தோழர் லெனின்
தோழர் லெனின்

பொதுவுடமைப்பற்றி புரிந்துகொள்வதற்கு ஒரு பக்கமா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். சொல்லிலே அதன் பொருள் புரிந்தாலும் பலருக்கும் பலவித சந்தேகங்கள். எடுத்துக்காட்டாக “பணக்காரனை எல்லாம் ஏழையாக்குவது — அதாவது நிலப்பறிப்பு, சொத்துபறிப்பு மூலம் உடமைகளை பரவலாக்கும்போது ஒருவருடைய சொத்துக்களை அநியாயமாக பறித்துக்கொள்வது— , எல்லோரும் பணக்காரர்களாகிவிட்டால் வேலை செய்ய எவன் வருவான், புரட்சி புரட்சின்னு கத்திக் கொண்டிருக்கிறீர்களே எப்ப புரட்சி வரப்போகுது, தோழர் நீங்க எப்ப புரட்சி செய்ய போகப் போறீங்க,” இன்னும் பல பலவிதமான அப்பாவித்தனமான கேள்விகளைபடித்த அறிவாளிக்கூட  கேட்ட வண்ணம் இருக்கின்றனர்.

ஒரு தத்துவத்தை ஒரு கட்டுரையின் மூலம்மட்டும் எளிதாக விளக்கிடமுடியாது. அதுபோல தத்துவங்களைப் படிப்பது மூலமாகவும் முழுதாக புரிந்து கொள்ள முடியாது. அதனை நடைமுறை மூலமாக, அல்லது அது போன்ற வாழ்க்கை அனுபவங்களை படித்துணர்வதன் மூலம் அறிந்து கொள்வதுதான் எளிதாக இருக்கும். அதனால் நாம் இவ்விடுக்கையின் மூலம் அதற்கான சிறந்த நூல்களைப்பற்றிய குறிப்புகளுடன் இப்பக்கத்தில் அறிமுகம் செய்கிறோம்.

சற்று விரிவாகப் படிக்க புத்தகத்தின் தலைப்புகளில் சொடுக்கவும்

1. வாழ்காவிலிருந்து கங்காவரை

ஒரு சிந்தனையாளரின் தன் வாழ்நாள் முழுவதும் தேடித்திரட்டிய அறிவுச் செல்வம் இந்நூலிலேயே எளிமையான கதை வடிவங்களில் அள்ளித் தரப்பட்டுள்ளது.

இந்நூலின் தொடக்க கதைகளான நிஷா, திவா, அமிர்தாஸவன், புருதன் என்ற நான்கும் ஏறக்குறைய கி.மு.6000த்திலிருந்து கி.மு.2500 வரையிலான காலகட்டத்தில் மனித சமுதாயம் வாழ்ந்த நிலையை விளக்குகிறது.

2.ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

பொருளாதார அடியாள்கள் என்று அனழக்கப்படுபவாகள் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள் உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்னளயடிக்கும் பணிக்காக அவர்களுக்கு பெரும் பணம் ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பொருளாதார நிபுணர்கள். உலக வங்கி, சர்வதேச வளர்ச்சிக்கான அமேரிக்க ஐக்கிய நாட்டு நிறுவனம் (US Agency for International Development USAID) மற்றும் இவற்றைப் போன்ற பன்னாட்டு நிதி “உதவி” அமைப்புகளில் குவிந்திருக்கும் பணப்பெட்டிகளுக்கும் இப்பூமியின் இயற்கை வளங்களைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் சில பணம் படைத்த குடும்பங்களின் சட்டை பைகளுக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இவர்களின் வேலை.


3. டாக்டர் நார்மன் பெத்யூன்


மருத்துவர்கள் மக்களது ஆரோக்கியத்தை மேன்மைபடுத்துவதற்கு தங்களை அர்பணித்துக் கொள்ளவேண்டும். இந்த கருதுகோள்படி எத்தனை மருத்துவர்கள் இங்கே மருத்துவம் செய்கிறார்கள்? அப்படி இருப்பதற்கு அவர்களைக் குறைகூற முடியுமோ? முடியாது. அப்படிச் சொல்வதும் தப்பு. நமது நாட்டில் அனைத்து இடங்களிலும் நீர் வினியோகம், கழிவுச்சாக்கடைக்குழாய்கள், சுகாதாரம், மின்சாரம் மற்றும் மற்ற
சேவைகளை எல்லாம் கேள்வி முறையில்லாலமல் முறையாக தரப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் அதை அடிப்படையான மருத்துவச் சேவையில் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை.

பின்னூட்டமொன்றை இடுக