மேற்கோள்கள்


  தொல்லை கொடுப்பது, தோல்வி அடைவது, மீண்டும் தொல்லை  மீண்டும் தோல்வி…. தமது அழிவு வரை இது மக்களின் இலட்சியத்தை கையாள்வதில் ஏகாதியபத்தியவாதிகளும் பிற்போக்குவாதிகளும் மேற்கொள்ளும் தர்க்கம். அவர்கள் ஒருபோதும் இந்த தர்க்கத்திற்கு விரோதமாக செல்ல மாட்டார்கள். இது ஒரு மார்க்ஸிய விதி. “ஏகாதிபத்தியம் பயங்கரமானது” என்று நாம் கூறும்போது, அதன் இயல்பு ஒருபோதும் மாறாது. ஏகாதிபத்தியவாதிகள் தமது கசாப்புக் கடைக் கத்திகளை கீழே போடமாட்டார்கள். தாம் அழியும் வரை புத்தர்களாக மாறமாட்டார்கள் என்று நாம் கருதிகிறோம்.

     போராட்டம் தோல்வி, மீண்டும் போராட்டம், மீண்டும் தோல்வி மீண்டும் போராட்டம்… தமது வெற்றி வரை இதுதான் மக்களின் தர்க்கம். அவர்களும் இந்த தர்க்கத்திற்கு எதிராக செல்ல மாட்டார்கள். இது இன்னொரு மார்க்ஸிய விதி.. ருஷிய மக்களின் புரட்சி இந்த விதியைப் பின்பற்றியது. அப்படியே சீன மக்களின் புரட்சியும் இவ் விதியைப் பின்பற்றுகிறது.

‘பிரமைகளை வீசி எறிந்து போராட தயாராகுங்கள்’ என்ற தலைப்பில் மாவோ ஆற்றிய உரை. (14 ஆகஸ்ட் 1949).

மேற்கோள்கள்


கடவுட்கோட்பாட்டை, ஆத்திகர்களைவிட நாத்திகர்களே சரியாகப்புரிந்து கொள்கின்றனர்.

நீங்கள் கடவுளின் முழுநம்பிக்கையாளர் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் கடவுளின் விசுவாசிகளாக நீங்கள் இல்லை.

நான் உங்களுக்கு கடவுள் நம்பிக்கையாளனாகத் தெரியலாம். ஆனால் கடவுளுக்கு, அவனது விசுவாசத்திற்கு எதிரானவன் நான்.