இது பறையோசையின் உங்கள் கவிதையின் பக்கம்.
இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிகள். கவிதைகள் இலக்கியத்தின் மகுடங்கள். நவீன புதினங்களிலும் உணர்வின் நரம்பினை மீட்டுவதில் வல்லமை பெற்றவை கவிதைகள். இசையும் தாளமும் உள்ளமைந்திருப்பதே இதன் உயர் சிறப்பிற்கு காரணம். மரபுக் கவிதைகளிலிருந்து புதுக்கவிதைகள் வரையறுக்கப்பட்ட இசை மரபுகளை மீறுவதும் வளர்சிக்கான வகைப்பாடுதான். வரையறுக்குள் கட்டுண்டு கிடப்பதும் பழமையைச் சுமக்கும் மனக்கோளாறுதான்.
நண்பர்களே! தோழர்களே! இது உங்கள் பக்கம். எப்படிவேண்டுமானாலும் எழுதுங்கள். கிறுக்குங்கள்.

(முழுமையாகப் படிக்க தலைப்புகளில் சொடுக்கவும்)

1. டுபாக்கூர்-கவிதைகள்

நகுலன் –பூனை –ஹவி

1
கவிதையைப் படித்து முடித்ததும்
பக்கத்தில் வந்து நின்றது பூனை
என்ன படித்தாய்
பூனையைப் பற்றிப் படித்தேன்
பூனையைப் பற்றி என்ன படித்தாய்…

— குருசாமி ரயில்வாகணன்

2. மனிதா-எப்போது-நீ-உணர்வாய்

மனிதா எப்போது நீ உணர்வாய்?
கருவாகி உருவாகி
ஐம்புலனும் உண்டாகி
தாயின் கருவறையில்
மனிதனாய் உயிர்ப்பெற்றாய்!

தாய் சொல், தகப்பன் சொல்
ஏனையோர் சொல் கேட்டாய்!
அனுபவத்தில் தவறுணர்ந்தாய்
தவறால் அறிவுணர்ந்தாய்! …

—புரட்சிகர ஜீவன்

3. என் கேள்விகள் தொடர்கின்றன

என்

கேள்விகள் தொடர்கின்றன.

சிறுவனாயிருந்த போது

கடவுள் எப்படியிருபாரென்று?

இளைஞனாயிருந்த போது

கடவுள் தண்டித்துவிடுவாரோயென்று?

கணவனாயிருந்தபோது

கடவுள் காப்பாற்றுரா என்று?

தகப்பனாயிருந்த போது ….

— கலை

4. தொடர்பில் மட்டும்

தோழர்! மது அருந்தாதீர்கள்….

நான்

தொடர்பில் இருப்பவன்தானே தோழர்.

தோழர்! பெண்களை ஆபாசமாகப் பார்க்காதீர்கள்.

நான்

தொடர்பில் இருப்பவன்தான் தோழர். …

— கலை

5. ஆணாதிக்கமே பெண்ணுரிமைகளாக

பெண்மையின்

நன்மைகள்

கருதியேயென்று

அசரீரியாக விழுந்த வசனங்கள்

ஆணாதிக்கமாக தெறித்த விளைநில உவமைகள்

நிம்மதிக்காக படைக்கப்பட்ட யோனிகள்

தகாத உறவுக்காக வளைக்கப்பட்ட அடிமைகள்

மிகுஆண்மைக்காக வாழ்க்கைப்பட்ட விதவைகள்

நுகர்வுக்காக மணக்கப்பட்ட பாலகி…

— கலை

3 thoughts on “உங்கள் கவிதைகள்

    1. ஆமாம். தாராளமாக அணைவரும் உள்ளேவரலாம். மாற்றுக் கருத்துள்ளவர்கள்கூட கட்டுரையாக எழுதலாம். பின்னூட்டங்களில்விட கட்டுரைகளில், கவிதைகளில் விரிவாக தமது கருத்துக்களை முன்வைக்கலாம் அல்லவா! ஒரே ஒரு நிபந்தனை. ஆபாசங்களும், வன் சொற்களும் திருத்தப்படுவதற்கு உட்பட்டுதான்.

  1. அவமானங்களே அடையாளங்களாய்

    கொப்பரைத் தேங்காயின்
    மூடிகளில் குழம்பிகள்
    செவிப்பறையைத் தீய்க்கும் வார்த்தைகள்
    உச்சியில் சுருக்கெனும்
    அச்சிலேற்ற இயலா வர்ணனைகள்
    அவமானங்களே அடையாளங்களாய்,
    உருப்பினை காப்பதற்காய்,
    செருப்பினை துறந்த கூட்டம்
    கற்பினை விலைபேசும்
    ஆலமரத்தடி அதிகாரம்
    புலியிட்ட வண்ணமாய் உடல் கொண்ட
    இளவல்களின் தேகங்கள்
    இடுப்பினில் இறங்கியே கிடைக்கும்
    எங்கள் தோளங்கிகள்,
    சட்டைகள் சலவையிட்டு
    பெட்டிகளிலே பத்திரமாய்

பின்னூட்டமொன்றை இடுக