பி.எஸ்.என்.எல் அரசுத்துறையானாலும் மோசடி நிறுவனமே.

பல நிறுவனங்களும் தங்களின் விளம்பரங்களில் சொல்வது ஒன்றும் மாற்றாக மோசடி செய்வதும் நம் புண்ணிய பூமியில் ஒரு வாடிக்கை. அரசுத்துறையானாலும் இதில் விலக்கல்ல.

மேலே உள்ள படத்தில் சிவப்பு வண்ண கட்டமிட்டுள்ளதைக் கவனியுங்கள். 1 Gb / DAY என்றும் செல்லுபடிநாட்கள் 7 என்றும் உள்ளது. ஆனால் நான் ரீசார்ச் செய்து விட்டு இரண்டாம் நாள் பயன்படுத்தும் போது இணையத் தொடர்பு வேலை செய்யவில்லை. வாடிக்காளர்களின் தரிசனம் கிடைத்து கேட்டால் அத் தேவர்கள் சொல்கிறார்கள் “அது 7 நாட்களுக்கு 1 Gb (மொத்தமாக) மட்டுமே” என்று கூறுகிறார்கள். அப்படியானால் / இந்தக் குறிக்கு பொருள் என்ன என்று கேட்டால் “அதாவது 7 நாளுக்கு மட்டுமே” என்று திருப்பத் திருப்ப முட்டாள்தனமாக சொல்கிறார்கள்.

அடுத்துள்ள மற்ற பிளான்களையும் கவனியுங்கள். அதிலும் / DAY என்றே உள்ளது. ஆனால் அவற்றிற்கு தினமும் ஒரு நாளைக்கு என்று சொல்கிறார்கள்.

எவ்வாறேனும் மோசடி செய்து ஏழைமக்களை சுரண்டுவதில் பாரத புண்ணிய பூமியின் பெருமை மிக்க BSNL _லும் ஒன்று என்பதை மறக்காதீர்கள். எச்சரிக்கையாக நீங்கள் ரீசார்ச் செய்யும் கடைக்காரிடம் உறுதி செய்துகொண்டு ரீசார்ச் செய்யுங்கள். இப்படி மோசடியாக இருந்தால் “ஏன்டா மோசடியானதை வாங்கி விற்கிறாய்” என்று சட்டையைப் பிடியுங்கள். அப்பொழுதுதான் அவர்கள் மோசடியானவற்றை வாங்கி விற்கமாட்டார்கள்.

On line recharge செய்யும்போது வாடிக்கையாளர் மோசடி சேவையை கேட்டுக் கொண்டு செய்யுங்கள்.

BSNL தொழிளார்களே உங்களின் ஊதியமும் இப்படி பல கோடி பேர்களை மோசடி செய்து தரப்படும் பணம்தான் என்பதையும் நீங்களும் அம்மோசடியில் உடந்தையாளர்கள் என்பதையும் மறக்காதீர்கள்

பின்னூட்டமொன்றை இடுக