தோழர்களே,

இந்தப் பகுதியில் தொடராக பலரது சிந்தனைகளையும், செயல்களையும் மேற்கோள்களாக பதிவிட முயற்சித்துள்ளோம். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

– டாக்டர் நார்மன் பெத்யூன். கனடா

1

நவீன மருத்துவ சீர்திருத்தங்களான மருத்துவ காப்பீடு திட்டங்கள் போன்றவைகள் எதுவும் சமுதாயப்பட்ட மருத்துவம் ஆகாது.  இவைகள் தேவையின் அடிப்படையில் காலங்கடந்த மனிதாபிமானத்தால் உருவான ஒழுக்கக் கேடான சோசலிசம் ஆகும்.

– டாக்டர் நார்மன் பெத்யூன். கனடா, 1937-ல்

2.

அந்தக் குழந்தை எப்படி இறந்தது? அக் குழந்தையை யார் கொன்றாரகள் என்று நான் கூறுகிறைன் . இந்த உலகம் நரகத்திற்கு போய்க்கொண்டிருக்க அதைக் கண்டுகொள்ளாமல் நம்பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கும் நீங்கள், நான், மற்றும் அனைவரும் சேர்ந்துதான் அவளைக் கொண்றோம்.

— டாக்டர் நார்மன் பெத்யூன். கனடா, 1937-ல்

3.

“நாங்கள் அடிமைகளின் மனைவிகளாக இருப்பதற்குப் பதிலாக சுதந்திரக் போராட்ட வீரர்களின் விதவைகளாக வாழ்வோம்”

— ஸ்பெயின் மீது ஹிட்லரின் தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோது அப்போதைய இக்கட்டான நிலையிரும் பெண்கள் தங்கள் நிலைப்பாட்டை விளக்கி சுமந்துகொண்டிருந்த  பேனர்களின் வாசகம். (நான்மன் பெத்யூனின் கதை என்ற புத்தகத்திலிருந்து)

4.

விஞ்ஞானமும், தொழில் நுட்பமும், மனித நல அக்கரையும் அப்படியே உறைந்து போய்விடாது. தெரியாது என்பதையே ஏற்றுக்கொள்ளாத மனிதர்களும், தொடர்ந்து கற்றுக்கொண்டும், தேடிக்கொண்டும் சோதனைசெய்துக் கொண்டும் உள்ள மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் புதிர்கள் இல்லை என்றாகும்வரை விட மாட்டார்கள்.

5.

தங்கள் நாட்டு மக்களுக்கான சுதந்திரத்தைக்காட்டிலும் தங்கள் சொத்துக்களைக் காத்துக் கொண்டு ஜப்பானியர்களின் காலடியில் அடிமையாக வாழ்வதைக்கூட செல்வம் படைத்தவர்கள் விரும்பினார்கள். உலகம் முழுவதும் சொத்துடைத்தவர்கள் நிலமை இதுதான்.

— டாக்டர் நார்மன் பெத்யூன். (சீனா- ஜப்பான்  போரிமுனையில் மருத்துவராக பணியாற்றியபோது )

6.

“நமக்கு என்னவென்று தெரியாதபோதுதான் நாம் அஞ்சுகிறோம். அவர்களுக்கும் எனக்கும் மற்றும் அனைவருக்கும் அதுதான் விதி. எல்லாவற்றையும்விட புரிந்துகொள்ளுதலும் சரியான அறிவுத்திறனும் சேர்ந்துதான் பயத்தைத் தோற்கடிக்கிறது.”

அவர்கள் எப்படி நான் இரத்தத்தை எடுக்கிறேன் என்பதைப் பார்க்கும்போதும் அதனால் எனக்கு எதுவும் நேரவில்லை என்பதை உணரும்போதும் அவர்களுக்கு அதனுள் எதுவும் புதிர் இருப்பதாகவும், அதனுள் எதுவும் அறிந்து கொள்ள முடியாதது இருப்பதாகவும் தோன்றாது. ஆகவே அதை முழுமையாக அறிந்த பிறகுதான் அதற்குப் பயந்து நடுங்குவதற்கு எதுவுமில்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

7.

சுதந்திரத்தை விரும்பும் மில்லியன் கணக்கான கனடியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் தங்கள் கண்களைக் கிழக்கு நோக்கித் திரும்பி ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நமது பெருமைமிகு போராட்டத்தை மரியாதையுடன் பார்கத் துவங்கியுள்ளனர். இந்த மருத்துவமனைக்கும்கூட உங்கள் வெளிநாட்டுத் தோழர்கள்தான் அனைத்து உபகரணங்களையும் தந்து உதவியுள்ளார்கள். முதலில் அவர்கள் தங்களது பிரதிநிதியாக என்னை இங்கே அனுப்பி பெருமைப் படுத்தினார்கள். உங்களைப் போன்றே சிந்திக்கும் அந்த மனிதர்கள் இங்கிருந்து 300, 000லீ தூரத்தில் இருந்துகொண்டு அதாவது இந்த பூமி உருண்டையின் பாதி தூரத்திற்கு அப்பாலிருந்து கொண்டு உங்களுக்கு உதவுவதை நீங்கள் விநோதமாகப் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் நீங்களும் நாங்களும் சர்வதேசியவாதிகள். நாம் எந்த இனம், எந்த நிறம், எந்த மொழி என்றெல்லாம் பார்ப்பதில்லை. எந்த தேசிய எல்லையும் நம்மை பிரிக்கவோ துண்டாடவோ முடியாது.

— டாக்டர் நார்மன் பெத்யூன். கனடா. (சீனப் போர்முனையில் இருந்தபோது)

8.

கருத்தரங்குகளைப் பொருத்தவரை அவைகள் மிகவும் தேவையானதும் சிறந்த தும் ஆகும். ஆனால் அவைகளைக் செயற்படுத்தினால்தான் அவை சிறந்தது. பேசிக் கொண்டிருப்பது என்பது செயற்பாட்டுக்கு மாற்றாக வராது. சொற்கள் என்பதே செயலை விளக்குவதற்குத்தான் மனிதனால் எற்படுத்தப்பட்டது


–மாடர்ன் ஆர்ட் குறித்து தமிழரசன். புதியகலாச்சாரம், மார்ச் 2011

அவர்கள் படைக்கின்ற ஓவியம், இசை, இலக்கியம் ஆகியவற்றில் புறவயமான உண்மைகள் அல்லது கருத்தியல் ரீதியான உண்மைகள் எதுவும் இருப்பதில்லை. இவை தமது கலைப்படைப்பின் உள்ளடக்கத்தை தீர்மானிக்குமாயின் தமது படைப்பு கலைத்தரம் இழந்து வெறும் பிரச்சார இலக்கியமாகிவிடும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

பாவேந்தர்பாரதிதாசன் 

1.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

  

—ராகுல் சாங்கிருத்தியாயன்.

1. புராதான சமுதாயத்தில் மாடு வளர்ப்பே பிரதான தொழில். ஆண் இதன் மூலம் வருமானம் ஈட்டும் குடும்பத் தலைவனாக இருந்தான். வீட்டுவேளை மாடுவளர்ப்புக்கு உதவிப்பணியாக இருந்த து .இந்த எண்ணம் அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரியாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. “உனக்கென்ன, வீட்டுக்குள்ளே நீ ஹாய்யா உட்காரந்திருக்கிறாய்! வேளியே போய்க் கஷ்டப்பட்டுச் சம்பாதிப்பதென்பது உனக்கெப்படித் தெரியும்” என்று பேச்சு வந்தால் ஆண் பெண்ணிடம் கத்திக்கொண்டிருந்தான். உண்மையில் ஆணைக்காட்டிலும் பெண்ணே அதிக நேரம் உழைக்கிறாள்; அதிகமாக கவலைப்படுகிறாள். இந்த விஷயத்தில் மேல்தட்டு சோம்பேறிப் பெண்ணை விட்டுத்தள்ளுங்கள்.

பெண்களுக்கு வாழ்க்கைத் தேவைகளைச் சம்பாதித்துக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படாதவரையிலும் அவளை நான்கு சுவர்களுக்கிடையே “ராணி”யாக அடைத்து வைத்திருக்கும் வரையிலும் பெண்ணக்கு விடுதலைக் கிடைக்காது; சமுதாயத்திலும் அவளுக்கு சம உயர்வு கிடைக்காது. பெண் எவ்வித தடையும் இல்லாமல் வாழ்க்கைத் தேவைகளுக்கான உற்பத்தியில் ஈடுபடும்போதே, அவளுக்கு வீட்டு வேளைகள் பெயரளவுக்கு இருக்கும் போதே ‘பெண் விடுதலை’ நடைமுறைக்கு வரும்.

2. தனிச் சொத்துரிமை என்ற அமைப்பின் அடிப்படையில் அருவருக்கத்தக்க பேராசை, கருணையற்ற கல்மனம், மோசமான போட்டி, சமுதாயத்தின் செல்வத்தைச் சுயநலத்திற்காக கொள்ளையடித்தல் என்பவையே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆசான் காரல் மார்க்ஸ்

1.

மதம் மனிதனை, அவனது போராட்ட உணர்வு வேகத்தை தடுத்து முடக்கி விடுகிறது. அது தாழ்வுணர்ச்சியையும், கீழ்படியும் மனப்பான்மையையும் ஊட்டி வளர்க்கிறது. இறுதியில் இன்று நிலை கொண்டுள்ள அமைப்பு முறையை ஒப்புக்கொள்ளச் செய்கிறது. அதே சமத்தில் குறுகிய மனப்பான்மை படைத்த வெறியை உண்டாக்குகிறது. இதர கோட்பாட்டாளர்கள் மீது எவ்வித சகிப்பும் இல்லாமல் சாகும் குணத்தை அதாவது வேறு வெளிச்சத்தில் பார்ப்பவர்களைக் கண்டு சகிக்காத நிலையை உண்டாக்குகிறது.

இந்த சமய சார்பற்ற உலகியல் சார்பின் அஸ்திவாரத்திலேயே உள்ள முரண்பாடுகளில் இருந்துதான், சமுதாய பகைமைகளிலிருந்துதான் மதம் வெளிப்பட்டு தோன்றியது. எனவே மதத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்றால் இன்றைய நிலையிலுள்ள சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றுவது ஒன்றே வழி.

2. முதலாளித்துவவாதி ஒரு புத்திசாலி கஞ்சன்.

ஃபிரெடெரிக்ஏங்கல்ஸ் :

அறிவியலை வணங்குபவர்கள் கம்யூனிஸ்கள்.

பெஞ்சமின்ஃபிராங்களின் :

சர்சுகளின் கோபுரங்களை விட கலங்கரைவிளக்கத்தின் கோபுரங்கள் மிகவும் பயனுள்ளதாகும்.

( மசூதிகள், கோயில்கள் ஆகியவற்றின் கோபுரங்களும் பயனற்றதுதான். )

பெயர் தெரியாத சிலர்

பெருமை கொண்டது கிளி சருகுகளால் “கூடு” கட்டிய குருவியை பார்த்து தான் இருப்பது தங்க”கூண்டு” என்று.

கடவுட்கோட்பாட்டை, ஆத்திகர்களைவிட நாத்திகர்களே சரியாகப்புரிந்து கொள்கின்றனர்.

நீங்கள் கடவுளின் முழுநம்பிக்கையாளர் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் கடவுளின் விசுவாசிகளாக நீங்கள் இல்லை.

நான் உங்களுக்கு கடவுள் நம்பிக்கையாளனாகத் தெரியலாம். ஆனால் கடவுளுக்கு, அவனது விசுவாசத்திற்கு எதிரானவன் நான்.

தராசு தட்டுகளை கொஞ்சம் கண் திறந்து பாருங்கள். அங்கே புறாவின் மாமிசத்தை சிபிகள் உண்ண ஆரம்பித்துவிட்டனர்

பல மூங்கில்கள் வளைக்கப்படும் அவசரத்தில்
முறிக்கப்பட்டு  விட்டதால்
விற்பனை ஆயின விரகுக்கடையில்

மாவோ :

1) ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வர்கத்தின் உறுப்பினராகவே வாழ்கிறார்கள். ஒவ்வொரு சிந்தனையிலும் விதி விலக்கின்றி ஒரு வர்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.

2) தொல்லை கொடுப்பது, தோல்வி அடைவது, மீண்டும் தொல்லை  மீண்டும் தோல்வி…. தமது அழிவு வரை இது மக்களின் இலட்சியத்தை கையாள்வதில் ஏகாதியபத்தியவாதிகளும் பிற்போக்குவாதிகளும் மேற்கொள்ளும் தர்க்கம். அவர்கள் ஒருபோதும் இந்த தர்க்கத்திற்கு விரோதமாக செல்ல மாட்டார்கள். இது ஒரு மார்க்ஸிய விதி. “ஏகாதிபத்தியம் பயங்கரமானது” என்று நாம் கூறும்போது, அதன் இயல்பு ஒருபோதும் மாறாது. ஏகாதிபத்தியவாதிகள் தமது கசாப்புக் கடைக் கத்திகளை கீழே போடமாட்டார்கள். தாம் அழியும் வரை புத்தர்களாக மாறமாட்டார்கள் என்று நாம் கருதிகிறோம்.

     போராட்டம் தோல்வி, மீண்டும் போராட்டம், மீண்டும் தோல்வி மீண்டும் போராட்டம்… தமது வெற்றி வரை இதுதான் மக்களின் தர்க்கம். அவர்களும் இந்த தர்க்கத்திற்கு எதிராக செல்ல மாட்டார்கள். இது இன்னொரு மார்க்ஸிய விதி.. ருஷிய மக்களின் புரட்சி இந்த விதியைப் பின்பற்றியது. அப்படியே சீன மக்களின் புரட்சியும் இவ் விதியைப் பின்பற்றுகிறது.

‘பிரமைகளை வீசி எறிந்து போராட தயாராகுங்கள்’ என்ற தலைப்பில் மாவோ ஆற்றிய உரை. (14 ஆகஸ்ட் 1949).

மகத்தான நிர்மாண வேலையில் மிகக் கடினமான கடமைகள் நம் முன் இருக்கின்றன. நமது கட்சியில் ஒரு கோடிக்கு மேலான உறுப்பினர்கள் இருந்த போதிலும், நாட்டின் முழு மக்கட் தொகையில் அவர்கள் மிகச் சிறுபான்மையினரே ஆவார். நமது பல்வேறு அரசாங்க நிறுவனங்களிலும் பெருமளவு வேலைகள் கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்களால் செய்யப்பட வேண்டியிருக்கின்றன. நாம் பொதுமக்களை சார்ந்து நிற்பதிலும், கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்களுடன் ஒத்துழைப்பதிலும் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாள், இந்த வேலைகளை நன்றாக செய்வது சாத்தியமல்ல. கட்சி முழுவதின் ஐக்கியத்தை தொடர்ந்து பலப்படுத்தும் அதே வேளையில், நமது தேசிய இனங்கள், ஜனநாயக வர்க்கங்கள், ஜனநாயக கட்சிகள், மக்கள் நிறுவனங்கள் எல்லாவற்றின் ஐக்கியத்தையும் தொடர்ந்து பலப்படுத்தி, நமது மக்கள் ஜனநாயக முன்னணியையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும். நமது வேளையில் எந்த தொடரிலும் , கட்சிக்கும் மக்களுக்கும் இடையே ஐக்கியத்தை ஊறுபடுத்தும் ஆரோக்கியமற்ற எல்லா வெளிப்பாடுகளையும் நாம் உணர்வு பூர்வமாக இல்லாமல் செய்ய வேண்டும்.


மாவோ – சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 8ஆவது தேசிய மாநாட்டில் ஆரம்ப உரை. 15 செப்தம்பர் 1956.



8 thoughts on “மேற்கோள்கள்

  1. இறைவன் செயல்@ தற்செயல்

    இப்பிரபஞ்ச ஆக்கமும் அழிவும் அதற்குட்பட்ட அதிகாரமும் அனைத்தும் ஆத்திக நம்பிக்கையாளரின் “எல்லாம் இறைவன்செயல்” என்ற கருத்தியலாகவும்,இப்பிரபஞ்ச ஆக்கமும் அழிவும் அதற்குட்பட்ட அனைத்தும் நாத்திக நம்பிக்கையாளரின் “எல்லாம் தற்செயல்” என்ற கருத்தியலும் இங்கு பிரித்து ஆயப் /மேயப்படுகிறது.

    பிரபஞ்சமும் உயிரின தோற்றமும் இறைவனின் செயலாகும். ஆம். உருவமான இறைவனோ அல்லது அருவமான இறைவனோ தான்தோன்றியாக தன்னை சுயமாக எந்த மூலமும் அல்லாத சூனியத்திலிருந்து உருவாக்கம் செய்யும் வல்லமைபெற்ற சக்தியாகவும் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள உயிரற்ற மற்றும் உயிருள்ள அனைத்தையும் படைத்து பரிபாலித்து பின் தன் இருக்கையை அரியாசனத்தில் அமைத்து அதில் அமர்ந்து கொண்டு மும்மூர்த்தியாக முழுமுதல் கடவுளாக வீற்றுக்கொண்டு படைத்தல் காத்தல் அழித்தல் என நிகழ்த்தி அனைத்தின் விதியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்தும் வருவதாகவும் அதனை முறையே இறைவனின் செயல் தான் அகில அண்டசராசரங்களின் நிர்வாகமும் அவன் கிருபையே திருவிளையாடலே எட்டுத்திக்கும் என்ற வழக்காடல் சொல்லாடல் மனிதனிடையே பாரம்பரிய வாரிசுரிமை சொத்தாக மௌட்டீக பாணியில் வலம் வருவது அனைவரும் அறிந்தது. ஆனால் அந்த கூப்பாடும்அதன் பொய்மொழி கோட்பாடும் ஆய்ந்து அறிய வாய்ப்பில்லாமலும் நிருபணம் செய்யவும் இயலாத வெற்று தத்துவமாக கடைப்பிடிக்கப்பட்டு வாழையடி வாழையாக பின்பற்றப்பட்டும் வருவது நாமறிந்ததே.வெகு காலமாக இக்கோட்பாடு எண்ணவடிவிலே சுழன்று வருகிறது.இதையே ஒரு கருத்தின் மீது கொண்ட காதலாகவும் அதைப்பற்றி விளக்க முற்படுவதும் போது அந்த நம்பிக்கையின் மீது நாம் கொண்ட மோதலாகவும் செயல்படுவது சீரிய சிந்தனையாளருக்கு மட்டும புரியும். அதையே “மதம்” என்ற பதத்தில் மக்கள் நம்புவர். அதாவது ஒன்றின் மேல் அசைக்க முடியாப்பற்று கொண்டும் அறிவின் மேல் இடப்பட்ட திரையாக ஆய்ந்தறியாலாகாத தன்மையை மடமை என்றும் கூறுவர்.

    அல்ல !அல்ல ! இவ்வுலகை இறைவன் என்ற ஒருவன் படைக்கவில்லை.ஏனெனில் இறைவனென்று ஒன்று இப்பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கவில்லை.அதை அறிய இயலாது. ஆய்வுக்கு உட்படுத்தமுடியாது. அது ஒரு கருத்தியல் புலனறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு அழகிய மடமை. அது அறிவுக்கு ஒவ்வாமை தரும்.அப்படியே ஒருவன் இருக்க சாத்தியமோ அதற்கு நாத்திக சாஸ்திரத்தில் விதி என்ற ஒன்றோ கிடையாது. அப்படி இருக்க இறைவன் படைத்தான் எனில் அவனையும் ஒருவன் படைத்திருக்க வேண்டும். அப்படி ஒன்று இந்த லோகத்தில் இடம் பெறவில்லை. எங்களது நாத்திக கடவுளர்களான மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் அதை மறுக்கின்றனர்.ஆகவே அவர்களும் நாத்திக சாஸ்திர தோத்திர வேத முறைப்படி எந்த ஒரு கடவுளும் லோகத்தில் சஞ்சரிக்கவில்லை. பிரபஞ்சத்தில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. அப்படி இருப்பின் அவர் ஒரு பொருளாகவோ அல்லது அருளாகவோ எழுந்தருளி உற்சவ மூர்த்தியாக அவதரிப்பார். திக்கெட்டும் சஞ்சரிப்பார். ஆகவே அவரை மதவாதிகள் இதுவரை தேடிய பணியில் அவரைப்பிடித்து எங்களிடம் நிறுத்தி நிறுவவில்லை.அவரை தொட்டும் முகர்ந்தும் பேசியும் பார்க்கவியலாதால் நாம் அவரை அவர் தன் இருப்பை ஏற்க மாட்டோம். எப்போது எம்முன் பொருளாக எழுந்தருளி எம்புலனுக்கு பொருந்தும் வண்ணம் காட்டமுடியுமோ அப்போது அக்கடவுளை நாம் ஏற்கத்தயார்.அதுவரை நாம் அவரை எங்கள் வருங்கால ஆச்சாரியகளும் ஆசான்களும் கதைக்கும் வரை நம்ப மாட்டோம் ஏற்க மாட்டோம். எந்த ஒன்றும் தானாக உருவாக இயலாது என்ற கிருத்தக வித்தக நாத்திக தோழர்களின் கட்டளைக்கு அடிசாய்ந்து அடுத்த அறிவியலாரின் இறைவன் இருப்பை பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை காத்திருப்போம்.கண்கள் பூத்திருப்போம். ஆகவே இப்பிரபஞ்சம் தற்செயல் என்றும் நம்புவோம்.

    மேற்கண்ட இந்த கருத்தியலான நாத்திகவாதத்தை மதம் சாரா மதம் சார்த்தோர் கதைப்பதும் மக்களறிந்த ஒன்றே.நாத்திக நம்பிக்கையாளரின் கருத்தாவது.”இப்பிரபஞ்சம் மற்றும் பூமியின் உயிர்ச் சூழல் தற்செயலானது”
    பெருமூளையின் செயல்பாடுகளை தவிர்த்தும் சிறு மூளையினை மட்டுமே உபயோகிக்கும் அதை பிரயோகிக்கும் மதவாதிகளின் செயலோடு ஒப்ப்பிடுகையில் பெரு மூளையின் பெரும்பகுதியை கொண்டு பெரும் பெரும் ஆய்வுகள் ஆராய்சிகள் என்று தங்கள் வாழ் நாளையே வீண் செய்த எங்கள் ஆச்சாரியர்களும் ஆசான்களும் அறிஞர்களும் கண்டுபிடித்த தத்துவ மார்க்கமான நாத்திகமே மானுடத்தின் துடர் இடர் நீக்கும் அரு மருந்து சர்வ ரோஹ நிவாரணி எனக்கதைக்கும் நாத்திகர்களும் அவர்களின் மயக்க தத்துவமான எல்லாம் தற்செயல் என்பது அறிவுடமையாகாது. மாறாக மதவாத கிறுக்கர்களின் செயலான மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சிலை காறித்துப்பும் செயலோடு ஒப்புநோக்கையில் நாத்திகனின் செயல் அதனினும் மிகுத்து தலைகீழாக நின்று கொண்டு ஜலத்தையும் மலத்தையும் கழிவதுபோல் உள்ளது.

    மதவாதிகளின் கருத்தை வேறு வழியில் மொழியும்
    “தற்செயல்” என்ற பதம் கருத்தியல் வியுகமாகும். உயிரினத்தோற்றம் தற்செயல் அல்ல. மாறாக அணுக்களின் இயற்பியல் தன்மையும் சூழ்நிலையின் தாக்கமும் கிளர்ச்சியும் இடம்பெறும்போது அதனை நிவர்த்திசெய்ய அதில் தேற தன் இயற்தன்மையை காக்க வேதி வினை புரிவது தவிர்க்கவியலாதது. உயிரினம் வளர்ச்சி,இனப்பெருக்கம் என்ற ஆக்கமும் இனச்சுருக்கம் என்ற அழிவும்,உயிராகவும் உயிரற்றதாகவும் அகத்தாலும் புறத்தாலும் சூழ்நிலையால் நிர்மாணிக்கப்படுகிறது.ஆகவே தற்செயல் என்று ஒன்றில்லை.ஒவ்வொரு அணுவும் தன் இயற்பியல் விதிக்குட்பட்டு செயல்படுகிறது என்றால் மிகையாகாது.

    quranist@aol.com

  2. 2:163, There is no god but He,

    எக்கடவுளுமில்லை அப்படி ஒன்றைத்தவிர !!!

    இயற்கை என்ற இயற்பியல் விதியல்லாத

    வேறு ஒரு இறைவனில்லை என உறுதிப்படுத்த குரான் வாசகங்கள்.

    1. 2:163
    2. 2:255
    3. 3:2
    4. 3:6
    5. 3:18
    6. 3:62
    7. 4:87
    8. 5:73
    9. 6:102
    10. 6:106
    11. 7:59
    12. 7:65
    13. 7:73
    14. 7:85
    15. 7:158
    16. 9:31
    17. 9:129
    18. 10:90
    19. 11:14
    20. 11:50
    21. 11:61
    22. 11:84
    23. 13:30
    24. 16:2
    25. 20:8
    26. 20:14
    27. 20:98
    28. 21:25
    29. 21:87
    30. 23:116
    31. 27:26
    32. 28:70
    33. 28:88
    34. 35:3
    35. 37:35
    36. 38:65
    37. 39:6
    38. 40:3
    39. 40:62
    40. 40:65
    41. 44:8
    42. 47:19
    43. 64:13
    44. 73:9

    quranist@aol.com

  3. //பெரு வெடிப்பும் பெரு வெடிப்பின் முடிவான பெரும் சுருங்குதல்//

    Big Bang
    Big Rip
    Big Crunch
    Big Bounce
    Big Freeze
    Big Contraction

    21:030. the Space and its Mass were one single entity, We then parted asunder?

    21;104.roll up the Space as written scrolls are rolled up. Then, just as We initiated the first , We shall produce a new one (a new Universe).

    quranist@aol.com

  4. கடவுள் யார் ?

    கிரகமா ?

    சந்திரனா ?

    சூரியனா ?

    அப்ரஹாமின் ஆய்வு பின்வருமாறு:

    6:75 .Thus We revealed Abraham the Theory of Space and its Mass Administration, so that he will be of those who have certainty.

    6:76 .When the night covered him, he saw a planet, and he said, “This is my Lord.” But when it disappeared he said, “I do not like those that disappear.”

    6:77. So when he saw the moon rising, he said, “This is my Lord.” But when it disappeared he said, “If my Lord will not guide me, then I will be amongst the wicked people!”

    6:78 .So when he saw the sun rising, he said, “This is my Lord, this is bigger.” But when it disappeared he said, “My people, I am innocent of what you have set up.”

    6:79 .”I shall turn my face to the One who evolved the space and its mass, as a monotheist, and I am not of those who set up partners.

    6:80 .His people argued with him. He said, “Do you argue with me regarding God, when He has guided me? I do not fear what you have set up except if my Lord wishes it so; my Lord encompasses all things with physical laws; will you not remember?”

    quranist@aol.com

  5. QURAN SCIENCE:

    1400 ஆண்டுகளுக்கு முன் இறைவனால் அனுப்ப பட்டவை.
    இந்த உலகத்தில் ஒரு கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என்று நினைத்துக்கொல்லலாம் அது என்னவென்று நம்மலுக்கு தெறியாது அப்படி யென்றால் அதைப்பற்றி யாறுக்கு தெறியும் அதை படைத்தவனுக்கு தான் தெறியும்.1400 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் என்றால் என்ன என்று தெறியாத சூரியன் மற்றும் சந்திரனை ஆச்சரியமாக பாக்ககூடிய அந்த காலத்தில் குர்ஆனை மக்கள் படித்து இருந்தால் அப்போவே சொல்லியிருப்பார்கள் இன்று விண்ஞானிகள் படிக்கிறாற்கள்.எல்லா புகளும் இறைவனுக்கே.

    4:82 أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ ۚ وَلَوْ كَانَ مِنْ عِندِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا

    4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ்

    அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை

    அவர்கள் கண்டிருப்பார்கள்.

    2:2 ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ

    2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை;

    பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்

    2:23 وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ

    2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள

    (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்)

    உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள்

    உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற

    ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

    2:24 فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ ۖ أُعِدَّتْ لِلْكَافِرِينَ

    2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது-

    மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக்

    கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்)

    காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.

    6:50 قُل لَّا أَقُولُ لَكُمْ عِندِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكٌ ۖ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰ إِلَيَّ قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَىٰ وَالْبَصِيرُ أَفَلَا تَتَفَكَّرُونَ

    6:50. (நபியே!) நீர் கூறும்: “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன

    என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்;

    நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம்

    சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்)

    நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்: “குருடனும் பார்வையுடையவனும்

    சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?”

  6. இறை வேதம் என்பதற்கான சான்றுகள்!!!! ******அறிவியல் சான்றுகள்****** * பிற கோள்களிலிருந்து பூமிக்கு வரும் ஆபத்துக்களைத் தடுக்கும் முகடாக வானம் அமைந்துள்ளது – 2:22, 21:32, 40:64, 52:5 2:22 الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ 2:22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். 21:32 وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَّحْفُوظًا ۖ وَهُمْ عَنْ آيَاتِهَا مُعْرِضُونَ 21:32. இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள். 40:64 اللَّهُ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ قَرَارًا وَالسَّمَاءَ بِنَاءً وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ ۚ ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ ۖ فَتَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ 40:64. அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன். 52:5 وَالسَّقْفِ الْمَرْفُوعِ 52:5. உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக! * பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத் திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு என்ற அறிவியல் உண்மை – 86:11 86:11 وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ 86:11. (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக, * மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன என்ற அறிவியல் விளக்கம் – 4:56 4:56 إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُم بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا 4:56. யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். * விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போது மனித இதயம் சுருங்கும் என்ற அறிவியல் உண்மை – 6:125 6:125 فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ ۖ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ ۚ كَذَٰلِكَ يَجْعَلُ اللَّهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يُؤْمِنُونَ 6:125. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் – யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். * பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ முடியும் என்ற உண்மை – 2:36, 7:24, 7:25 7:24 قَالَ اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۖ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ 7:24. (அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் – உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான். 7:25 قَالَ فِيهَا تَحْيَوْنَ وَفِيهَا تَمُوتُونَ وَمِنْهَا تُخْرَجُونَ 7:25. “அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான். * ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவி ஈர்ப்பு விசையே காரணம் என்ற உண்மை – 16:79, 67:19 16:79 أَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ مُسَخَّرَاتٍ فِي جَوِّ السَّمَاءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا اللَّهُ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ 16:79. வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. 67:19 أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ ۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَٰنُ ۚ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ 67:19. இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை – நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன். * விண்வெளியில் எவ்வளவு தொலைவு செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது என்ற பேருண்மை – 17:37 17:37 وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَن تَخْرِقَ الْأَرْضَ وَلَن تَبْلُغَ الْجِبَالَ طُولًا 17:37. மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. * பூமி உருண்டை என்பதை உணர்த்தும் துல்கர்ணைன் பயணம் – 18:90 18:90 حَتَّىٰ إِذَا بَلَغَ مَطْلِعَ الشَّمْسِ وَجَدَهَا تَطْلُعُ عَلَىٰ قَوْمٍ لَّمْ نَجْعَل لَّهُم مِّن دُونِهَا سِتْرًا 18:90. அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை. * பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம் 20:53, 43:10, 78:6 20:53 الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ أَزْوَاجًا مِّن نَّبَاتٍ شَتَّىٰ 20:53. “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்). 43:10 الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَجَعَلَ لَكُمْ فِيهَا سُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُونَ 43:10. அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான். 78:6 أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا 78:6. நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? * பெரு வெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக் கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு – 21:30 21:30 أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ 21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? * கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும் – 23:14 23:14 ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ ۚ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ 23:14. பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் – (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். * நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது – 23:18 23:18 وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ ۖ وَإِنَّا عَلَىٰ ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ 23:18. மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம். * கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது என்ற அறிவியல் உண்மை – 25:53, 27:61, 35:12, 55:19,20 25:53 وَهُوَ الَّذِي مَرَجَ الْبَحْرَيْنِ هَٰذَا عَذْبٌ فُرَاتٌ وَهَٰذَا مِلْحٌ أُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَحِجْرًا مَّحْجُورًا 25:53. அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். 27:61 أَمَّن جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا ۗ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ 27:61. இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். 35:12 وَمَا يَسْتَوِي الْبَحْرَانِ هَٰذَا عَذْبٌ فُرَاتٌ سَائِغٌ شَرَابُهُ وَهَٰذَا مِلْحٌ أُجَاجٌ ۖ وَمِن كُلٍّ تَأْكُلُونَ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُونَ حِلْيَةً تَلْبَسُونَهَا ۖ وَتَرَى الْفُلْكَ فِيهِ مَوَاخِرَ لِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ 35:12. இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் – இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! 55:19 مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ 55:19. அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். 55:20 بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ 55:20. (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. * காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச் சொல்லும் அற்புதம் – 34:12 34:12 وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ ۖ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ ۖ وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ ۖ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ 34:12. (அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்). * வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி – 35:41 35:41 إِنَّ اللَّهَ يُمْسِكُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ أَن تَزُولَا ۚ وَلَئِن زَالَتَا إِنْ أَمْسَكَهُمَا مِنْ أَحَدٍ مِّن بَعْدِهِ ۚ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا 35:41. நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன் * பல கிழக்குகள், பல மேற்குகள் என்று கூறுவதன் மூலம் பூமி உருண்டை என்பதை நிரூபித்தல் – 37:5, 55:17, 70:40 37:5 رَّبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ 37:5. வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன். 55:17 رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ 55:17. இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே; இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே. 70:40 فَلَا أُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغَارِبِ إِنَّا لَقَادِرُونَ 70:40. எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம். * பெரு வெடிப்புக்குப் பின் தூசுப் படலத்திலிருந்து கோள்கள் உருவாயின – 41:11. 41:11 ثُمَّ اسْتَوَىٰ إِلَى السَّمَاءِ وَهِيَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ائْتِيَا طَوْعًا أَوْ كَرْهًا قَالَتَا أَتَيْنَا طَائِعِينَ 41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. * மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்தே தங்கள் எடையை எடுத்துக் கொள்கின்றன என்ற உண்மை – 6:98, 50:4, 71:17 6:98 وَهُوَ الَّذِي أَنشَأَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَمُسْتَوْدَعٌ ۗ قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَفْقَهُونَ 6:98. உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம். 50:4 قَدْ عَلِمْنَا مَا تَنقُصُ الْأَرْضُ مِنْهُمْ ۖ وَعِندَنَا كِتَابٌ حَفِيظٌ 50:4. (மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது. 71:17 وَاللَّهُ أَنبَتَكُم مِّنَ الْأَرْضِ نَبَاتًا 71:17. “அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான். * விண்வெளிப் பயணம் சாத்தியமே என்று அறிவித்தல் – 55:33-35 55:33 يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ 55:33. “மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. 55:34 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 55:34. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? 55:35 يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ 55:35. (மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். * விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம் – 75:4 75:4 بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ 75:4. அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். * உயிரின உற்பத்தியில் பெண்களுக்கும் பங்குண்டு – 76:2 76:2 إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا 76:2. (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் – அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம * தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லை, வயிற்றிலிருந்து வெளியாகின்றது என்ற அறிவியல் – 16:69 16:69 ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ 16:69. “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. * கடலின் மேற்புறத்தில் மட்டுமின்றி கடல் ஆழத்திலும் பேரலைகள் ஏற்படுகின்றன என்ற அறிவியல் கருத்து – 24:40 24:40 أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُّجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّن فَوْقِهِ مَوْجٌ مِّن فَوْقِهِ سَحَابٌ ۚ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا ۗ وَمَن لَّمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِن نُّورٍ 24:40. அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. * அன்னியப் பொருள் எதையும் ஏற்காத கர்ப்ப அறை, கருவை மட்டும் குறிப்பிட்ட காலம் வரை ஏற்றுக் கொள்ளும் அற்புதம் – 13:8 13:8 اللَّهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ أُنثَىٰ وَمَا تَغِيضُ الْأَرْحَامُ وَمَا تَزْدَادُ ۖ وَكُلُّ شَيْءٍ عِندَهُ بِمِقْدَارٍ 13:8. ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது. * பொய் சொல்வதற்கான நரம்புகள் மூளையின் முன் பகுதியில் தான் உள்ளன என்ற விஞ்ஞானக் கூற்றை முன்பே தெரிவித்தது – 96:15,16 96:15 كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ 96:15. அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். 96:16 نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ 96:16. தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை, * காற்றிலுள்ள ஆக்ஸிஜன் நீக்கப்பட்டால் அது அனைத்தையும் அழித்து விடும் என்ற அறிவியல் உண்மை – 51:41,42 51:41 وَفِي عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيحَ الْعَقِيمَ 51:41. இன்னும், “ஆது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக்காற்றை அனுப்பிய போது; 51:42 مَا تَذَرُ مِن شَيْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَالرَّمِيمِ 51:42. அ(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை. * கைகளை விலாப்புறத்துடன் சேர்த்துக் கொள்வது பயத்தைக் குறைக்கும் என்ற மனோதத்துவ உண்மை – 28:32 28:32 اسْلُكْ يَدَكَ فِي جَيْبِكَ تَخْرُجْ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ وَاضْمُمْ إِلَيْكَ جَنَاحَكَ مِنَ الرَّهْبِ ۖ فَذَانِكَ بُرْهَانَانِ مِن رَّبِّكَ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَئِهِ ۚ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ 28:32. உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் – இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்” (என்றும் அவருக்கு கூறப்பட்டது). * விந்து எங்கிருந்து வெளியேறுகின்றது என்ற அறிவியல் உண்மை – 86:7 86:7 يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ 86:7. முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. * வான்வெளியிலும் பாதைகள் உண்டு என்று கூறும் வானியல் விஞ்ஞானம்-51:7 51:7 وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِ 51:7. அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக! * பூமிக்கு ஈர்க்கும் சக்தி உள்ளது என்ற அறிவியல் உண்மை – 13:2, 31:10 13:2 اللَّهُ الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ۖ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۖ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى ۚ يُدَبِّرُ الْأَمْرَ يُفَصِّلُ الْآيَاتِ لَعَلَّكُم بِلِقَاءِ رَبِّكُمْ تُوقِنُونَ 13:2. (இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் – நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். 31:10 خَلَقَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ۖ وَأَلْقَىٰ فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ ۚ وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ 31:10. அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம். * சூரியனும் கோள்களும் ஓடுகின்றன என்ற அறிவியல் உண்மை – 13:2, 31:29, 35:13, 36:38, 39:5 13:2 اللَّهُ الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ۖ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۖ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى ۚ يُدَبِّرُ الْأَمْرَ يُفَصِّلُ الْآيَاتِ لَعَلَّكُم بِلِقَاءِ رَبِّكُمْ تُوقِنُونَ 13:2. (இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் – நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். 31:29 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى وَأَنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ 31:29. “நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்” என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன; அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். 35:13 يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى ۚ ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ۚ وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ 35:13. அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. 36:38 وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ 36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். 39:5 خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ ۖ يُكَوِّرُ اللَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى اللَّيْلِ ۖ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى ۗ أَلَا هُوَ الْعَزِيزُ الْغَفَّارُ 39:5. அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். * சந்திரன் பிளந்தது பற்றியும் அதற்கான சான்று சந்திரனில் பதிவாகி உள்ளது பற்றியும் அறிவித்திருப்பது – 54:1 54:1 اقْتَرَبَتِ السَّاعَةُ وَانشَقَّ الْقَمَرُ 54:1. (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது. * வான் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கின்றது என்ற அறிவியல் விளக்கம் – 51:47 51:47 وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ 51:47. மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம். * உயிரினங்கள் மட்டுமின்றி அனைத்திலும் ஜோடி உண்டு என்ற உண்மை – 13:3, 20:53, 36:36, 43:12, 51:49 13:3 وَهُوَ الَّذِي مَدَّ الْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ وَأَنْهَارًا ۖ وَمِن كُلِّ الثَّمَرَاتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ اثْنَيْنِ ۖ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ 13:3. மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. 20:53 الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ أَزْوَاجًا مِّن نَّبَاتٍ شَتَّىٰ 20:53. “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்). 36:36 سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ 36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். 43:12 وَالَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا وَجَعَلَ لَكُم مِّنَ الْفُلْكِ وَالْأَنْعَامِ مَا تَرْكَبُونَ 43:12. அவன் தான் ஜோடிகள் யாவையும் படைத்தான்; உங்களுக்காக, கப்பல்களையும், நீங்கள் சவாரி செய்யும் கால்நடைகளையும் உண்டாக்கினான் 51:49 وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ 51:49. நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். * உலக வெப்ப மயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பு குறையும் என்ற அறிவியல் முன்னறிவிப்பு – 13:41, 21:44 13:41 أَوَلَمْ يَرَوْا أَنَّا نَأْتِي الْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَا ۚ وَاللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِ ۚ وَهُوَ سَرِيعُ الْحِسَابِ 13:41. பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். 21:44 بَلْ مَتَّعْنَا هَٰؤُلَاءِ وَآبَاءَهُمْ حَتَّىٰ طَالَ عَلَيْهِمُ الْعُمُرُ ۗ أَفَلَا يَرَوْنَ أَنَّا نَأْتِي الْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَا ۚ أَفَهُمُ الْغَالِبُونَ 21:44. எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்? * வான் மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றை அப்படியே முழு விபரத்துடன் விளக்கும் அதிசயம் – 24:43 24:43 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُزْجِي سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهُ ثُمَّ يَجْعَلُهُ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَالِهِ وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مِن جِبَالٍ فِيهَا مِن بَرَدٍ فَيُصِيبُ بِهِ مَن يَشَاءُ وَيَصْرِفُهُ عَن مَّن يَشَاءُ ۖ يَكَادُ سَنَا بَرْقِهِ يَذْهَبُ بِالْأَبْصَارِ 24:43. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் – தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் – அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. * அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் என்பது பற்றிய முன்னறிவிப்பு – 105:1-5, 11:82, 15:74, 26:173, 27:58, 51:33 105:1 أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ 105:1. (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? 105:2 أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ 105:2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? 105:3 وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ 105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். 105:4 تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ 105:4. சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. 105:5 فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ 105:5. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். 11:82 فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنضُودٍ 11:82. எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம். 15:74 فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ 15:74. பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். 26:173 وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا ۖ فَسَاءَ مَطَرُ ال
    1. குர்ஆன் கூறும் ஓட்டை அறிவியல்களை பல தளங்களிலும் பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர். உங்களின் சூரியன் சந்திரன் பற்றிய மடமையை இந்த இணைப்பில் http://iraiyillaislam.blogspot.in/2013/06/28.html தெரிந்துகொள்ளுங்கள்
      துல்கர்னைன் உலகத்தை சுற்றிவந்து பூமி உருண்டை என்று கண்டுபிடித்த மேதமையை இந்த இணைப்பில் http://www.youtube.com/watch?v=Bd3lIVsq4gE தெரிந்துகொள்ளுங்கள்

  7. ***முன்னறிவிப்புகள்***

    * கஃபா ஆலயம் காலாகாலம் நிலைத்திருக்குமென்ற முன்னறிவிப்பு – 2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 29:67, 95:3, 105:1-5, 106:3,4

    3:97 فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ ۖ وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا ۗ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا ۚ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ

    3:97. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) – நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.

    5:97 جَعَلَ اللَّهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ قِيَامًا لِّلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْيَ وَالْقَلَائِدَ ۚ ذَٰلِكَ لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

    5:97. அல்லாஹ், சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு (நன்மைகள் அருளும்) நிலையான தலமாக்கியிருக்கிறான்; இன்னும் சங்கையான மாதங்களையும், (குர்பானி கொடுக்கும்) பிராணிகளையும், (குர்பானிக்காக) அடையாளம் பெற்ற பிராணிகளையும் (அபயம் பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்;) அல்லாஹ் இவ்வாறு செய்தது, நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேயாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன்.

    14:35 وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ

    14:35. நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).

    28:57 وَقَالُوا إِن نَّتَّبِعِ الْهُدَىٰ مَعَكَ نُتَخَطَّفْ مِنْ أَرْضِنَا ۚ أَوَلَمْ نُمَكِّن لَّهُمْ حَرَمًا آمِنًا يُجْبَىٰ إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ رِّزْقًا مِّن لَّدُنَّا وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

    28:57. இன்னும் அவர்கள்: “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்நேர் வழியை (குர்ஆனை) பின்பற்றுவோமானால் எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் தூக்கி எறியப்படுவோம்” என்று கூறுகிறார்கள்; நாம் அவர்களைச் சங்கையான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கும்படி வைக்கவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.

    29:67 أَوَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا حَرَمًا آمِنًا وَيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ ۚ أَفَبِالْبَاطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَةِ اللَّهِ يَكْفُرُونَ

    29:67. அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?

    95:3 وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ

    95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக

    105:1 أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ

    105:1. (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

    105:2 أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ

    105:2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

    105:3 وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ5:

    105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

    105:4 تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ

    105:4. சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

    105:5 فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ

    105:5. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

    106:3 فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ

    106:3. இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.

    106:4 الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ

    106:4. அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.

    * மக்காவாசிகள் வளமான வாழ்வை அடைவார்கள் என்ற முன்னறிவிப்பு – 9:28

    9:28 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هَٰذَا ۚ وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ مِن فَضْلِهِ إِن شَاءَ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ حَكِيمٌ

    9:28. ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே; ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது; (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் – அல்லாஹ் நாடினால் – அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் – நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

    * நபிகள் நாயகம் மக்களோடு கலந்து வாழ்ந்திருந்தும், அவர்களை மனிதர்களால் கொல்ல முடியாது என்று பிரகடனம் – 5:67

    5:67 يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ ۚ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ

    5:67. தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

    * பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஃபிர்அவ்ன் என்பவனது உடல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற முன்னறிவிப்பு – 10:92

    10:92 فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً ۚ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ

    10:92. எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).

    * குதிரை, ஒட்டகங்கள் போன்ற வாகனங்களை மட்டுமே மனிதன் அறிந்திருந்த காலத்தில், நவீன வாகனங்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற முன்னறிவிப்பு – 16:8

    16:8 وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً ۚ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ

    16:8. இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.

    * மக்காவில் முஸ்லிம்கள் அடி உதைகளுக்கு ஆளாகிக் கொண்டிருந்த காலத்தில், விரைவில் இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு – 73:20

    73:20 إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَىٰ مِن ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِّنَ الَّذِينَ مَعَكَ ۚ وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ ۚ عَلِمَ أَن لَّن تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ ۖ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ ۚ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرْضَىٰ ۙ وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِن فَضْلِ اللَّهِ ۙ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ ۖ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ ۚ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا ۚ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا ۚ وَاسْتَغْفِرُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

    73:20. நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

    * முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையாக இருந்த காலத்தில், நபிகள் நாயகத்தின் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு – 17:76, 54:45

    17:76 وَإِن كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا ۖ وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا

    17:76. (நபியே!) உம்மை (உம்முடைய) பூமியிலிருந்து அடி பெயரச்செய்து, அதை விட்டும் உம்மை வெளியேற்றிவிட முனைகிறார்கள்; ஆனால் அவர்களோ உமக்குப்பின்னர் சொற்ப நாட்களேயன்றி (அங்கு) தங்கியிருக்க மாட்டார்கள்.

    54:45 سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ

    54:45. அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.

    * நபிகள் நாயகம் காலத்தில் பாரசீகர்களால் ரோமாபுரி வல்லரசு தோற்கடிக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்டது. ரோமாபுரி வெற்றி பெறும் என்று கற்பனை கூடச் செய்ய முடியாத நேரத்தில், “சில ஆண்டுகளில் ரோமாபுரி, பாரசீகத்தை வெற்றி கொள்ளும்’ என்ற முன்னறிவிப்பு – 30:2,3,4

    30:2 غُلِبَتِ الرُّومُ

    30:2. ரோம் தோல்வியடைந்து விட்டது.

    30:3 فِي أَدْنَى الْأَرْضِ وَهُم مِّن بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ

    30:3. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.

    30:4 فِي بِضْعِ سِنِينَ ۗ لِلَّهِ الْأَمْرُ مِن قَبْلُ وَمِن بَعْدُ ۚ وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ

    30:4. சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

    * நபிகள் நாயகம் அவர்கள் உயிருக்குப் பயந்து மக்காவை விட்டு வெளியேறி அகதியாக இருந்த நிலையில், அவர்கள் மக்காவை வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு – 28:85

    28:85 إِنَّ الَّذِي فَرَضَ عَلَيْكَ الْقُرْآنَ لَرَادُّكَ إِلَىٰ مَعَادٍ ۚ قُل رَّبِّي أَعْلَمُ مَن جَاءَ بِالْهُدَىٰ وَمَنْ هُوَ فِي ضَلَالٍ مُّبِينٍ

    28:85. (நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்” என்று நீர் கூறுவீராக.

    * பாலைவனமாக இருந்த மக்காவுக்கு, உலகின் பல பகுதிகளிலிருந்தும் கனிகள் வந்து சேரும் என்ற முன்னறிவிப்பு – 28:57

    28:57 وَقَالُوا إِن نَّتَّبِعِ الْهُدَىٰ مَعَكَ نُتَخَطَّفْ مِنْ أَرْضِنَا ۚ أَوَلَمْ نُمَكِّن لَّهُمْ حَرَمًا آمِنًا يُجْبَىٰ إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ رِّزْقًا مِّن لَّدُنَّا وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

    28:57. இன்னும் அவர்கள்: “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்நேர் வழியை (குர்ஆனை) பின்பற்றுவோமானால் எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் தூக்கி எறியப்படுவோம்” என்று கூறுகிறார்கள்; நாம் அவர்களைச் சங்கையான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கும்படி வைக்கவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.

    * ஒரு மலைக் குகையில் வேதச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டது பற்றிய முன்னறிவிப்பு – 18:9

    18:9 أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا

    18:9. (அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?

    * முஹம்மது நபியின் பெரிய தந்தையான அபூலஹப் என்பவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்ற முன்னறிவிப்பு – 111:1,2

    111:1 تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ

    111:1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.

    111:2 مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ

    111:2. அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.

    * பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரளயத்தின் போது நூஹ் என்ற இறைத்தூதர் கப்பலில் காப்பாற்றப்பட்டார். அந்தக் கப்பல் ஒரு மலை மீது பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற முன்னறிவிப்பு – 11:44, 29:15, 54:15

    11:44 وَقِيلَ يَا أَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَا سَمَاءُ أَقْلِعِي وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ ۖ وَقِيلَ بُعْدًا لِّلْقَوْمِ الظَّالِمِينَ

    11:44. பின்னர்: “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது – அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.

    29:15 فَأَنجَيْنَاهُ وَأَصْحَابَ السَّفِينَةِ وَجَعَلْنَاهَا آيَةً لِّلْعَالَمِينَ

    29:15. (அப்போது) நாம் அவரையும், (அவருடன்) கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம்; மேலும், அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.

    54:15 وَلَقَد تَّرَكْنَاهَا آيَةً فَهَلْ مِن مُّدَّكِرٍ

    54:15. நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

    * மதீனாவில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த நயவஞ்சகர்கள், விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு – 33:60

    33:60 لَّئِن لَّمْ يَنتَهِ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ وَالْمُرْجِفُونَ فِي الْمَدِينَةِ لَنُغْرِيَنَّكَ بِهِمْ ثُمَّ لَا يُجَاوِرُونَكَ فِيهَا إِلَّا قَلِيلًا

    33:60. முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள்.

    * குர்ஆன் காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படும் என்ற முன்னறிவிப்பு – 15:9

    15:9 إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

    15:9. நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

    ***தர்க்கரீதியான சான்றுகள்***

    * குர்ஆனைப் போல் யாராலும் இயற்ற முடியாது என்று அறை கூவல் – 2:23,24, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34

    2:23 وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ

    2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

    2:24 فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ ۖ أُعِدَّتْ لِلْكَافِرِينَ

    2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.

    10:38 أَمْ يَقُولُونَ افْتَرَاهُ ۖ قُلْ فَأْتُوا بِسُورَةٍ مِّثْلِهِ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ

    10:38. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று.

    11:13 أَمْ يَقُولُونَ افْتَرَاهُ ۖ قُلْ فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهِ مُفْتَرَيَاتٍ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ

    11:13. அல்லது ”இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்கள்? “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் – நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

    17:88 قُل لَّئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا

    17:88. “இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும்.

    28:49 قُلْ فَأْتُوا بِكِتَابٍ مِّنْ عِندِ اللَّهِ هُوَ أَهْدَىٰ مِنْهُمَا أَتَّبِعْهُ إِن كُنتُمْ صَادِقِينَ

    28:49. ஆகவே, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இவ்விரண்டையும் விட நேர்வழிக்காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள்; நானும் அதைப் பின்பற்றுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.

    52:34 فَلْيَأْتُوا بِحَدِيثٍ مِّثْلِهِ إِن كَانُوا صَادِقِينَ

    52:34. ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.

    * குர்ஆனில் முரண்பாட்டைக் காட்ட முடியாது என்ற அறைகூவல் – 4:82, 41:42

    4:82 أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ ۚ وَلَوْ كَانَ مِنْ عِندِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا

    4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

    41:42 لَّا يَأْتِيهِ الْبَاطِلُ مِن بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ ۖ تَنزِيلٌ مِّنْ حَكِيمٍ حَمِيدٍ

    41:42. அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் – (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.

    * முந்தைய வேதங்களில் மத குருமார்கள் மறைத்தவற்றை எழுதப்படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் மூலம் குர்ஆன் வெளிப்படுத்தியது – 3:93, 7:157, 48:29

    3:93 كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِي إِسْرَائِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسْرَائِيلُ عَلَىٰ نَفْسِهِ مِن قَبْلِ أَن تُنَزَّلَ التَّوْرَاةُ ۗ قُلْ فَأْتُوا بِالتَّوْرَاةِ فَاتْلُوهَا إِن كُنتُمْ صَادِقِينَ

    3:93. இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டு வந்து அதை ஓதிக்காண்பியுங்கள்” என்று.

    7:157 الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِندَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنجِيلِ يَأْمُرُهُم بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ ۚ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ ۙ أُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

    7:157. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ – அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.

    48:29 مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ ۚ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ ۖ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا ۖ سِيمَاهُمْ
    فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ ۚ ذَٰلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ ۚ وَمَثَلُهُمْ فِي الْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَىٰ عَلَىٰ سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ ۗ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

    48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் – ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.

    * இறைத் தீர்ப்பு பெறுவதற்காகப் பிற மதத்தவர்களுக்கு அறைகூவல் விட்ட நபிகள் நாயகத்தின் ஆன்மீக பலம் – 3:61

    3:61 فَمَنْ حَاجَّكَ فِيهِ مِن بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ

    3:61. (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!” என நீர் கூறும்.

    * இறை அதிகாரத்தில் நபிகள் நாயகத்துக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அறிவிப்பதன் மூலம் தர்க்க ரீதியாக இறைவேதம் என்று நிரூபித்தல் – 3:28

    3:28 لَّا يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِن دُونِ الْمُؤْمِنِينَ ۖ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَن تَتَّقُوا مِنْهُمْ تُقَاةً ۗ وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ ۗ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ

    3:28. முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.

    * குருடரைப் புறக்கணித்த நபிகள் நாயகத்தைக் கடுமையாகக் கண்டிக்கும் வசனத்தையும் மக்களுக்கு ஓதிக் காட்டி, தர்க்க ரீதியாக இறைவேதம் என்று நிரூபித்தல் – 80:1-8

    80:1 عَبَسَ وَتَوَلَّىٰ

    80:1. அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.

    80:2 أَن جَاءَهُ الْأَعْمَىٰ

    80:2. அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,

    80:3 وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ

    80:3. (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?

    80:4 أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ

    80:4. அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.

    80:5 أَمَّا مَنِ اسْتَغْنَىٰ

    80:5. (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-

    80:6 فَأَنتَ لَهُ تَصَدَّىٰ

    80:6. நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.

    80:7 وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ

    80:7. ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.

    80:8 وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ

    80:8. ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,

    * நபிகள் நாயகம், தமது தூய வாழ்க்கையைத் தமது நம்பகத் தன்மைக்குச் சான்றாக ஆக்கி, அதன் மூலம் தாம் கொண்டு வந்த வேதம் உண்மையானது என்று நிறுவுதல் – 10:16

    10:16 قُل لَّوْ شَاءَ اللَّهُ مَا تَلَوْتُهُ عَلَيْكُمْ وَلَا أَدْرَاكُم بِهِ ۖ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِّن قَبْلِهِ ۚ أَفَلَا تَعْقِلُونَ

    10:16. “(இதை நான் உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்; நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் – இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

பின்னூட்டமொன்றை இடுக