நான் கடவுள்

நான் கடவுள்

என் பெயர் ஜியாங்போ ரியோ.

மானிடனே கேள். நான் உன்னைப் படைத்தவன். நானே உன் இறைவன்

கருப்பன்      : நீ கடவுளா? வாயால் சிரிப்பதா அல்லது வேறு எதனாலுமா?

நான்         : ஏன்? என்னை உன்னுடைய கடவுள் என்று நம்பமாட்டாயா?

கருப்பன்     : என்னைப்போல சாதாரண மனிதனாக உள்ள உன்னை எப்படி கடவுள் என்று நம்ப முடியும்?

நான்         : சாதாரண மனிதனாக இல்லாமல் நான் வேறு எப்படி இருக்க வேண்டும்?

கருப்பன்     : ஒலியாக, அல்லது ஒளியாக,

தொடர்ந்து படிக்க

11 thoughts on “நான் கடவுள்

  1. வணக்கம் தோழர்,

    இந்த உரையாடலை படித்து பத்து நிமிடமாகிறது. இன்னும் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
    அங்கதச்சுவையில் அடக்கிவிட்டீர்கள் அமைதிவாதிகளின் அலம்பல்களை.

    செங்கொடி

  2. மதவாதிகளுடன் குறிப்பாக இஸ்லாமியர்களுடன் விவாதம் செய்வது கிறுக்குத்தனமானது என்பதை இவ்வுரையாடலிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
    நன்றி.

  3. செங்கொடிக்கு சிரிப்பு வரத்தான் செய்யும்…..என்னென்றாள் பீ ஜே அழைத்தும் வெளிநாட்டில் இருப்பதாக சொல்லி தப்பித்தவர் அல்லவா……

    நேரடி விவாதத்திற்கு துணிவு இல்லாத உங்களை விட….. விவாதம் செய்து தோற்ற
    பெரியார் திராவிட கலகம் எவ்வளவோ மேல்…..

  4. //செங்கொடிக்கு சிரிப்பு வரத்தான் செய்யும்…..என்னென்றாள் பீ ஜே அழைத்தும் வெளிநாட்டில் இருப்பதாக சொல்லி தப்பித்தவர் அல்லவா……//

    அக்பர், பீர்பால் குட்டி கதை ஒன்று..
    அரச சபையில் அமர்ந்திருந்த மன்னர் அக்பருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அது என்னவென்றால் ”முட்டாள் ஒருவன் நம்முடன் விவாதம் செய்ய வந்தால் அவனுக்கு எப்படி பதில் சொல்லவேண்டும்” என்பது. சபையில் இந்த கேள்வியை கேட்டதும், அமைச்சர்கள் ஒவ்வொரு விதமாக பதில் சொன்னார்கள். ஒருவர் சொன்னார் ‘அவனை அடித்து விரட்ட வேண்டும்’ மற்றொருவர் ‘அவனை திட்ட வேண்டும்’ இன்னொருவர் ‘அவனிடம் பதிலுக்கு பதில் பேசவேண்டும்’ இப்படி பல விதமான பதில்கள். ஆனால் மன்னருக்கு எந்த பதிலும் திருப்தி இல்லை. கடைசியாக விவேகியான பீர்பாலிடம் பதில் கூறுமாறு கேட்டார். ஆனால் மன்னரை ஒருமுறை ஏறெடுத்து பார்த்த பீர்பால் பதில் ஏதும் கூறாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டார். திடுக்கிட்ட அக்பர் மறுபடியும் பீர்பாலிடம் பதில் கூறுமாறு கேட்டார் பீர்பால் எந்த பதிலும் கூறவில்லை. பலமுறை கேட்டும் பீர்பால் பதில் கூறாததால் அக்பர் கோபம் அடைந்தார். ”பீர்பால் உங்களுக்கு அவ்வளவு ஆணவமா’ என்று கேட்க. அக்பரின் கோபத்தை உணர்ந்த பீர்பால் மெதுவான குரலில் ”அரசே நான் தங்கள் கேள்விக்கு பதில் கூறிக்கொண்டு இருக்கிறேன்’ என்றார். அக்பர் கோபம் குறையாமல் ”என்ன உளறுகிறீர்கள்” என்றார். அதற்கு பீர்பால் “மன்னா முட்டாள் ஒருவன் நம்மிடம் பேசினால் நாம் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். ஏன் என்றால் அவனிடம் பேசும்போது நாமும் முட்டாள் ஆகி விடுகிறோம். தான் சொல்வது மட்டுமே சரி மற்றவை எல்லாமே தவறு என்று கூறுபவன் முட்டாள் மட்டுமே. அறிவாளி, நல்லவை எங்கிருந்தாலும் ஏற்று கொள்வான்”

    அது போன்றே செங்கொடி அவர்கள் பீ. ஜெ போன்றவர்களிடம் விவாதம் செய்யாமல் வாய் மூடி இருப்பதே, உங்களுக்கு மட்டும் அல்ல பீ. ஜெ உடன் விவாதம் செய்ய நினைக்கும் அனைவர்க்கும் மரியாதை

  5. hi…….jaya prakash……….

    உண்மையிலேயே கம்யூநிஸ்ட் எல்லாம் அறிவாளிகள் தான்….. ஆனால் சில சமயம் அந்த அறிவு மடமை தனத்தை தூக்கி பிடிக்க தான் உதவுகிறது…..

    உங்களின் பதில் உங்களுக்கே வேடிக்கையாக இல்லயா …. அவரை பற்றி தெரியாமலே முட்டாள் என முடியு செய்யும் உங்கள் சிந்தனை தான் முட்டாள் தனமாணது மற்றும் கோழை தனமாணது…….

  6. //செங்கொடிக்கு சிரிப்பு வரத்தான் செய்யும்…..என்னென்றாள் பீ ஜே அழைத்தும் வெளிநாட்டில் இருப்பதாக சொல்லி தப்பித்தவர் அல்லவா……
    நேரடி விவாதத்திற்கு துணிவு இல்லாத உங்களை விட….. விவாதம் செய்து தோற்ற
    பெரியார் திராவிட கலகம் எவ்வளவோ மேல்…..//

    கேகுறா கேள்விக்கெல்லாம் பீஜேவை கேட்டா தெரிந்துவிடுமா? சரி எப்பா பீஜே தாசனுங்களா ஏன் அரிசி விலை ஏறிச்சு, பருப்பு விலை எறிச்சு? ஏன் நம்ம நாட்டு விவசாயம் அழின்சு போச்சு? பதில் சொல்லுங்க கண்மணிகளே? இல்லை அதுக்கும் பதில் வாங்க நேர்ல தான் வரணுமா? எல்லாத்துக்கும் நேர்ல வந்தாதான் பதில் சொல்லுவாங்களாம்? அப்ப உங்க கண்மணி நாயகம் நபியையும், அல்ல்லாசாமியையும் கூட்டிட்டு வாரீங்களா?

    ராஜா சோத்துக்கு என்ன பிரச்சினைன்னு அதுக்கு போராட துப்பில்லை, அல்லாவுக்கு வக்காலத்து வாங்க வந்துடானுவ. முதல்ல பள்ளப்பட்டியில இருக்குறா கந்து வட்டி பாய்ங்களிடம் உங்க கண்மணி ரசிகர் மன்றத்தலைவர் பீஜேவை பேசி மாத்த சொல்லுல. உங்க பீஜே கதை தெரியாத மாதிரி உதார் விடாதேள். “எங்களுக்கு யார் இட ஒதுக்கீடு தராங்களோ அவங்களுக்கு ஆதரவுன்னு ” தன்னுடைய சுயமரியாதையை அவுத்து அப்பவே கும்பகோணம்
    மாநாட்டுல காட்டிட்டார். அல்லாவை சொன்னா துடிக்குறா இதயம் உன் பையன் படிக்குறதுக்கு இவ்வளவு செலவு ஆகுதே அது உங்க அல்லா எனா பண்ணுனாரு? ஏதாவது பிடுங்க போயிட்டாரா?

    ஒண்ணும் தப்பா கேக்குலீயே

    கலகம்

  7. செங்கொடியின் பதிவுகளுக்கான பீ.ஜெ அபிமானிகளின் பின்னூட்டங்களைப்பார்த்து மண்டை சூடாகிப்போய் இருந்தேன். அவர்களது வாதங்களின் முட்டாள்தனத்தை இந்தளவுக்கு நகைச்சுவையாக சொன்னதுதான் சிறப்பு. சிரித்து மாளவில்லை. அருமையான கட்டுரை.

  8. //நேரடி விவாதத்திற்கு துணிவு இல்லாத உங்களை விட….. விவாதம் செய்து தோற்ற
    பெரியார் திராவிட கலகம் எவ்வளவோ மேல்//

    பெரியார் திராவிடர் கழகம் பிஜே விடம் தோற்றுப் போனார்களா?

    அப்படி என்றால் எத்தனை பேர் பி ஜே கழ(ல)கத்தில் அங்கிருந்து சேர்ந்து விட்டனர்?.

    அப்படியே விளபம்பரத்திற்காக நல்ல நடிப்,பு கேஸட் நல்லா விக்குது, அதுலே அவங்களுக்கும் பங்கு இருக்குதா?

  9. தவ்ராத், ஜபூர், இஞ்சில், குரான் எல்லாமே அல்லாவின் வேதங்கள். சரி வச்சிக்குவோம். தவ்ராத், ஜபூர், இஞ்சில் என்கிற மூன்று வேதத்தை மக்கள் மாற்றி விட்டார்கள். சரி ஏத்துக்குவோம். அதனால் மாற்ற முடியாத குரானை இறக்கினோம். சரி நினச்சுக்குவோம். என் சந்தேகங்கள்: தவ்ராத்தை மக்கள் மாற்றினால் அல்லாவிடம் இருக்கும் ஒரிஜினல் தவ்ராத்தை அல்லவா கொடுக்க வேண்டும். ஏன் ஜபூரை கொடுத்தார். ஜபூரை மக்கள் மாற்றினால் அல்லாவிடம் இருக்கும் ஒரிஜினல் ஜபூரை அல்லவா கொடுக்க வேண்டும். ஏன் இன்சிலை கொடுத்தார். இன்சிலை மக்கள் மாற்றினால் அல்லாவிடம் இருக்கும் ஒரிஜினல் இன்சிலை அல்லவா கொடுக்க வேண்டும். ஏன் குரானை கொடுத்தார். குரானை மாற்றினால் அல்லாவிடம் இருக்கும் ஒரிஜினல் குரானை தருவாரா? அல்லது புது துரான் என்று ஏதாவது தருவாரோ என்னவோ? நிற்க! அல்லா கொடுத்த தவ்ராத் வேதத்தை மக்கள் மாற்றிய பிறகும், ஏன் அடுத்த வேதத்தை அல்லா பாதுக்காக்க வில்லை. மக்கள் தான் வேதத்தை மாற்றினார்கள் என்றால் அல்லாவும் ஏன் வேதத்தை மாற்றினார். அல்லா முதலில் எழுதியது சரியில்லையா? அல்லது மக்கள் மாற்றியது சரியில்லையா? தான் கொடுத்த மூன்று வேதங்கள் அல்லாவின் கையில் இருந்தும் குரானை கொடுக்க அல்லா ஏன் 23 வருடம் எடுக்க வேண்டும். தவ்ராத், ஜபூர், இஞ்சில் வேதங்களை கொடுக்க அல்லா எத்தனை வருடம் எடுத்தார். உலகை ஆகுக என்று படைத்தவருக்கு, ஒரு தப்பான வேதத்தை கொடுக்க ஏன் இவ்வளவு கால தாமதம் ஆகியது. அவர் வேதத்தை கொடுத்த ஆள் அல்லாவை போல் அறிவும், ஆற்றலும் இல்லாதவரோ? அல்லாவின் வேதத்தை திருத்தினார்களா? அல்லது வேதத்தின் சில வார்த்தைகளை திருத்தினார்களா? புதிய வேதமாகிய குரானை அல்லா கொடுக்கும் போது அல்லாவின் கையில் இருக்கும் பழைய ஒரிஜினல் வேதங்களையும் கொடுத்திருக்கலாமே!! பழைய வேதத்துக்கும் புதிய வேதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை சரிப்பார்க்கலாமே!! பழைய வேதத்தை படித்த மக்கள் சொர்க்கத்துக்கு போவார்களா? அல்லா பாதுகாக்க வேண்டிய புத்தகத்தை ஏன் பாதுகாக்க தவறினார். அவர் பாதுகாக்க தவறியதால் தானே, பின்கால மக்கள் திருத்தப்பட்ட வேதத்தை படித்தார்கள். யாரெல்லாம் பழைய வேதத்தை திருத்தினார்கள், என்று ஏன் அல்லா புதிய வேதமாகிய குரானில் சொல்லவில்லை. வேதத்தை திருத்தியவர்களுக்கு என்ன தண்டனை அல்லா கொடுத்தார். சொர்க்கத்தையும், நரகத்தையும், இந்த இரண்டில் இருப்பவர்களையும் பார்த்த நபி, இந்த வேதத்தை திருதியவர்களை பார்த்ததாய் சொல்லவில்லையே! யப்பா!!! யப்பப்பா!! இன்னும் கேட்கலாம்!!! இவர்கள் தான் ஜல்ஜாப்பு விளக்கங்கள் கொடுப்பதில் வல்லவர்களாச்சே!! இஸ்லாம் இணையத்தில் இறக்கிறது. இஸ்லாம் இணையத்தால் இறக்கிறது!!!!!

பின்னூட்டமொன்றை இடுக