தொடர் 31

ஆண்களுக்கு ஹூருல்ஈன்கள். Ok பெண்களுக்கு என்ன…?

பெண்களுக்கு எந்த சுகங்களும் இல்லையா? வெற்றி பெற்ற பெண்களுக்கு தங்க கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் கிடையாதா? பெண்களுக்கு சம உரிமையில்லையா? என்ற போர்க்குரல்கள் ஒலிக்கத் தொடங்கிதும் இஸ்லாமிய அறிஞர்கள் ஹதீஸ்களையும் வரலாறுகளையும் புரட்டி தேடிப் பார்த்தனர். ஹதீஸ்கள் ஹூருலின்களை பெண்கள் என குறிப்பிட்டு பல விதமாக அவர்களின் அழகை வர்ணணை செய்கிறது. ஹூருலின்களில் ஆண்களும் உண்டு என்பதற்கு குர்ஆனிலும், ஹதீஸ்களில் எவ்விதமான ஆதரமில்லை. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது, ஹூருல் என்பது பன்மைச் சொல் ஆண், பெண் என இருபாலரையும் குறிப்பிடும். மறுமையில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் போலவே பெண்களுக்கும் வழங்கப்படும் நிச்சயமாக, ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் உண்டு என்றனர். இதை Dr. ஜாகீர் நாயக் அவர்களும் தன்னுடைய பதிலில் குறிப்பிடுகிறார்.,

… மேற்படி அருள்மறை குர்ஆனின் வசனங்களிலிருந்து நாம் அறிவது என்னவெனில் ‘ஹூர்’ என்ற அரபி வார்த்தை குறிப்பாக எந்த பாலை (ஆண்பால் அல்லது பெண்பால்) குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப் படவில்லை என்பதுதான். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த முஹம்மத் அஸாத் ‘ஹூர்’ என்ற அரபி வார்த்தைக்கு Spouse (கணவருக்கு மனைவியும் – மனைவிக்கு கணவரும்) என்று மொழியாக்கம் செய்துள்ளார். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த யூசுப் அலி ‘ஹூர்’ என்கிற அரபி வார்த்தைக்கு Companions (இணை அல்லது துணை ) என்று மொழியாக்கம் செய்துள்ளார். இன்னும் பல மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி – சொர்க்கத்தில் ஒரு ஆணுக்கு அழகிய கண்களை உடைய பெண்ணும், ஒரு பெண்ணுக்கு அழகிய கண்களை உடைய ஒரு ஆணும் இணையாக அல்லது துணையாக அல்லது ஜோடியாக கிடைப்பார்கள்.

பெண்கள் இவ்வுலகில் கிடைக்கப்பெறாத ஒன்றை, சொர்க்கத்தில் கிடைக்கப் பெறுவார்கள். அருள்மறை குர்ஆனில் ‘ஹூர்’ என்கிற அரபி வார்த்தை பெண்பாலை குறிப்பிடத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சில மார்க்க அறிஞர்கள் ஆணித்தரமாக நம்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக ஹதீஸ் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கத்தில் ஆண்களுக்கு அழகிய கண்களையுடைய பெண்கள்துணையாக கிடைப்பார்கள் எனில் – சொர்க்கத்தில் பெண்கள் எதை கிடைக்கப்பெறுவார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது – சொர்க்கத்தில் பெண்கள் மனித கண்கள் எதுவும் கண்டிராத – மனித காதுகள் எதுவும் கேட்டிராத – மனித மனங்கள் எதுவும் எண்ணிப்பாராத ஒன்றினைப் பெறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேற்படி பதில் சொர்க்கத்தில் பெண்கள் – மிகவும் சிறப்பான ஒன்றினைப் பெறுவார்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஹூருலீன்கள் என்பவர்கள் பெண்களே என்றால்,

குழந்தைகளை பராமரிப்பது, உணவு சமைப்பது, துணிகளை துவைப்பது வீட்டைப் பராமரிப்பது என்ற எவ்விதமான சேவைகளும் அங்கு பெண்களுக்கு கிடையாது. சுவைமிகுந்த உணவுகளும், பழங்களும், பானங்களும், உடைகளும், ஆபரணங்களும் அளவின்றி வழங்கப்படும். எதிர்கால தேவை, வாரிசுகளுக்காக சேமிக்க வேண்டும் என்ற கடமைகளும் இருக்காது. இருக்கும் ஒரே வேலை, தங்களது கணவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்பது மட்டுமே. ஏனென்றால் ஒவ்வொரு மனைவியரையும் ஒரே மாதிரியாக நீதத்துடன் நடத்த வேண்டும் அவர்களுக்கிடையே வேற்றுமை காணக் கூடாது. ஒவ்வொரு மனைவியருடனும் சமஅளவில் நேரத்தை செலவிட வேண்டும் என்பதும் முஹம்மது நபி உலக வாழ்வில் செயல் முறையில் நமக்கு கற்றுத் தந்த படிப்பினைகளாகும்.

ஒரு சொர்க்கவாசி, தன் மனைவியிடம் சென்று தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், 72 ஹூருலீன்கள் X 15 நிமிடங்கள் = 1080 நிமிடங்கள். அதாவது, அவர்களது கணவர்கள் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் செயல்படுவதாக இருந்தாலும் குறைந்த பட்சம் 18 மணி நேரம் வரையிலும், ஹூருலீன்கள் உட்பட ஒவ்வொரு மனைவியரும் தங்களது முறை வருவதற்காக காத்திருக்க வேண்டும். உணவு உறக்கம் போன்ற தேவைகளுக்கான நேரம் தனிக்கணக்கு.

மனைவியர்கள் விரும்பினால் தங்களது கணவர்கள் ஹூருலீன்களுடன் நிகழ்த்தும் வீர விளையாட்டுக்களை கண்டு பரவசமடையலாம். அல்லது தங்களது கணவர்கள் 72 ஹூருலீன்களுடனும் சாகசங்கள் பல புரிந்து வரும்வரை ஏக்கத்துடன் காத்திருக்க வேண்டும் (வேறு வழியில்லை…!)

ஹூருலீன்களில் ஆண்களும் உண்டு என்றால்,

மறுமையில் வெற்றி பெற்றவர்கள் தம்பதிகளாகவும் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று முன்பே பார்த்தோம். பெண்களில் மிகப் பெரும்பாலானவர்கள் திருமணமானவர்களே. வெகு சிலரே திருமண வாழ்க்கையின்றி இருப்பவர்கள். இவர்களைத் தவிர மீதம் இருப்பவர்கள் கணவன் நரகத்திற்கு சென்று விட்டதால் தனிமையில் சொர்கத்திற்கு வரும் பெண்கள் இவர்களுக்கும் ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் வழங்கப்படுவார்கள்.

அல்லது அனைத்து பெண்களுக்கும் பாகுபடின்றி ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் பரிசாக வழங்கப்படலாம். எப்படி இருந்தாலும், அறிஞர்களால் தரப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் கூறுவதென்றால், ஆண்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே பெண்களுக்கும் சிறப்பு ஆற்றல்களும், 72 ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் வழங்கப்படுவார்கள் என்று உறுதியாகக் கூறமுடியும்.

“……………….”

“…………………”

(இவ்விடத்தில் ஆண்களுக்கு விவரித்த சொர்க்கலோக சல்லாபக் காட்சிகளை பெண்களுக்கும் கற்பனை செய்து கொள்ளவும்)

ஆக,சொர்க்கவாசியாகத் தேர்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் 72 கட்டழகு கன்னியர்களும், காளையர்கள் இணையக் காத்திருக்கின்றனர் (ஒருவேளை இப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருக்கலாம். யார் கண்டது ?!)

ஒருவேளை, சொர்க்கவாசிகள் தங்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஹூருலீன்கள் போதவில்லை என்று நினைத்தால், அதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Al Hadis, Vol. 4, p. 172, No. 34

Ali reported that the Apostle of Allah said, “There is in Paradise a market wherein there will be no buying or selling, but will consist of men and women. When a man desires a beauty, he will have intercourse with them.”

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் கூறினார், சொர்க்கத்தில் உள்ள கடைத்தெருவில் ஆண்களையும் பெண்களையும் தவிர வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒன்றும் இருக்காது. ஒரு ஆண் விரும்பும் பொழுது (அங்குள்ள) அழகிய பெண்ணுடன் கலவியில் ஈடுபடலாம்.

Sunan al-Tirmidhi 1495

In paradise, there is a market of rich, beautiful and ever-young women; they will be pleased whoever buys them…

சொர்கத்தில் செல்வந்தர்களின் கடைத்தெரு உள்ளது, (அங்கு) மிக அழகான என்றும் இளமையாக உள்ள கன்னியர் (ஹூருலீன்கள்) உள்ளனர். யார் அவர்களை வாங்கினாலும் அவர்கள் (ஹூருலீன்கள்) அகமகிழ்வார்கள்.

உங்களது விருப்பம் போல பெற்றுக் கொள்ளலாம். (கடையின் உரிமையாளர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?)

முஹம்மது நபியால் வர்ணனை செய்து கூறப்பட்ட சொர்க வாழ்க்கையின் காட்சிகளை கற்பனை செய்து பாருங்கள். கேடுகெட்ட காட்சிகள்தான் கண்முன்னே தோன்றும்.

சிற்றின்பக் கேளிக்கை விடுதியை அடைவதற்காகவா இந்த உலகத்தில் பலவிதமான கொடுமைகளையும், வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்?. அல்லாஹ், இது போன்ற காட்சிகளைக் காண மிகுந்த சிரமம் எடுக்கத் தேவையில்லை. மிக மட்டரகமான நீலப்பட காட்சிகள் இணைய தளங்களிலும், குறுந்தகடுகளாக கடைத்தெருக்களிலும் எளிதாக கிடைக்கின்றது.

ஆக, சொர்கம் என்பது சிற்றின்ப வெறியர்கள் நிறைந்த பரத்தையர் இல்லத்தைப் போன்றது என்றும் கூறலாம். ஹூருலீன்களை காமப்பதுமைகள் (Sexdolls) என்று கூறுவதே பொருத்தமானது. இதிலிருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிந்தனையில் இருப்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.

குர்ஆனில் காணப்படும் பல செய்திகள் சமகால அறிவியலிற்கும், பகுத்தறிவிற்கும் முரணானதாகும். காரணம்?

திருக் குர்ஆன் அறிவியல் புத்தகமல்ல.

இந்த பதில் திருக் குர்ஆன் அறக்கட்டளையின் குர்ஆன் மொழி பெயர்பின் 3:190 ன் Foot Note 14 ன் ஆரம்ப வரிகள். இதை கூறுவது என்னைப் போன்ற பகுத்தறிவுவாதிகள் அல்ல. ஒரு மார்க்க அறிஞர்கள் குழுவின் கருத்து.

இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களால் 1500 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட இருக்கும் அறிவியல் வளர்ச்சியையும் அதனால் ஏற்படும் நாகரீகத்தின் போக்கை கணிக்க முடியாது. ஒரு புறம் குர்ஆன் நவீன அறிவியலுக்கு முன்னோடி, சவால் விடுகிறது குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்படாதது எதுவுமில்லை என்று நம்மை நாமே புகழ்ந்து நம்மையும் மற்றவர்களையும் எதற்காக ஏமாற்ற வேண்டும்? அறிவியலுடன் உள்ள முரண்பாடுகளைக் குறிப்பிட்டால், அறிவியலின் வளர்ச்சியைப் பற்றி முஹம்மது நபி அவர்கள் ஏன் கூற வேண்டும் அவரென்ன விஞ்ஞானியா? குர்ஆன் அறிவியல் புத்தகமல்ல என நழுவிவிடுவது மார்க்க அறிஞர்களின் வாடிக்கை.

தொடரும்….

2 thoughts on “ஆரம்பத்தை நோக்கி – தொடர் 31

  1. அப்ப சொர்க்கத்தில் பிட்டுப்படம் தான் அதிகமாக ஓடும் போல…அதிலும் தெருவுக்குத் தெருவா..?விளங்கிடும்டா…சொர்க்கம்…

பின்னூட்டமொன்றை இடுக