன.

  4. ஜாமிஉத் திர்மிதீ

நூலின் பெயர்  :        அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்

ஆசிரியர் பெயர் :     அபூரூடவ்சா முஹம்மத் பின் ரூடவ்சா பின் சூரா

                                           அத்திர்மிதீ

பிறப்பு          :        ஹிஜ்ரீ 209

இறப்பு          :        ஹிஜ்ரீ 279 (கி.பி. 892)

  இன்றைய உஸ்பிகிஸ்தான் நாட்டிலுள்ள திர்மித் நகரத்தில் பிறந்த அபூஈசா முஹம்மத் பின் ஈசா பின் சூரா அத்திர்மிதீ அவர்கள் புகாரீ அவர்களின் மாணவர்களில் மிக முக்கியமானவர் ஆவார். புகாரீ அவர்களின் பிரதிநிதி (கலீஃபா) என்று இவரைக் குறித்துக் கூறப்படுவதுண்டு. இந்நூலில் 3891 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

 5. இப்னுமாஜா

நூலின் பெயர்  :        சுனன் இப்னுமாஜா

ஆசிரியர் பெயர் :      அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் அல்கஜ்வீனீ

                                            பின் மாஜா அர்ருப்ஈ (ரஹ்)

பிறப்பு          :        ஹிஜ்ரீ 209

இறப்பு          :        ஹிஜ்ரீ 273 (கி.பி. 887)

 காஸ்பியன் கடலுக்கு தெற்கே அமைந்துள்ள ஈரானிய நகரமான கஸ்வீனில் பிறந்த அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் அல்கஜ்வீனீ பின் மாஜா அர்ரப்ஈ அவர்கள் தமது சுனன் இப்னு மாஜா நூலை ஹாஃபிழ் அபூ ஜர்ஆ அர்ராஜீ அவர்களிடம் சமர்பித்தபோது அதில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களை அன்னார் ஆராய்ந்து இந்நூலில் சுமார் முப்பது பலவீனமான ஹதீஸ்கள் மட்டுமே உள்ளன என்று கூறினார்கள். இதில் 4341 (அப்துல் பாகீயின் இலக்கம்) ஹதீஸ்கள்.

 6. சுனன் நஸயீ

நூலின் பெயர்  :        சுனன் நஸயீ

ஆசிரியர் பெயர் :        அபூஅப்துர்ரஹ்மான் அஹ்மத் பின் ஐப் அந்நஸயீ(ரஹ்)

பிறப்பு  :                ஹிஜ்ரீ 215

இறப்பு  :                ஹிஜ்ரீ 303 (கி.பி. 915)

கிழக்கு ஈரானிலுள்ள நசா எனும் நகரத்தில் பிறந்த அபூஅப்துர்ரஹ்மான் அஹ்மத் பின் ஐப் அன்னஸயீ  அவர்கள் முஸ்லிம் அவர்களைவிட அதிகமாக ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள். இந்நூலில் 5769 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

இவை தவிர இன்னும் ஏராளமான ஆதாரப்பூர்வமான பொன்மொழித் தொகுப்புகள் உண்டு.

இமாம் புகாரி அவர்களின் வாழ்க்கை வரலாறு

       ஸஹீஹுல் புகாரி அரபி மூலத்தின் ஆசிரியர் அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயில் பின் இப்ராஹீம் பின் முஃகீரா பின் பர்திஸ்பா அல்ஜூஅஃபி அல்புகாரீ அவர்கள் ஆவார். இன்றைய ரஷ்யக் குடியரசுகளில் ஒன்றான உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா எனும் நகரத்தில் ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு (கி.பி.810) ஷவ்வால் மாதம் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு பிறந்தார்கள்.

 சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார்கள். உள்ளூரிலேயே ஆரம்பக் கல்வியைக் கற்று முடித்த பின் தாயார் மற்றும் சகோதரருடன் தமது 12ஆவது வயதில் (ஹிஜ்ரி206இல்) ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டார். ஹதீஸ் எனும் நபிமொழிகளைத் திரட்டுவதற்காக மக்காவிலேயே தங்கிவிட்டார்கள்.

 மக்கா மதீனா உள்ளிட்ட ஹிஜாஸ் பகுதியில் ஆறாண்டுகள் தங்கியிருந்த இமாம் புகாரீ அவர்கள் நபிமொழிகளை அறிந்திருந்தோரிடமிருந்து நேரடியாக அவற்றைக் கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்காக எகிப்து சிரியா இராக் முதலான நாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டார்கள். அன்றைய நபிமொழி அறிவிப்பாளர்களிடமிருந்து கேட்டு மனனம் செய்த ஹதீஸ்கள் பல லட்சங்களாகும் இருப்பினும். நம்பத் தகுந்த ஆதாரப்பூர்வமான அறிப்பாளர் தொடர் வழியாகக் கிடைத்த நபிமொழிகளை மட்டுமே இந்நூலில் இடம் பெறச் செயவதற்கு அவர் தமக்குத் தாமே சில விதிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

 இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு இந்நூலில் அவர் இடம்பெறச் செய்திருக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கை 7563. இவற்றில் திரும்பத் திரும்ப வரும் நபிமொழிகளை நீக்கிப் பார்த்தால் சுமார் 4000 நபிமொழிகளே மிஞ்சும். இந்த எண்ணிக்கையே இமாம் இப்னுஹஜ்ர் அல் அஸ்கலானீ அவர்களின் விரிவுரை மூலத்தில் காணப்படுகிறது.

 இந்நூலுக்கு இமாம் புகாரீ அவர்கள் சூட்டிய முழுப்பெயர் அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹூல் முக்தஸர் பின் கனனி ரசூலில்லாஹி (ஸல்) வ அய்யமிஹி. ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர், தொடர் முறிவுறாத நிபந்தனைகளுக்குட்பட்ட அறிவிப்புகள் மட்டுமே இடம்பெற்ற, அல்லாஹ்வின் திருத் தூதர்(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் வாழ்க்கைச் சரிதை குணநலன்கள் அனைத்தும் உட்பொதிவாய் அமைந்த சன்மார்க்கத்தின் சகல துறைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு என்பது இதன் பொருளாகும். இதனை ஸஹீஹூல் புகாரீ (இமாம் புகாரீ அவர்களின் ஆதாரப்பூர்வ நபிமொழித் தொகுப்பு) என்று சுருக்கமாகக்கூறுவர். 16 ஆண்டு காலக் கடின உழைப்புக்குப் பின் இத்தொகுப்பு உருவானது.

 இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் இந்நூலன்றி வேறு பல நூல்களும் எழுதியயுள்ளார்கள். அவற்றில் சில,

  1. அல் அதபபுல் முஃப்ரத்
  2. அத்தாரீகுல் கபீர்
  3. அத்தாரீஸ் ஸஃகீர்
  4. அல் முஸ்னதுல் கபீர்
  5. அத்தஃப்சீரல் கபீர்
  6. அல் மப்சத்
  7. அல்ஹிபா
  8. அல் அ`ரிபா
  9. அல்வஹ்தான்
  10. அல் இலல்

 இமாம் புகாரீ அவர்கள் இறைவழிபாடு,  நபிவழி வாழ்க்கை, நல்லொழுக்கம் ஆகியவற்றில் பற்றுமிக்கவராக வாழ்ந்தார்கள். வரலாற்றில் நீங்கா இடம்பெற்றுவிட்ட அவர் ஹிஜ்ரி 256 (கி.பி. 870) ஷவ்வால் மாதம் முதல் நாள் சனிக்கிழமை இரவு சமர்க்கந்து நகரில் தமது 62ஆவது வயதில் இறந்தார்கள்

— தஜ்ஜால்

நன்றி!  http://www.rahmath.net

*****

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 2


3 thoughts on “ஆரம்பத்தை நோக்கி -தொடர் 1

  1. தாஜ்ஜாலுக்கு எனது வாழ்த்துக்கள் , நல்ல ஆரம்பம் !
    வெறுமனே வாதங்களை மட்டும் வைக்காமல் மூல நூலான குரான் , ஹதீஸை சலித்து எடுப்பது கூர்மையானதாக இருக்கும்.
    தமிழ் கூறும் நல்லுலகின் 1 கோடி முஸ்லீம் மக்களின் இணைய பிரதிநிதிகளின் பின்னூட்டத்தை காண ஆவலாக உள்ளேன்.

பின்னூட்டமொன்றை இடுக