முத்தலாக் சட்ட வரைவு – காலத்தின் கட்டாயம்


எனது கருத்து:

  1. முதல் விதி எந்த வடிவிலும் முத்தலாக் என்றுச் சொல்லி மணமுறிவு செய்வது செல்படியற்றதும் சட்டத்திற்கு புறம்பானதும் என்கிறது.
    சட்டத்துக்குப் புறம்பானது என்னும் போது அந்த சங்கதி நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பது பொருளாகும்.
    இது மிகச் சரியானதே. ஒரு சங்கதி நீதி மன்றத்திற்கு வரவேண்டும் என்றால் தனிநபரால் அல்லது ஒருகுழுவால் நீதி வழங்கப்படுவதை இரத்து செய்யத்தானே வேண்டும்!
  2. இரண்டாவது விதி அவ்வாறு நீதிமன்றத்திற்கு வெளியில் மணமுறிவு சொல்கிராறோ அவருக்கான மூன்றாண்டுகள் வரை தண்டனை என்று சொல்கிறது.
    ஒன்றை குற்றம் என்றுச் சொன்னபின் அதற்கான தண்டனை என்ன என்பதையும் சொன்னால்தான் அது சட்டம். அதனால் இதுவும் சரியானதே. பிடியாணையின்றி கைது செய்யவும் பிணையில் வரமுடியாத வழக்காவும் இது இருக்கும்.
  3. இது கைது செய்யக்கூடிய வழிமுறைக்கான சட்டம். இதுவன்றி காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிய முடியாது. இதுவும் சரியானதே. பிடியாணையின்றி என்பதை கீழே பாரப்பொம்.
  4. அடுத்த இரண்டு விதிகளும் ஜீவனாம்சம் மற்றும் குழந்தைகளை பெண் தனது பெறுப்பில் வைத்துக்கொள்ளும் உரிமை பற்றியது.
    அதிகமாக தவறு என்று பேசப்பட்டவைகள் 2 மற்றும் 3ல் உள்ள பிரச்சனைகள்.

ஒரு பெண் தனது கணவன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி அவனை பழிவாங்க இச்சட்டம் பயன்படும் என்கின்றனர்.

ஒருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் அந்த வழக்குக்கு அல்லது அந்த புகாருக்கு போதுமான ஆதாரம் இருக்கிறதா என்று காவல் ஆணையாளர் அறிந்து முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்த பிறகே கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பார். ஒரு வேளை அவரும் ஏதோ ஒரு வகையில் அப்பொண்ணுக்கு சாதகமாக கைது செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். முதல் தகவல் அறிக்கையில் போதுமான ஆதாரம் இருக்கிறதா என்று சரிபாரத்தே நீதிபதி நீதிமன்றக் காவலுக்கு (சிறைக்கு) அனுப்புவார். அதன் பிறகு வழக்கு விசாரணை குற்றம் உறுதி செய்யப்பட்டால்தான் தண்டனை. குற்றம் உறுதி செய்யப்பட்டால் தண்டனை வழங்குவதுதானே முறை. அதனால் நீதிமன்றத்திற்கு வெளியில் மணமுறிவு எவர் சொல்கிராறோ அவருக்கான தண்டனை என்ன என்பதை சட்டம் சொல்வது எப்படித் தவறாகும்?

அடுத்ததாக பிடியாணை.– பொருளாதாரக் குற்றங்கள் தவிர்த்து பிற அணைத்துக் குற்றங்களுக்கும் பிடியாணைப் பெற வேண்டும் என்று சட்டம் இல்லை. அதனால் இது முஸ்லீம் ஆண்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக வகுப்பட்ட விதிமுறை என்பது வெற்றுக் கூச்சல்.

அடுத்ததாக பிணை கிடையாது. —– பிணை கிடையாது என்று குறிப்பிடாது உள்ள சட்டப் பிரிவுகளில் கைது செய்தால் விசாரணைக்குப் பிறகு காவல் துறையினரே குற்றவாளியின் சொந்த ஜாமினில் பிணை வழங்கி வெளியில் விடலாம். அல்லது மெஜிஸ்ரேட் முன் நிறுத்தும்போது அவர் குற்றவாளியின் சொந்த ஜாமினில் பிணை வழங்கிவிடுவார். பிணை கிடையாது என்ற சட்டப் பிரிவுகளில் கைது செய்தால் நீதிமன்ற காவலில் வைத்துப் பிறகு மெஜிஸ்டரேட் விசாரணக்குப் பிறகு பிணை வழங்கலாம். அது மெஜிஸ்டரேடின் விருப்பம். கீழ் நீதிமன்றத்தில் கொடுக்காவிட்டால் மேல் நீதி மன்றங்களில் முயற்ச்சி செய்து பெறலாம். 90 நாட்களுக்குக்குள் குற்றப் பத்திரிக்கை காவல் துறையினரால் சமர்பிக்கப்படவில்லை என்றால் குற்றம் சுமத்தப்பட்டவர் 90 நாட்களுக்குப் பிறகு எளிதாக பிணை வாங்கிவிடலாம். வெளியில் விட்டால் சட்ட ஒழுங்குக்கு ஆபத்து என்றோ அல்லது குற்றம் சுமத்தப்பட்டவர் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவார் என்ற காரணங்கள் இருப்பின் பிணை வழங்காது வழக்கு நடக்கும். இந்த விலக்குத் தவிர பிற வழங்குகளில் பொதுவில் கீழமை நீதிமன்றங்கள் அல்லது மேல் நீதிமன்றங்கள் பிணை வழங்கிவிடும். அதனால் பிணை கிடையாது என்ற இந்த வழக்குகில் மூன்றாண்டுகள் வரை சிறையிலிருப்பார் என்று கருதுவது தவறு.

அடுத்து ஜீவனாம்சம். —– கைது செய்து சிறையில் அடைத்துவிட்டால் எப்படி ஜீவனாம்சம் கொடுப்பார் என்று சிறுபிள்ளைத் தனமாகப் பேசுகின்றனர். ஒருவர் சிறையிலிருந்தாலும் அவரது வருமான மூலத்திலிருந்து கொடுக்க வேண்டும். அல்லது சொத்திலிருந்து கொடுக்க வேண்டும். இந்த ஜீவனாம்சம் குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டிக்கப்படும்போது மட்டுமே நிரந்தரமாகும். அதுவரை குற்றம் சுமத்தப்பட்டவர் வருமானத்தின் மூலத்திலிருந்து இடைக்கால நிவாரணமாக ஏதேனும் மெஜிஸ்டரேட் அவர்களால் தீர்மானிக்கப்பட்டு வழங்க உத்தரவிடலாம்.

மேலும் நாம் சமூக நிலைமையையும் பார்க்க வேண்டும். இஸ்லாமிய ஜமாத்துகள் பெரும்பாலும் ஆண்களுக்கு பலனளிப்பதாகவே செயல்பட்டு வருவது வெளிப்படையான ஒன்றே. ஏறக்குறைய முப்பதாண்டுகாளாக இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்காக புதுகோட்டையைச் சேர்ந்த திருமதி சரிபா அவர்கள் “ஸ்டெப்ஸ்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி போராடிக்கொண்டுதான் இருக்கிறார். அவருக்குக் கிடைத்த பலன் அருவருக்கத்தக்க அடைமொழிகள்தான். நீதிபதிகள் ஜமாத்தின் ஆண்களாகவே இருக்கும்போது அவர்களுக்கு உரிமைகள் கிடைக்கும் என்பது வெற்றுக் கனவு. இப்பிரச்சனையை நீதிமன்றங்களின் வழியாக தீர்க்கப்படும்போதுதான் ஓரளவாவாது இஸ்லாமியப் பெண்களுக்கு உரிமைகள் உறுதியாகும். ஆம் ஓரளவுதான். நீதிமன்றங்களுக்கு அல்வா கொடுப்பது ஒன்றும் பெரியகாரியமில்லைதானே.

முத்தலாக் சட்ட வரைவு சரியானதே. அதன் நகலையும் நகலை தமிழில் மொழிபெயர்த்தும் கீழே கோப்புகளாக இணைத்துள்ளேன். தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisements

திருப்பாவை & நாச்சியார் திருமொழி


Vernia WebTech

திருப்பாவை & நாச்சியார் திருமொழி

அன்பான நண்பர்களே

வணக்கம்!

தரவிறக்கம் செய்துகொள்ளும் முறையையும் அதற்கான விலையில்லா செயலியினை தரவிறக்கம் செய்துகொள்ளும் வழிமுறைகளையும் எமது புத்தக விற்பனை பக்கத்தில் விரிவாக தந்துள்ளோம்.

எமது இணையதளத்தில் தரவிறக்கம் முற்றிலும் இலவசம்.

தொடர்ந்து தங்களின் ஆதரவினை வேண்டுகிறோம்.

நன்றி!

இவன்,

வெர்னியா டிஜிடல் சிஸ்டம்.


தரவிறக்கம் முற்றிலும் இலவசம்.

Get it on Google Play

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்


Vernia WebTech

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்

வணக்கம்!

தரவிறக்கம் செய்துகொள்ளும் முறையையும் அதற்கான விலையில்லா செயலியினை தரவிறக்கம் செய்துகொள்ளும் வழிமுறைகளையும் எமது புத்தக விற்பனை பக்கத்தில் விரிவாக தந்துள்ளோம்.

விலை ரூ 25.00 மட்டுமே.

தொடர்ந்து தங்களின் ஆதரவினை வேண்டுகிறோம்.

நன்றி!

இவன்,

வெர்னியா டிஜிடல் சிஸ்டம்.


Get it on Google Play

ஆண்டாள்


இன்று இரவு ஒரு கனவு. காலை மூன்று மணிக்குப் பிறகு தூக்கம் வரவில்லை. அந்த கனவுடன் சில ஒட்டுக்கள் போட்டு ஒரு குட்டிக் கதை.

அவன் ஊரின் நடுவில் நின்றுகொண்டு “தேவடியா புள்ளைங்களா “ என்று பொதுப்படையாகக் கத்தினான். அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் என்னடா என்பது போல் பார்த்தனர். அவன் கொஞ்சம் மது அருந்தியவானாக தெரிந்தது.

மீண்டும் கத்தினான் “ஏன்டா தேவடியா புள்ளைங்களா, உங்களுக்கு சூடு சொரணை கிடையாதா? கல்யாணத்துக்கும் அவனைத்தான் கூப்புடுறீங்க கருமாதிக்கு அவனத்தான் கூப்புடுரீங்க; தேவுடியாக்கு புறந்தவைங்கன்னு சொல்றவனுக்கு கைகட்டி நிங்கிறீங்களடா “

அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் சத்தம் கேட்டு வெளியே வந்தவர்களும் கோவம் தலைக்கேற அவனைச் சுற்றி சூழ்ந்தனர்.

அவன் பள்ளிக்கூடத்திலுள்ள பார் கம்பிகளை முழுதாக பயன்படுத் தண்டால் பஸ்கி செய்த கட்டுமஸ்தான உடம்பு. அதனால் நெருங்கி அடிக்க அச்சப்பட்டுக் கொண்டு நின்றனர். பூனைக்கு யார் மணிகட்டுவது? எலிகள் போல் கோவமும் அச்சமும் அவர்களிடம் தெரிந்தது.

அவன் எட்டிப்போய் இரண்டு பேருடைய வேட்டியை சரக்கென உருவி எடுத்தான். அவர்கள் கோவணத்துடன் அம்மனமாக நின்றனர்.

ஒருவன் ஏதோ ஒரு உந்தலில் சட்டென பாய்ந்து அவனை அடித்தான். உடனே எல்லோருமாக சேர்ந்து அவனை கும்மி எடுத்தனர். ஏறக்குறைய பத்து நிமிடங்கள் தமது ஆத்திரம் தீர அடித்தும் திட்டியும் தீர்த்தனர்.

சற்று ஆத்திரம் தீர்ந்ததும் அங்கிருந்தவர்களுக்கு அச்சம் வந்தது. அவன் வாயிலிருந்து இரத்தம் வழிந்தது. உதடு கிழிந்திருந்தது. செத்து கித்து போய் போலீசு கீலிசு பிரச்சனையாயிடுமோ என்று அச்சம் ஏற்பட்டது. உடனே தங்கள் ஊரின் நிரந்தர டாக்டரான அனீஸிடம் தூக்கிக் கொண்டு ஓடினர்.

அனீஸ் கேரளாவிலிருந்து வந்து நீண்ட நெடுங்காலமாக மருத்துவம் பார்க்கும் அரசுப் பார்வையில் போலிடாக்டர். ஆனால் அந்த ஊருக்கு ஆபத்து காப்பாளர். அவர் என்ன ஏது என்று கேட்காமல் பல்ஸ் பார்த்துட்டு காயங்களை துடைத்தார். அவனுக்கு இரண்டு பல்லும் உடைந்திருந்தது.

அங்கு துணைக்கு நின்றிருந்த இருவரில் ஒருவர் “டேய் சுரேசு அவன் அப்பன் மாயாண்டி ________யை முதல்ல சரிகட்டனும்டா “என்று கிசுகிசுத்தான். “ஆமாண்டா கொமாரு, அய்யாவுக்கு தெரிஞ்சா கொல்லரியா போய்டும்டா” என்று பதிலுக்கு கிசுகிசுத்தான்.

அவன் சிறிது நேரத்தில் கண்களை திறக்க முடியாமல் திறந்து “ஆண்டாளு” என்று தன் மனைவியை கூப்பிட்டு கையை தூக்க முடியாமல் தூக்கிக் தண்ணீ என்பதுபோல் சைகை காட்டினான். உடனே தனக்கு உசிரு வந்ததுதபோல் சுரேஷ் ஓடிப்போய் தண்ணி மோந்துகொண்டு வந்து வாயில் புகட்டினான்.

அவன் இரண்டு மடக்கு உள்ளே போனதும்
“தேவுடியா புள்ளைங்க “ என்று முனகினான்.

இக்கதைக்கும் சூடாக விற்பனையாகும் ஆண்டாள் கதைக்கும் சத்தியமா எந்த தொடர்பும் இல்லை. ஏனெனில் தேவரடியாள் என்பது அன்றைய காலத்தில் இன்று பொருள்கொள்வதுபோல் பொருளில்லை. மேலும் எல்லா ஏடறிந்த காலமுதல் பழைய இலக்கியங்கள் உடலுறவு என்பதையும் கற்பு என்பதையும் மறைபொருளாகவும் சமூக குற்றமாகும் கொண்டிருக்கவில்லை.

விருந்தாளியுடன் மனைவி உடலுறவு கொள்வதை தவறாக கருத்தாக காலம் ஒன்று இந்த பூமி பரப்பு முழுவதும் இருந்துள்ளதை ஆய்வுகள் உண்மைபடுத்தியுள்ளன.

இதற்கு இசுலாமிய இலக்கியங்கள்கூட விதி விலக்கல்ல. ஆயிரத்து ஓர் அரபுகதையும் அடிமைகள் பற்றியும் பால்குடி தாய் பற்றியும் (ஹதீது) நபிமொழிகளில் விரவிக்கிடக்கும் செய்திகளும் சான்றாக உள்ளன.

இதற்குமேல் உள்ளே போக எனக்கு விருப்பம் இல்லை.

தமிழ்ப் புத்தாண்டு


தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு எது என்பதில் எனக்கு குழப்பமே இல்லை.

ஒன்றை எது சரி எது தவறு என்று தேரந்தெடுப்பது எப்படி?
எது ஒன்றையும் அதனதன் துறை சாரந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதே சரியானது. நாம் நாம் ஆய்வுசெய்து அறிந்த பிறகே ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் எவரொருவரும் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது. பூமி உருண்டை என்பதை நாம் ஆய்வு செய்து அறிந்த பிறகுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அறிவுடைமையல்ல.

அதேநேரத்தில் ஆய்வுசெய்து அறிந்து கொள்ளும் வாய்ப்புள்ளபோது அதை புறக்கணித்துவிட்டு அவ்வளவு பெரிய ஆள் சொல்கிறார்! பொய்யாகவா சொல்வார் என்று ஆட்டு மந்தையாக இருப்பதும் அறிவுடமை இல்லை.

தமிழ்ப் புத்தாண்டு ஆய்வறிஞர்களில் யார் சரியானவர்கள்?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கியங்களைப் படைத்த அகத்தியனா? கம்பனா? இல்லை இன்று வாழும் அறிஞர்களா?

ஆயிரம் ஆண்டு பழமை புதுமை என்பதெல்லாம் மூடநம்பிக்கைகள். யார் பற்றுகொண்டு ஆய்ந்தறிந்து சொல்கிறார்களோ அவர்கள் சொல்வதை ஏற்பதே அறிவுடமை. என்னைப் பொருத்தவரை வடமொழிச் சொற்களை பயன்படுத்தி இலக்கிமோ காப்பியமோ படைத்தவர்களை ஆய்வறிஞர்கள் என்று ஏற்க முடியாது.
அந்தந்த காலங்களில் தாமும் ஏதாவது செய்யவேண்டும்; தாமும் ஒன்றை படைக்க வேண்டும் என்று எழுதுபவர்கள் செயல்படுபவர்கள் ஆய்வறிஞர்கள் ஆகமாட்டார்கள். தொல்லியல் சான்றுகளை தேடிப்பிடித்து சமர்பிக்கிறவர்களே ஆய்வறிஞர்கள்.

அதனால் வடமொழியைப் பயன்படுத்தி எழுதிய இலக்கியச் செம்மல்களை தமிழ் ஆய்வறிஞர்கள் என்று நாம் ஏற்க முடியது.

இன்றைய தமிழர்களில் சிலரே இப்பாதையில் பயணிப்பவர்கள். அதனால் அவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதே அறிவுடமை.

ஆம்! தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

10th English Guide




நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும்

வணக்கம்!

  1. எங்களது பத்தாம் வகுப்பு ஆங்கிலம் வழிகாட்டி, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களை கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ளது
  2. இவ் வழிகாட்டி Epub வகையிலான அனைத்துச் சிறப்புகளையும் பெற்றுள்ளது.
  3. கூடுதலாக மாணவர்கள் இன்றியமையாச் சொற்களுக்கு தமிழ் சொற்பொருள் அறிந்து படிக்கும் வண்ணம் அதன் சொற்பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  4. அச்சொற்பொருள்கள் படிப்பதற்கு இடையூறு இல்லாதவாறு, அச்சொற்களுக்கு அடுத்துள்ள சிறு எண்களை சொடுக்குதல் அல்லது தொடுதல் (Touch screen) மூலம் தனிச் சிறு சாளரம் வழியாக அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளோம்.
  5. இப்பாடத்திட்டத்தின்படி கடந்த 2012 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரையிலான ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் வினாத்தாள்களை விடைகளுடன் இணைத்துள்ளோம்.
  6. கடந்த ஆண்டு வினாத்தாள்களில், மாணவர்கள் விடைகளை முயற்சி செய்தபின் விடையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் வகையில், ஒரு சில வரிகளுடைய விடைகள் மறைக்கப்பட்டு சொடுக்குதல் அல்லது தொடுதல் (Touch screen) மூலம் தனிச் சிறு சாளரம் வழியாக அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளோம்.

தரவிறக்கம் செய்துகொள்ளும் முறையையும் அதற்கான விலையில்லா செயலியினை தரவிறக்கம் செய்துகொள்ளும் வழிமுறைகளையும் எமது புத்தக விற்பனை பக்கத்தில் விரிவாக தந்துள்ளோம்.

வாங்குவதற்கு இச்சுட்டியினை சொடுக்கவும் பத்தாம் வகுப்பு ஆங்கிலம் டிஜிடல் வழிகாட்டி


விலை ரூ 15.00 மட்டுமே.


தொடர்ந்து தங்களின் ஆதரவினை வேண்டுகிறோம். நன்றி!

இவன்,

வெர்னியா டிஜிடல் சிஸ்டம்.

மீத்தேன் திட்டத்தை முறியடிப்போம்!


                தமிழகத்தின் தாய்வீடு தஞ்சை மண்டலம். காவிரியின் கழிமுகம். நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை என்பது அதன் விவசாய பங்களிப்பை பறை சாற்றும்.

      உழவுத்தொழில் சார்ந்த ஒரு சொற்களஞ்சியமே பதிப்பிக்கும்படி புகழ் பெற்ற நெற்களஞ்சியமானது அதன் பூகோள அமைப்பில் தீபகற்பம்போல் காணக்கிடைக்கும். அதன் கங்குகரையில் மீன் வளமும், கூர்முகமான கோடிக்கரையில் மான் வளமும் பசுமை படர்ந்த காட்டு மலர்களின் தேன் வளமும், வரலாறு – இலக்கியம் யாவற்றிலும் தனது தடம் பதித்த தஞ்சைக்கு ஏன் அது தழுவி நிற்கும் தமிழகத்திற்கும் மீத்தேன் வடிவில் இன்று அழிவு வருகிறது.

முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்
முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 36


தொடர் :36

முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்
முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்

ஸஃபா மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஒடுவது ஹஜ் வழிபாடுகளிலுள்ள ஒரு கட்டாயக் கடமையாகும். தொங்கோட்டம் ஓடுவதற்கு காரணம் என்ன?

டேப் காதர் – கம்யூனிச கலைஞர்களின் காட் பாதர்!


          அருள் எழிலனின் ஆனந்த விகடன் (30.10.2013) கட்டுரையில் “உப்பு வெச்ச இடம் தான் மிச்சம்” என்ற டேப் காதரின் பாடலின் தலைப்பில் சில விவரங்களை கூறியிருந்தார். அதற்கு முன்னால் பறையோசை வலைதளத்தில் “பொதுவுடைமைக் கலைஞரின் வாழ்க்கைத் தடம்” விரிவாக கூறியிருந்தது.

கலை என்பது சமூக இயக்கத்தில் முன்னேற்றகரமான பாத்திரம் வகிக்கும் தருணங்கள் யாவும் புரட்சிகர கலைஞர்களுக்கே உரித்தானவை….

முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்
முழுமையாகப்படிக்க இங்கே சொடுக்கவும்

லெனின் – எதிர்காலத்திற்கான வரலாறு


ஆயிரம் ஆவணப்படங்களை எடுக்கலாம்

தோழர் லெனினைப்பற்றி….

இது அந்த ஆயிரத்தில் ஒன்று மட்டுமே.

எங்களுக்கு கிடைத்தவைகளைக் கொண்டு

இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதைவிடச் சிறப்பான படங்களை பலராலும்

உருவாக்க முடியும்…

அவர்கள் உருவாக்க வேண்டும் எனக்  கேட்டுக்கொள்கிறோம்.

எங்களின் முதல் முயற்சிக்கு ஆதரவுதந்த

அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி…!