இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கைக்கு யார் பொறுப்பு?

            குர்ஆன் சொல்வது உண்மையான தகவலாக இருக்குமானால், ஈஸா நபியின் எதிரிகள் அவரை கொன்று விட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும் என்று அல்லாஹ் அவர்களை ஏமாற்றுவதற்கு முடிவு செய்தான். அதனால், “ஈஸா நபி சிலுவையில் மரித்தார்” என்ற திட்டம் அல்லது நம்பிக்கை வருவதற்கு காரணமே அல்லாஹ் தானே ! இது இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும். ஈஸா நபியின்  சீடர்கள் ஏமாற்றப்பட்டது “தற்செயலாக அல்லது ஒரு விபத்தாக நடந்தது” என்று சொல்வீர்களானால், நாம் இந்த முடிவுக்கு வரலாம், அது என்னவென்றால், “உலகத்தில் மிகப்பெரிய ஒரு பொய்யான மதம் உருவாகப் போகிறது” என்பதை அல்லாஹ் அறியாமல் இதை செய்தான் என்று நாம் முடிவு செய்யலாம். இல்லை, அல்லாஹ் இதை தெரிந்தே வேண்டுமென்றே செய்தான் என்று சொன்னால், அல்லாஹ்விற்கு பொய்யான மதங்களை உலகத்தில் உருவாக்கும் வியாபாரம் உள்ளது என்று முடிவு செய்யலாம். ஆக, இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ், ஒரு சின்ன விஷயத்தை கூட சரியாக செய்யத் தெரியாத “அறியாமையில்” இருக்கிறான் என்று முடிவு செய்யலாம், அல்லது “அவன் தெரிந்தே ஏமாற்றக் கூடியவன்” என்ற முடிவிற்கு வரலாம்

முஹம்மது நபியின் கூற்றுப்படி,  ஈஸா நபியின் பணி ஒரு மிகப் பெரிய தோல்வியை அடைந்தது.  ஈஸா நபி 33 ஆண்டுகள் ஏகத்துவ போதனையை போதிப்பதில் கழித்தார் (அதிலும், அவர் குழந்தையாக இருந்ததிலிருந்தே ஏகத்துவத்தை போதித்தார் என்று குர்ஆன் கூறுகிறது), அப்படியிருந்தும், அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட (வானில் உயர்த்தப்பட்ட)  சில நாட்களுக்குள் இஸ்ரவேல் மக்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்தனர். முதல் பிரிவு மக்கள் ஈஸா நபியின் போதனை கேட்டவர்கள் ஈஸா நபி உயிர்தெழுந்ததாக நம்பியதால் “கிறிஸ்தவர்களாக” மாறிவிட்டனர், இவர்கள் கற்பனைகூட செய்யக்கூடாத பாவமான “ஷிர்க்” (இணைவைத்தல்) என்ற மாபெரும் பாவத்தை செய்தவர்களாயினர். இரண்டாம் பிரிவு மக்களாகிய இவர்கள் “ஈஸாநபியின்  போதனைக்கு” கீழ்படியாததினால், இவர்களும் “இறைவனின் மிகப்பெரிய நபியை” புறக்கணித்த அல்லது நம்பாத பாவத்திற்கு ஆளானார்கள். ஆக, ஈஸா நபியை நம்பினவர்கள், ஈஸா நபியை நம்பாதவர்கள் இந்த இரு பிரிவினரும் கடைசியில் நரக நெருப்பிற்கு ஆளானார்கள். அதாவது, ஈஸா நபி, கடைசி வரை முஸ்லீமாக இருக்கக்கூடிய ஒருவரையாவது சம்பாதித்துஇருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிப்பட்ட ஒருவரையும்  இஸ்லாமுக்கு மாற்றவில்லை.

அல்லாஹ், ஈஸா நபியை எல்லோரும் காணும்விதமாக தன்னளவில் வானிற்கு உயர்த்தி பாதுகாப்பளித்திருக்கலாம் அல்லது ஈஸா நபி, அல்லாஹ்வின் ஏமாற்றும் செயலில் தன் சீடர்களாகிய நீங்கள் ஏமாறக்கூடாது என்று அவர்களை எச்சரித்து இருந்திருக்கலாம். ஆனால், ஈஸாநபி  தன் வாழ்நாட்கள் அனைத்திலும் இப்படிப்பட்ட எச்சரிக்கை செய்தியை அல்லாஹ்விடமிருந்து பெறவில்லை, அதனால், தன்னை பின்பற்றியவர்களுக்கு இதைப் பற்றி சொல்லவில்லை. இதன் பலனாக, உலகத்தின் கோடான கோடி மக்கள், இப்போது இஸ்லாமை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர், ஏனென்றால், “இயேசு தங்கள் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார்” என்று அவர்கள் நம்புகின்றனர். ஏன் இவர்கள் இப்படி நம்புகின்றனர் என்றால், இந்த செய்தியை முதலாவது பரப்பியதே “ஏமாற்றும் இறைவனாகிய” அல்லாஹ்வும், படுதோல்வி அடைந்த ஈஸா மஸிஹாவுமே.

குர்ஆனை நாம் கூர்ந்து கவனித்தால், அல்லா “கிறிஸ்தவ மார்க்கத்தை” தெரிந்தோ அல்லது தேரியாமலோ துவக்கினான் என்ற முடிவிற்கு வரலாம். அதோடு மட்டும் குர்ஆன் நின்றுவிடவில்லை.  தான் செய்த குழப்பத்தை சரி செய்வதை விட்டுவிட்டு, அல்லாஹ் “கிறிஸ்தவ மார்க்கத்தை” அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்கிறான்.

            ஈஸா நபியின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் என்ற நம்பிக்கைக்கு அடித்தளம் அல்லாஹ் அமைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த பொய்யான செய்தியை கிறிஸ்தவர்கள் பரப்புவதற்கும் மிகவும் நேர்த்தியாக அல்லாஹ் உதவினான்.

ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.

(குர்ஆன் 61:14)

 இந்த வசனம் மிகவும் முக்கியமான வசனம். ஈஸா நபியின் போதனையை ஏற்க மறுத்த யூதர்களுக்கு எதிராக, அல்லா ஈஸா நபியை  பின்பற்றியவர்களுக்கு உதவி செய்ததாக இந்த வசனம் சொல்கிறது. மற்றும் இந்த வசனத்தின்படி ” ஈஸாநபியின்  சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்” என்று குர்ஆன் சொல்கிறது. எனவே, யூதர்களை விட மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக மாறிய மற்றும் ஈஸா நபியை பின்பற்றியவர்களாகிய இவர்கள் யார்? இந்த விவரத்திற்கு சரியாக பொருந்துகிறவர்கள் சரித்திரத்தின் படி “ஆதி கிறிஸ்தவர்கள் – orthodox Christians” தான்.

இவர்களின் நம்பிக்கை “இயேசுவின் மரணத்தின் மீதும், அவர் உயிர்த்தெழுதந்தார்” என்பதன் மீதும் இருந்தது. ஈஸா நபியின் போதனை மாற்றப்பட்டது என்றும், உண்மை இஞ்ஜில் மாற்றப்பட்டது என்றும்  வாதிக்க முடியாது, ஏனென்றால், இந்த மக்கள் கூட்டம் குர்ஆன் வசனம் சொல்லும் மக்கள் அல்ல. ஒருவேளை குர்ஆன் சொல்வததைப் போல, முதல் நூற்றாண்டில் “முஸ்லீம்-கிறிஸ்தவ” கூட்ட மக்கள் இருந்ததாக ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் மற்றவர்களின் மீது வெற்றியுள்ளவர்களாக இருக்கவில்லை. அவர்கள் மிக சீக்கிரமாக அழிக்கப்பட்டார்கள். ஈஸா நபியை பின்பற்றியவர்களில், யூதர்களை விட அதிகமாக வலிமையானவர்களாக இருந்தவர்கள் கிறிஸ்தவர்களே. ரோம சாம்ராஜ்ஜியத்தில் அதிகமாக பரவியது இந்த கிறிஸ்தவமே. இந்த கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை, இன்று உள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் போலவே இருந்தது. ஆக, குர்ஆன் வசனத்தின் படி இந்த கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வர அல்லாஹ் உதவியாக இருந்தான் அதாவது வெற்றியாளர்களாக மாற்றினான். பின் எப்படி, கிறிஸ்தவம் வளர்ந்து, உலகத்தின் மிகப்பெரிய மதமாக மாறியது.? இது அல்லாவின் வல்லமை சக்தியினால் வளர்ந்தது! மற்றும் கிறிஸ்தவ அடிப்படை செய்தியாகிய ” ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்ற செய்தியை உருவாக்கியது யார்? அல்லாஹ்தான்.

ஈஸா நபி பற்றிய குர்ஆனின் செய்திகள் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். அல்லாஹ் பல பில்லியன் மக்களை ஏமாற்றினான் என்றே பொருள் தருகிறது. இது மட்டுமல்ல, ஈஸா நபியின் சீடர்களும் ” ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்று நம்பும்படி செய்து அவர்கள் அல்லாஹ்வின் வழியை விட்டு விலக அல்லாஹ் காரணமானான்.  யூத, ரோம ஆட்சியாளர்களை ஏமாற்ற வேண்டும் என்ற அல்லாஹ்வின் திட்டம்  நிறைய பலவிதமான கேள்விகளை எழுப்புகிறது.

குர்ஆன் சொல்வது உண்மையானால், அல்லாஹ் ஒரு தவறான செய்தியை ஆரம்பித்து, அது உலகத்தில் மிகப்பெரிய மார்க்கமாகும் வரை அதை வளர்த்தான் என்பது தெளிவாகிறது. குர்ஆன் சொல்வது உண்மையானால், ஈஸா மஸிஹாவின் வாழ்க்கையின் முடிவு, பல மக்களை அல்லாஹ்வின் வழியிலிருந்து விலகச் செய்தது. இப்படி வழிவிலகச் செய்தவர் ஈஸா மஸிஹாவைத் தவிர ஒருவரும் உலக சரித்திரத்தில் இருக்கமுடியாது. ஏனென்றால், இறைவனின் குணம் எப்படி இருக்கும் என்று எல்லாரும் பொதுவாக நம்பிக்கொண்டு இருக்கிறார்களோ, அப்படி இல்லாமல் அல்லாஹ்வின்  இறைபார்வை வித்தியாசமாக உள்ளது. ஒரு சராசரியாக சிந்திக்ககூடிய மனிதன் விமர்சிக்கும்  அளவிற்கு அல்லாஹ்வின்  குர்ஆன் குழப்பமாக உள்ளது.

ஈஸா நபியை அல்லாஹ் வானிற்கு உயர்த்திக்கொண்டதாக முஸ்லீம்கள் விளக்கமளிக்கிறார்கள்

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

 (குர்ஆன் 4:158)

இவ்வசனத்தில் ஈஸாநபியை, உயிருடன் தன்னளவில் (வானத்திற்கு?) உயர்த்திக் கொண்டதாக பொருள்விளங்க முடிகிறதா?

… வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

(குர்ஆன் 4:157)

அல்லாஹ்வால் உயர்த்திக் கொள்ளப்பட்ட ஈஸா/இயேசு,சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக  உயிருடன் இருப்பதாக குர்ஆன் கூறும் செய்திகளைப் பார்த்தோம் பின்வரும் குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்,

முஹம்மது (அல்லாஹ்வின்) தூதரன்றி (வேறு) அல்லர். அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் திட்டமாக(க் காலம்) சென்று விட்டனர் எனவே அவர்கள் இறந்து விட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ உங்களுடைய குதிங்கால்களின் மேல் புறங்காட்டி திரும்பி விடுவீர்களா?

 (குர்ஆன் 3:144)

முஹம்மது நபிக்கு முன்னர் வந்த அனைத்து நபிமார்களும் இறந்துவிட்டதாக குர்ஆன் 3:144-ம் வசனம் கூறுகிறது. அப்படியானால் ஈஸா நபியும் இறந்து விட்டாரா?

            ஆக, ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு ஈஸா நபி வானுக்கு உயர்த்தப்பட்டார், சிலுவையில் அறையப்படவில்லை, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார், சிலுவையில் மரணமடையவில்லை, சிலுவையில் மரணமடைந்தார்,  மரணத்திற்குப்பின் உயிருடன் எழுந்தார் என்று எப்படி வாதம் புரிந்தாலும் குர்ஆன் முரண்படுவதை எளிதாகக் காணலாம்.

வேதங்களின் நிலை?

தொடரும்…

1 thoughts on “ஆரம்பத்தை நோக்கி -தொடர் 21

பின்னூட்டமொன்றை இடுக