தொடர் 29

                சரி, அல்லாஹ்வின் தீர்ப்பைத் திருத்தும் வல்லமைமிக்க பரிந்துரை யாருடையது?

(Sahih Al-Bukhari, Volume 2, Book 24, Number 553)

… The Prophet added, “Then the prophets and Angels and the believers will intercede, and (last of all) the Almighty (Allah) will say, ‘Now remains My Intercession.’ He will then hold a handful of the Fire from which He will take out some people whose bodies have been burnt, and they will be thrown into a river at the entrance of Paradise, called the water of life …

தன்னால் வழங்கப்பட்ட தீர்ப்பை, தனக்குத் தானே பரிந்துரைகளையும், வேண்டுகோள்களையும் முன் வைத்து தீப்புகளை திருத்திக் கொள்கிறான் எனக் கூறும் இந்த ஹதீஸ் பைத்தியக்காரத்தனமாக தெரியவில்லையா? தனக்குத் தானே பேசிக்கொள்ளும் அளவிற்கு  அல்லாஹ்வின் சிந்தனைமையத்தில் பிரச்சினைகள் ஏதேனும் உள்ளதா?

நாம் பரிந்துரையைத் தொடர்வோம்.

…அவன் அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுபவர் யார்? அவன் முன்னால் உள்ளவற்றையும் பின்னால் உள்ளவற்றையும் அறிவான்.

(குர்ஆன் 2:255)

யாருக்கு அனுமதியளித்தானோ அவரைத் தவிர அவனிடத்தில் பரிந்துரை செய்வது பலன் தராது …

(குர்ஆன் 34:23)

அல்லாவின் அனுமதியுடன் செய்யப்படும் பரிந்துரைகளால் தீர்ப்புகள் திருத்தப்படும் என்ற,  குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் கருத்துகளில் உள்ள  தர்க்கரீதியான முரண்பாடுகளைக் காண்போம். மறுமையில் தங்களாகவே வெற்றி பெற்றவர்களுக்கு யாருடைய பரிந்துரையும் தேவையற்றது. தோல்வியடைந்தவர்களுக்கே பரிந்துரை தேவைப்படுகிறது. அல்லாஹ்வினால் மன்னிக்க முடியாமல் நரக தண்டனையை பெற்ற ஒரு முஸ்லீம்,  நல்ல முஸ்லீம் ஒருவரின் பரிந்துரையால் மன்னிக்கப்படுகிறார் என்று வைத்துக்  கொள்வோம்,  மனிதர்களின் பரிந்துரைகளைக் கேட்ட பிறகு மன்னிப்பதற்கு பதிலாக முதலிலேயே அல்லாஹ்வே   மன்னிப்பை வழங்கியிருக்க முடியுமே? அளவற்ற அருளும் நிகரற்ற அன்புடைய அல்லாஹ்வைவிட   மனிதர்கள்  இரக்க குணமும், மன்னிக்கும் இயல்புடையவர்களா?

அல்லாஹ்வும்,  அற்ப மனிதர்களின் பரிந்துரையை ஏற்று,  “ஓ மானிடனே உனது பரிந்துரையை ஏற்று அவனை நான் மன்னித்து நரகத்திலிருந்து விடுதலை செய்கிறேன்” என்று கூறி தன்னால் வழங்கப்பட்ட  தீர்ப்பை மாற்றுகிறான் என்றால், முதலில் கூறிய தீர்ப்பு சரியாக விசாரணை செய்யாமல் வழங்கப்பட்ட தவறானதா? முதலில் கூறிய தீர்ப்பு சரியானதுதான் என்றால் எதற்காக மாற்ற வேண்டும்?  பரிந்துரைகளால் தன்னுடைய தீர்ப்புகள்! மாற்றமடையும் என்பது அல்லாஹ்விற்கு முன்பே தெரியாதா? அவனது தீர்ப்பை மாற்றியமைக்கும் அளவிற்கு மனிதர்களால் என்ன கூற முடியும்? அற்ப மனிதர்கள்  தங்களது பரிந்துரையில் கூறப்போவது என்னவென்று அவனுக்கு முன்பே  தெரியுமென்றால் மனிதனிடம்  பரிந்துரை கேட்க வேண்டிய அவசியமென்ன?

முஸ்லீமான ஒரு மனிதரின் மீது   செய்யப்படும் இத்தகைய விசாரணைகளும் பரிந்துரைகளும் முடிவடைந்து தீர்ப்பு கூறுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?  உதாரணத்திற்கு,  அவரது பட்டோலைகள் பரிசோதனை செய்யவும், அதை எடை போடவும், அவரது செயல்களின் கோப்புகள் அவருக்குக்கு காட்சிகளாகவும், வாதங்களாகவும் காண்பிக்கப்படவும், விசாரணைகளும், பரிந்துரைகளும் முடிவடைந்து தீர்ப்பு கூறுவதற்கு குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்கள் ஆகலாம் என்று வைத்துக் கொள்வோம். இது விரைவான நீதி என்பதில் எனக்கும் சந்தேகமில்லை.  இன்றைய மக்கள் தொகையின்படி சுமார் 150 கோடி முஸ்லீம்கள் உள்ளனர். முன் சென்றவர்களும் இனி பிறக்க இருப்பவர்களையும்  சேர்த்து தீர்ப்பு நாளின்போது 500 கோடி முஸ்லீம்கள் இருப்பதாகவும் மாற்றுமதத்தினர் எவ்வித விசாரணையுமின்றி நரகத்தில் எறியப்பட்டதாகவும் வைத்துக்  கொள்வோம் (வாதத்திற்காக).

அல்லாஹ்வின் நீதிமன்றம் எவ்வித இடைவேளையும் இன்றி இயங்குவதாகக் கொண்டாலும், தீர்ப்பு வழங்கும் பணி நிறைவடைய  25000000000 நிமிடங்கள் தேவைப்படுகிறது. அதாவது கடைசி முஸ்லீம் தன்னுடைய தீர்ப்பைப்  பெறுவதற்கு  47,564 ஆண்டுகள் ஆகும். சராசரியாக 60 – 70 ஆண்டுகள் வாழ்ந்த உலக வாழ்க்கையின் பிரதிபலனை அறிந்து கொள்வதற்கு, தலைக்கு ஒரு முழ உயரத்தில் உதிக்கும் சூரியனின் வெப்பத்தின் காரணமாக உண்டான வியர்வை குளத்தில், காது வரை  மூழ்கிய நிலையில் நிர்வாணமாக சுமார் 47,564 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் நீதீமன்றத்திற்கு தேநீர் மற்றும் உணவு இடைவேளைகளும் வார விடுமுறைகளும் இருக்குமானால் மேலும் சில ஆயிரம் ஆண்டுகள் வரிசையில் நிற்க வேண்டும்.  முஸ்லீம் அல்லாதவர்கள் மீதும்  விசாரணை இருக்கின்றதென்றால்  மேலும் லட்சக்கணக்கான ஆண்டுகள் வரிசையில் “மணியை” ஆட்டிக் கொண்டு நிற்க வேண்டும். இது முட்டாள்த்தனமாக தோன்றவில்லையா?

                பரிந்துரைகளால் தீர்ப்புகள் திருத்தப்பட்டாலும் அல்லது இல்லையென்றாலும் கவலையில்லை. நம் மீது கூறப்படும் தீர்ப்புகளுக்கு நம்முடைய செயல்கள் எந்த அளவிற்கு காரணிகளாக அமைகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் சொர்க்கவாசியாவதும், நரகவாசியாவதும்  தாயின் வயிற்றில்  நாற்பது நாள்  கருவாக இருக்கும் பொழுதே முடிவு  செய்யப்படுகிறது.

புஹாரி ஹதீஸ்    : 3332      

உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

….இதனால் தான் மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளியிருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான். இதைத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸின் கருத்தை உறுதி செய்யும் விதமாக  குர்ஆனிலிருந்து ஒரு சில வசனங்கள்,

நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அதனுடைய நேர்வழியைக் கொடுத்திருப்போம். எனினும் ஜின்கள், மனிதர்கள் ஆகிய அனைவரிலிருந்தும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற என்னிலிருந்து உள்ள சொல் உண்மையாகி  விட்டது.

(குர்ஆன் 32:13)

(அவர்களில்) உம்முடைய ரப்பு அருள் புரிந்தவரைத் தவிர இதற்காகவே அவர்களை படைத்திருக்கிறான்.  ஜின்கள், மனிதர்கள் அனைவரினாலும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற உம்முடைய ரப்பின் வாக்கு பூர்த்தியாகிவிட்டது.

(குர்ஆன் 11:119)

எவன் மீது வேதனையின் வாக்கு உறுதியாகி விட்டதோ நெருப்பிலுள்ள அத்தகைய ஒருவனை நீர் ஈடேற்றிவிடுவீரோ?

(குர்ஆன் 39:19)

விதியின் வலிமையைக் கூறும் குர்ஆனின் (39:19) இந்தக் கேள்வி, விசாரணைகளையும், பரிந்துரைகளையும்  முற்றிலும் நிர்மூலமாக்குகிறது. இறுதி செய்யப்பட்ட விதியின் வழியே செல்லும் மனிதனிடம் விசாரணைகளும், பரிந்துரைகளும் எதற்காக? தன்னால் எழுதப்பட்ட விதியை எதிர்த்து போராடி வெற்றி  பெற வேண்டும் என்கிறானா?

                மறுமை நாளில் பரிந்துரை ஏற்கப்படும் என்றால் குர்ஆனின்   2:48, 2:122-123, 2:254,4:123, 6:5, 6:70, 39:43-44, 82:18-19, 17:56-57 வசனங்கள் பொருளற்றவைகளாகின்றன. மறுமை நாளில் பரிந்துரை ஏற்கப்படாது என்றால் பரிந்துரையைப்பற்றி கூறும் குர்ஆனின் 10:03, 34:23, 20:109, 21:23, 53:26 வசனங்களும் ஹதீஸ்களும் அர்த்தமற்றவைகளாகின்றன. இத்துடன் விதியை வலியுறுத்தும் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஒப்பிட்டால், ஒட்டு மொத்த இஸ்லாமியக் கொள்கையும் கேலிகூத்தாகி விடுகிறது. ஒன்றிற்கொன்று நேர்எதிரான கருத்துகள்.

ஏன் இந்த முரண்பாடுகள்?

 சுருக்கமாகச் சொல்வதென்றால், முன்பு கூறியதை மறந்து  மறுபடியும் புதிதாக  இன்னொன்றை கூறும் குர்ஆனை இயற்றியவரின்  நினைவாற்றலின் குறைபாடு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை!

 உலக வாழ்க்கையையும்,  இறுதித் தீர்ப்பையும், பரிந்துரைகளையும் கடந்து சொர்க்கத்திற்கு எதற்காக  செல்கிறீர்கள்? அல்லாஹ்வை அடைவதற்காகவா? இஸ்லாமின் உச்சகட்ட தத்துவக் COMEDYயை கூறாமல் எப்படி இருக்க முடியும்?

தொடரும்….

1 thoughts on “ஆரம்பத்தை நோக்கி – தொடர் 29

  1. இடையர்கள் தம் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பார்கள் அவர்களின் வாழ்க்கை முறையும் அதற்கேற்றவாறு மாறிக்கொண்டுமிருக்கும் அப்படிப்பட்டவர்களால் அருளப்பட்டது எனப்படும் மறை மாத்திரம் எவ்வாறு மாற்றமில்லாமலும் முரண்பாடில்லாமலும் இருக்கமுடியும் சரிசமனான நீதியை வழங்கும் அல்லது குறைபாடில்லாத இறைவன் எவ்வாறு தவறு செய்தவனை மற்றொறுவனின் சிபாரிசின்பேரில் விடுவிக்க முடியும் குறைபாடுள்ள நீதிமான்களால்தான் குற்றவாளிகள் தப்பிக்கின்றார்கள் இறைவனே குறைபாடுள்ளவனாயிருக்கும்போது அவனைப்பின்பற்றுபவர்கள் எவ்வாறு பூரணமானவர்களாயிருக்க முடியும்???

பின்னூட்டமொன்றை இடுக