நாட்டு நடப்புகள் பற்றிய செய்திகள்

(கட்டுரைகளை முழுமையாகப் படிக்க தலைப்புகளில் சொடுக்கவும்)

1.நவம்பர்-புரட்சிதின-விழா -சிவகங்கை

நவம்பர் 7 ரஷ்யப் புரட்சி நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள்

இடம்: சிவகங்கை

கடுமையான உழைப்பிலும், வறுமையிலும், பட்டினியிலும் சிக்கிச் செத்துக் கொண்டிருக்கிற பாட்டாளி வர்க்கமானது, நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்கிற கேள்வியை வரலாறு நெடுகிலும் கேட்டுக் கொண்டே வந்தது.
அந்த கேள்விக்கு பதில் கிடைத்த நாள் தான் நம்பர் 7-1917. பதில் கிடைத்த இடம் ரஷ்யா.

2. நித்யானந்தா: அம்பலமாகும் ஆன்மீகம்

தனது கவர்ச்சிகரமான பேச்சுத் திறமையைக் குறைந்தபட்ச மூலதனமாகவும், துதி பாடும் ஊடகங்களின் வியாபாரக் குணத்தை அதிகபட்ச மூலதனமாகவும் கொண்டு 2010 பிப்ரவரி 28 வரை தனது எல்லாவிதமான மகிமைகளோடும், புகழோடும், கீர்த்தியோடும், கடந்த இருபது வருடங்களாகப் பக்தர்களுக்கு ஆசி வழங்கி மிகவும்….

— குருசாமி மயில்வாகனன்


3. பசும்பொன் குருபூசை

குருபூசை என்ற பெயரில் தேவர் சாதிகும்பல் இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மாவட்டங்களில் நடத்தும் காலித்தனத்திற்கும், அதனால் அம்மாவட்டங்களின் பொதுமக்கள் படுகின்ற துன்ப, துயரங்களுக்கும் அளவில்லாமல் போய்விட்டது. போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் பிரதான சாலைகள் அனைத்தும் 30.10.09 அன்றும் காலை 06.00மணிமுதல் முற்றாக அடைக்கப்பட்டன. இதனால் போக்குவரத்தில் இருந்த பொதுமக்கள் பட்ட சிரமங்கள் சொல்லிமாளாது.

— நாகராசன்

4.முஸ்லீம்களின் ஓட்டுக்களை அடமானம் வைக்கும் சந்தர்ப்பவாத அமைப்புகள்
 

கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் தி,மு,க, கூட்டணியில் இருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (த,மு,மு,க,) இப்போது நேர்ஏதிராக அ,தி,மு,க,வை ஆதரிக்கிறதாம், அப்போது. அ,தி,மு,க,வை ஆதரித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் (த,த,ஜ,) 5% இடஓதுக்கீடு கொடுத்தால் தி,மு,க,வை ஆதரிக்குமாம்.

— அர்ஷத்

5.தினமலரின் கார்பரேட் விசுவாசத்தை திருத்த முடியுமா !

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் நாடு முழுக்க நாறிக்கொண்டிருக்கிறது. “பிழைக்கத் தெரிந்தவன்”, “முதல் போட்டவன் இலாபம் சம்பாதிக்கத்தானே செய்வான்” என்றெல்லாம் முதலாளிகளின் திருட்டுக்கு நியாயம் கற்பிக்கும் மேட்டுக்குடியும், அரசு அதிகார வர்க்கமும் 1,76,000 கோடி ஊழல் என்றதும் சற்று கலக்கம் அடைந்துவிட்டது. சாவு விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது தொழிலாளிகள்தானே என்று தனியார்மயம், தாராளமயத்தை உச்சிமுகர்ந்து கும்மாளமிட்ட இவர்கள் அடுத்த இலக்கு தாம்தான் என்பதை புரிந்துகொண்டதும் வழி தெரியாது விழிபிதுங்கி நிற்கின்றன. முதளாளிகளின் பகற்கொள்ளைகளால்

— சாகித்


6. முற்போக்கு ஜோதிடர் புனிதப் பாண்டியனின் புரட்சி ஆரூடம்

தமிழகத்தில் தலித் முரசு என்று ஒரு பத்திரிகை, அதற்கு புனிதப்பாண்டியன் என்று ஒரு ஆசிரியர், அவர்களுக்கென்று ஒரு அரசியல், வேலைத்திட்டம் அனைத்தும் தேவனால் வழங்கப்பட்டிருக்கின்றன! குறிப்பாக மார்க்சியத்தை சாதி என்கிற பாதுகாப்பு வளையத்திற்குள் நின்று கொண்டு தாக்கி தலித் மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச் செய்வதும், மார்க்சியத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளச்செய்வதும் தான் இவர்களுக்கு இடப்பட்ட திருப்பணி …

—சரவணன்

7. மேநாள் சூளுரை ஏற்போம்

அடிமைகளின் எழுச்சி! ரோமானிய கனவான்கள், பிரபுக்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. ரோமானியப் பேரரசு ஆறாயிரத்திற்கு மேற்பட்ட அடிமைகளை சிலுவைகளில் அறைந்து, உயிரோடு சித்திரைவதை செய்து, நரமாமிசத்தினை தின்று தீர்த்தாலும் நிம்மதியாக தூங்கவில்லை. நித்தம் கனவில் அடிமைகளின் உரமேறிய கைகள். எத்தனை நாளைக்குத்தான் செத்து செத்து பிழைப்பது ஆயிரக்கணக்கான அடிமைகளின் உழைப்பில் உல்லாசமாக வாழ்ந்த சொர்ணபுரியின் கனவான்கள்…

— சாகித்

8. மேநாள்

மே நாள்!

தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சிநாள். சிகாகோ தொழிளார்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றியின் 125ஆம் ஆண்டு நினைவு நாள். அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி அவர்களின் பாதையில் போராட சூளுரை ஏற்கும் நாள்.

இன்று இந்த நாளை ஒருதீபாவளி கொட்டாட்டம்போல் புரிந்துகொண்டு சடங்குத்தனமாக கொண்டாடாத கட்சிகளே இல்லை. மேதினத்தை கொண்டாடிய சிலகட்சிகளின் கிளை பொறுப்பாளர்களிடம் “மே தின வரலாறு” என்ன? என்று கேட்டால்“எட்டு மணிநேர மட்டுமே வேலை செய்யும் உரிமை வேண்டி ரஷ்யாவில் (?!!)…

— சண்டாளன்

9. குட்டிச் சுவர்

நீண்ட வருடங்களுக்கு பிறகு என் குட்டிசுவத்து மேட் (க்ளாஸ்மேட் ஸ்கூல்மெட் மாதிரி) நண்பனை கோவை வ உ சி  பூங்காவில் சந்தித்தேன். குட்டி சுவராகவே மாறிவிடுவான் என எல்லாராலும் சபிக்கப்பட்டவன்  இப்போது பெரிய தொழிலதிபர் ஆகியிருந்தான். பத்து வருட நினைவுகள் என்னுடன் இருந்த நண்பனிடமும் அவனுடன் இருந்த நண்பருடனும் மீளாய்வு செய்து பகிர்ந்துகொண்டோம். அதில் அந்த குட்டி சுவரும் முக்கிய இடம் பிடித்துக்கொண்டது…

— சண்டாளன்

10. இன்றைய ஓட்டுப் பொறுக்கி அரசியலும் மக்களின் நிலையும்

ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? நாம உழைத்தால்தான் நமக்கு சோறு! இது சாதாரணமாக அனைத்து தரப்பு உழைக்கும் மக்கள்களும் சொல்லுகின்ற பதில். இந்த பதில் சாதாரணமாக ஏன் எழுகிறது? அரசியல்வாதிகள் என்றால் தன்னை பெரும்பான்மையான மக்களுக்காக அர்பனித்து சேவை செய்வதற்கானவர்கள் என்று நம்பிய காலம் போய், மாறாக அரசியல் ஒரு பெரிய தொழில்கூடம் அதில் யார் அதிக முதலீடு செய்து பதவிக்கு வருகிறார்களோ அவர்கள் பெருத்த லாபம் அடையளாம் என்ற …

— வேப்பங்காய்

Advertisements

5 thoughts on “நாட்டு நடப்புகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s